NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க கல்வியாளர்கள் குழு தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பள்ளிகளின் நிலை தொடர்பாக வெளியாகும் எந்த புள்ளிவிவரமும் திருப்தியளிப்பதாக இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது ஒருபுறம் கவலையளிக்கும் நிலையில், அரசு பள்ளிகளின் மாணவர்கள் இடைநிற்றல் விகிதமும் வேகமாக அதிகரித்து வருகிறது.


தொடக்கப் பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் கடந்த ஆண்டில் 0.88 சதவீதமாகவும், இடைநிலைப் பள்ளிகளுக்கான இடைநிற்றல் விகிதம் 1.12 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட முறையே 8.8 மடங்கும், 2.24 மடங்கும் அதிகமாகும். இதுதவிர உயர்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 3.75 சதவீதமாகவும், மேல்நிலை வகுப்புகளின் இடைநிற்றல் விகிதம் 1.69 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவாகும்.

அரசு பள்ளிகளின் திறனையும், அவற்றின் ஆசிரியர்களின் கடமை உணர்வையும் நான் ஒரு போதும் குறைத்து மதிப்பிடமாட்டேன். கடமை உணர்வு கொண்ட சில ஆசிரியர்கள் தங்களின் சொந்தப் பணத்தைக் கொண்டும், தங்களின் முயற்சியில் நல்லெண்ணம் கொண்ட பெரிய மனிதர்களின் உதவிகளைப் பெற்றும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளைவிட சிறப்பான கட்டமைப்புக் கொண்டதாக மாற்றியுள்ளனர்.

எந்தெந்த அரசு பள்ளிகளில் எல்லாம் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வலிமையாக உள்ளனவோ, எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் கல்வித்தரம் சிறப்பாக உள்ளனவோ அந்த பள்ளிகளில் எல்லாம் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது; அவற்றில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இலவசங்களை வழங்குதல், நிதியுதவி அளித்தல், பிரசாரம் செய்தல் ஆகியவற்றின் மூலம் அரசு பள்ளிகளில் இடைநிற்றலை நிறுத்திவிடலாம் என்பது கனவாகவே இருக்கும். ஆனால், பயன் தராது.

எனவே, இடைநிற்றலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உத்திகளை வகுக்க கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கவேண்டும். அதன் பரிந்துரைகளை நேர்மையாக செயல்படுத்துவதன் மூலம் இடைநிற்றலை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
My Blogger TricksAll Blogger TricksLatest Tips and Tricks




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive