Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வரலாற்றில் இன்று 24.10.2018

வரலாற்றில் இன்று 24.10.2018


அக்டோபர் 24  கிரிகோரியன் ஆண்டின் 297 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 298 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 68 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
1260 – எகிப்திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்பவனால் கொலை செய்யப்பட்டான். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனான்.
1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1795 – போலந்து-லித்துவேனியன் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
1801 – மருது பாண்டிய சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
1806 – பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன.
1851 – யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது.
1857 – உலகின் முதலாவது காற்பந்தாட்ட அணியான ஷெஃபீல்ட் காற்பந்தாட்ட அணி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் சேர்பியா வெற்றி பெற்றது.
1917 – ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.
1929 – கறுப்பு வியாழன்: நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகள் சரிவு.
1930 – பிரேசிலில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் “லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா” பதவியுல் இருந்து அகற்றப்பட்டார்.
1931 – ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
1935 – இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
1943 – நாடு கடந்த இந்திய அரசு முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
1945 – ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1960 – சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1964 – வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது.
1994 – கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
2003 – கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
2007 – சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் ‘சாங்-ஒன்று’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
பிறப்புகள்
1632 – ஆன்டன் வான் லீவன்ஹூக், டச்சு உயிரியலாளர் (இ. 1723)
1921 – ஆர். கே. லட்சுமண், இந்திய ஓவியர் (இ. 2015)
1932 – இசுடீபன் கோவே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)
1934 – அர்விந்த் ஆப்டே, இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1957 – இ. ஜெயராஜ், இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்
1971 – மல்லிகா செராவத், இந்திய நடிகை
1983 – தீபச்செல்வன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
1985 – வேனே ரூனி, இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்
1985 – வேனே ரூனி, ஆங்கிலேயக் கால்பந்தாட்டக்காரர்
இறப்புகள்
1601 – டைக்கோ பிரா, டேனிய வானியலாளர் (பி. 1546)
1801 – மருது பாண்டியர், இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
1870 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய, ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (பி. 1807)
1972 – ஜாக்கி ராபின்சன், அமெரிக்க பேஸ்பால் விளையாட்டு வீரர் (பி. 1919)
1994 – காமினி திசாநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)
2005 – றோசா பாக்ஸ், ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (பி. 1913)
2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினி அறிவியலாளர், உணரறிவியலாளர் (பி. 11927)
2013 – மன்னா டே, இந்தித் திரைப்படப் பாடகர் (பி. 1919)
2014 – எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)
2014 – தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்
சிறப்பு தினம்
சாம்பியா – விடுதலை தினம் (1964)
ஐக்கிய நாடுகள் தினம் (1945)

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading