NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு



சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம்  வெளியிட்ட அறிக்கை:
எஸ்.எஸ்.எல்.சி, எச்.எஸ்.சி, பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை உடைய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ50 ஆயிரத்துக்கும் மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். 
மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர் ஆவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை ெசன்னை சாந்தோம், தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். 
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தளவில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு ெசய்து ஓராண்டு உயிர்ப்பதிவேட்டில் உள்ளவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தினை ெபற்று விண்ணப்பிக்க வெண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ஏதுமில்லை. 
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ெபற்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித் தொகை எண் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive