NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று உலக கழிப்பறை தினம்.!




19/11/2018*
*ஐ.நா அறிவிப்புக்கிணங்க, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 19-ம் தேதி, உலக கழிவறை தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.*
*கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் என்ற சர்வதேச அமைப்பு.* *சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.* *இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் 'உலக கழிப்பறை தினம்'* *கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.*
*திறந்த வெளியில் பயன்படுத்தும்* *கழிப்பறைமூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. யுனிசெப் சர்வே யின்படி* *இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. *இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த *போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன.*
*நிர்மல் பாரத் அபியான்.!*
*‘நிர்மல் பாரத் அபியான்’ என்னும் திட்டம் மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2022 -க்குள் ஊரகப் பகுதிகளில்* *சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு ஒழிப்பதை உறுதி செய்தல் தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக மத்திய, மாநில அரசாங்கம், பொதுமக்கள் கழிப்பறைக் கட்ட தேவையான மானியம் வழங்கி வருகிறது.*
*சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை விளக்க ஆண்டுதோறும் நவம்பர், 19அம் நாள் உலகக் கழிவறை நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive