NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வரலாற்றில் இன்று 30-11-2018

நவம்பர் 30 (November 30) கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.
1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர்.
1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார்.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
1803 – எசுப்பானிய அமெரிக்கா, மற்றும் பிலிப்பீன்சில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி இடுவதற்கான மூன்றாண்டுத் திட்டத்துக்கான பயணம் பால்மீசு என்ற மருத்துவர் தலைமையில் எசுப்பானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
1803 – லூசியானா வாங்கல்: எசுப்பானியா லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தது. 20 நாட்களின் பின்னர் பிரான்சு இப்பிரதேசத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.
1853 – கிரிமியப் போர்: உருசியப் பேரரசின் கடற்படை வடக்கு துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் உதுமானியரின் படைகளைத் தோற்கடித்தன.
1872 – முதலாவது பன்னாட்டுக் காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.[1]
1936 – இலண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.
1939 – பனிக்காலப் போர்: சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசீன.
1947 – பலத்தீன் உள்நாட்டுப் போர் ஆரம்பம். இது இசுரேல் என்ற நாட்டை உருவாக்க வழி வகுத்தது.
1954 – அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்வீழ்கல் ஒன்று வீடு ஒன்றில் வீழ்ந்ததில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்படோசு விடுதலை பெற்றது.
1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாக்கித்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1971 – ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.
1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர அணுவாயுத ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் வட அயர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு வட அயர்லாந்து அமைதிப் பேச்சுக்களுக்கு ஆதரவாக உரையாற்றி, தீவிரவாதிகளை அவர் "நேற்றைய மனிதர்" எனக் கூறினார்.
1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
2000 – நாசா தனது 101-வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.
2012 – கொங்கோ குடியரசு, பிராசவில்லி நகரில் சரக்கு வானூர்தி ஒன்று நகரக் குடியிருப்புகளின் மீது வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1508 – ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (இ. 1580)
1667 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (இ. 1745)
1761 – சிமித்சன் டெனண்ட், ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1815)
1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரான்சிய ஓவியர் (இ. 1905)
1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய இயற்பியலாளர் (இ. 1937)
1869 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாலர் (இ. 1937)
1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
1888 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (இ. 1969)
1902 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1955)
1904 – ச. து. சுப்பிரமணிய யோகி, தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1963)
1923 – வி. என். ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1996)
1931 – ரூமிலா தாப்பர், இந்திய வரலாற்றியலாளர்
1943 – டெரன்சு மாலிக், அமெரிக்க இயக்குநர்
1945 – வாணி ஜெயராம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1947 – மோசசு நாகமுத்து, கயானா அரசியல்வாதி, எழுத்தாளர்
1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட நடிகை
1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்
1976 – மார்த்தா பர்கே, இத்தாலிய வானியலாளர்
1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை
1985 – கலே கியூகோ, அமெரிக்க நடிகை
1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2014)
1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க வீரர்
இறப்புகள் தொகு
1805 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் அரசர் (பி. 1753)
1830 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1752)
1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (பி. 1854)
1930 – மேரி ஹாரிசு ஜோன்சு, அமெரிக்க தொழிலாளர் செயற்பாட்டாளர் (பி. 1837)
1988 – எம். கே. றொக்சாமி, இலங்கை இசைக்கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1932)
1990 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917)
1992 – மீனாம்பாள் சிவராஜ், தமிழக சமூகப் போராளி, பெண்ணியவாதி (பி. 1904)
2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 12வது பிரதமர் (பி. 1919)
2013 – ரகுராம், திரைப்பட நடன இயக்குநர், நடிகர் (பி. 1948)
2013 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (பி. 1973)
2014 – ஜார்பம் காம்லின், இந்திய அரசியல்வாதி (பி. 1961)

சிறப்பு நாள்

தியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்)
விடுதலை நாள் (பார்படோசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
விடுதலை நாள் (தெற்கு யேமன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1967)
புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive