Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

நம் நாட்டின் ஏவுகனைகளுக்கு ஏன் #ப்ரீத்வி என பெயர் வந்தது தெரியுமா தங்களுக்கு.......

1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து
ஆப்கானிஸ்தானுக்கு  பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.

அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிருபர்களை ஆப்கனுக்கு அனுப்பி வைத்தது..

அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நிருபர்கள் கந்தகார் நகரை சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்...

அவர்கள் நடந்து சென்ற தெருவில் ஓரிடத்தில் ஒரு மண்மேடு காணப்பட்டது.
அந்த வழியாக வந்த ஒருவர் அந்த மண்மேட்டை பார்த்ததும் காரி உமிழ்ந்துவிட்டுச் சென்றார்.

மற்றொருவர் மண்மேட்டின் மீது சிறுநீர் கழித்துவிட்டுச் சென்றார்..
 அந்தப்பக்கமாக வந்த இரண்டு பெணகள் செருப்பை கழற்றி மண்மேட்டை அடித்துவிட்டுச் சென்றார்கள்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்த நிருபர்கள் என்னவென்று புரியாமல் நேராக ஹோட்டலுக்கு வந்தார்கள்.
அங்கு
ஹோட்டலில் வரவேற்பில் இருந்தவரிடம் தாங்கள் பார்த்த சம்பவத்தை ஆங்கிலத்தில் கூறி ஏன் என்று விசாரித்தார்கள்..!!

அந்த வரவேற்பாளரும்,
அது ஒருஇந்திய மன்னனின் சமாதியென்றும், அம்மன்னனின் மீதுள்ள ஆத்திரத்தை இங்குள்ள மக்கள் இவ்வாறு தீர்த்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினார்..!!

அம்மன்னன் வேறுயாருமல்ல...

*மாமன்னர் ஸ்ரீ பிருத்திவிராஜ் சௌஹான்*

இப்போது பாகிஸ்தானிலுள்ள சிந்துநதி பாயும் சிந்து மாகாணத்தை ஆட்சிசெய்த இரஜபுத்திர மாவீரன் தான் பிருத்விராஜ் சௌஹான்..

தன் பதினோராம் வயதிலேயே அரியணை ஏறிய பிரித்திவிராஜ்
குதிரை ஏற்றத்திலும் வில்வித்தையிலும் சிறந்த வீரன்..

தான் மிகவும் அழகாக இருப்பதாகத் தன் நண்பன் கூறியதால் வீரர்கள் அழகாக இருக்கக்கூடாதென்று தன் முகத்தில் தன் வாள் கொண்டு தளும்பை உண்டாக்கிக் கொண்டவர்..

பக்கத்து நாட்டை ஆண்டு கொண்டிருந்த தன் தாய்மாமன் ஜெயச்சந்திரன் முன்பகை காரணமாக தன் மகள் சுயம்வரத்திற்கு பிருத்விராஜ்ஜை அழைக்க மறுத்துவிட்டார்..

இதனால் கோபம் கொண்ட பிருத்விராஜ் சௌஹான் தன் தாய்மாமன் மகளின் மனதில் தான் இருக்கிறோம் என்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டார்.

மறுநாள் தன் குதிரையில் ஏறி தன்னந்தனியாக சென்று தன் மாமனின் அரண்மனைக்குள் நுழைந்து தன் காதல் மனைவி பட்டத்தரசி சம்யுக்தாவை புரவியில் கவர்ந்துகொண்டு வந்தார்..

இதனால் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன் பழிதீர்க்க காத்துக் கொண்டிருந்தார்..

இந்நிலையில் மேற்கிலிருந்து படையெடுத்து வந்த முஹம்மது கோரி என்ற துருக்கிய திருடனை இரண்டுமுறை தோற்கடித்து விரட்டினார்..

மூன்றாவது முறையாக சிந்து நதிக்கரையில் வேட்டையாடிக்கொண்டிருந்த பிரித்திவிராஜ் சௌஹானை...
அவனது  தாய்மாமன் ஜெயச்சந்திரன் உதவியால் இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் போது முஹம்மது கோரி கைது செய்தான்..

கைது செய்ததும் பிருத்விராஜ் மீதுள்ள பயத்தில் அவர் கண்களை குருடாக்கினான்..

குருடாக்கி  தன் நாட்டுக்கு அழைத்துச்செல்லும் வழியில் ஆப்கானிஸ்தான் காந்தகரில் ஒர் இரவு தங்கினான்.

அப்போது பிருத்விராஜ் ஜின் நண்பர் ...

தன் மன்னர் கண் தெரியவில்லை யென்றாலும் அர்ச்சுனன் போன்று வில்விடுவதில் சிறந்தவரென்று   கூறினார்

சோதிக்க விரும்பிய கோரி பிருத்விராஜ் ஜிடம் வில்லையும் அம்பையும் கொடுத்து சப்தம் வரும் திசையை நோக்கி அம்பு விடச் சொன்னான்..

தன் வீரர்களையும் ஒலி எழுப்பச்சொன்னான்..

கண் தெரியாத சூழ்நிலையிலும் மிகத்துல்லியமாக அம்பை விட்டார் பிரித்திவிராஜ் ..

அசந்துபோன கோரி ஒரு கட்டத்தில் சந்தோஷத்தின் உச்சத்தில் சபாஷ் என்று கத்தினான்..

இந்த சப்தத்திற்காக காத்துக்கொண்டிருந்த பிருத்விராஜ் சௌஹான் சப்தம் வந்த திசையை நோக்கி அம்பை விட்டார்...

கணப்பொழுதில் அம்பு பாய்ந்து முஹம்மது கோரி மாண்டுபோனான்..

கோரி மாண்டு போனதை கண்ட சகவீரகள் பிருத்விராஜ்ஜையும் அவர் நண்பரையும் கொன்று அங்கேயே புதைத்தனர்..

இன்றும் அவர்களை கொன்று புதைத்த மண்மேடு காந்தகர் நகரில் உள்ளது...

 எதிர்த்து துரோகத்தால் உயிர்நீத்த  மன்னன் *மாவீரன் பிருத்விராஜ் சௌஹான்...*

இந்திய மன்னர்கள் வீரத்தால் தோற்றவர்கள் அல்ல..!!
*துரோகத்தால் தோற்றவர்கள்..*

ஒவ்வொரு இந்திய மன்னனின் வரலாறும் நமக்கு இதையே உணர்த்தும்..

நமது வாஜ்பாய் அரசு இவர் நினைவாக உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணைக்கு *ப்ருத்திவி* எனப் பெயர் சூட்டியது....

#கூடுதல்_தகவல்.

பாகிஸ்தான் முதலில் அனுப்பிய ஏவுகனைகளின் பெயர் கோரி1. பின்பு இந்தியா கோரி யை கொன்ற காரணத்தாலும். பிரித்வீ என்ற பெயரில் பதில் அடிகொடுத்தது...

1 comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading