NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. என தமிழக அரசு RTI இல் பதில்

தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPS திட்டத்தில் பணிபுரிந்துஓய்வு பெற்றுள்ள/ஓய்வுபெறும், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாகதமிழக அரசிடம் அரசாணை இன்னும் வெளியிடப் படவில்லயெனநிதித் துறை பதில் வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு*




*பழைய ஓய்வூதிய திட்டத்தில், (GPF/TPF) தமிழகத்தின் அரசுஅலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு*

*1. மாதாந்திர (அகவை முதிர்வு) ஓய்வூதியம்,*

*2. பணிபுரியும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்மரணமடைந்தால், அந்த ஊழியர்களின் கணவன் (அ) மனைவிக்குமாதந்தோறும் குடும்ப ‌ஓய்வூதியம்,*

*3. விருப்ப ஓய்வூதியம்,*

*4.இயலாமை ஓய்வூதியம்,*

*5.ஈடுகட்டும் (அ) இழப்பீட்டு ஓய்வூதியம்,*

*6. கட்டாய ஓய்வூதியம்,*

*7. இரக்க ஓய்வூதியம்*



என்னும் ஓய்வு பெறும் தன்மைக்கு ஏற்ப 7 வகையான

ஓய்வூதியம் நடைமுறையில் *தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகிறது.*

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தை சேர்ந்த *திரு.ஜெயப்பிரகாஷ்என்பவர் CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்,* தமிழகத்தின் அரசு அலுவலகங்களில்  பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மாதந்தோறும் வழங்கவேண்டுமென,  தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைஎண் (ம) நாளை குறிப்பிடவும்,  மேலும் இந்த அரசாணையின் நகலைவழங்கவும். என்று தமிழக அரசின் நிதித்  துறைக்கு 20.11.2018 நாளிட்டமனுவில் வரிசை எண் 1 முதல் 6 வரையான  தகவல்களை கோரி RTI 2005இன் கீழ் கடிதம் அனுப்பினார். நிதித் துறையின்  கடிதஎண்.61444/நிதி (PGC-1)/2018 நாள்:14.12.2018 என்ற கடிதத்தில்

*மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்னும் அரசாணைவெளியிடப்படவில்லை.  என பதில் வழங்கப்பட்டுள்ளது.*

CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழகத்தின் அரசு

அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசுஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ‌ஓய்வூதியம்,  விருப்ப ஓய்வூதியம், இயலாமை ஓய்வூதியம்ஈடுகட்டும்(அ)இழப்பீட்டு

ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம் மற்றும் இரக்க ஓய்வூதியம் என்னும்7

வகையான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுஇன்னும் அரசாணை வெளியிடவில்லை.



அரசாணை இல்லையென்பதை விட, இன்னும் அரசால் அரசாணைபிறப்பிக்கப்படவில்லை

என்பதே உண்மை.

இவண்

அ.சி.ஜெயப்பிரகாஷ்

இ.நி.உ.ஆ

அரூர் ஒன்றியம்

தருமபுரி மாவட்டம் .
  




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive