NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.01.19

திருக்குறள்


அதிகாரம்:அடக்கம் உடைமை

திருக்குறள்:128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

விளக்கம்:

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.

பழமொழி

Grasp all, lose all

பேராசை பெருநஷ்டம்

இரண்டொழுக்க பண்புகள்

*புது வருடம் மற்றும் புது பருவத்தில் எல்லோரும் போற்றும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இருக்கும் வகையில் நடப்பேன்.

*நான் வாழும் பகுதி மற்றும் சுற்றுப்புறம்  பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரம் உபயோகிப்பேன்.

பொன்மொழி

உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.

 - பாரதியார்

  பொது அறிவு

1. விலங்கியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 அரிஸ்டாட்டில்

2. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

 ஆடம் ஸ்மித்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு





1.100 கிராம் அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் 70 முதல் 90 சதவீதம் கலோரி ஆற்றல் கிடைக்கும். இதில் குறைந்த அளவிலான கொழுப்பு உள்ளது. நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்கள்,விட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அதிகம் உள்ளன.

2. இதில் பொட்டாசியம் உள்ளது. இதனை உண்பதால் ரத்த அழுத்தத்தை சீராக்கும். இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.

3. மற்ற கிழங்கு வகைகளை விட இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்திக்கு உதவிடும். இவை சரும ஆரோக்கியம், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும்.

English words and Meaning

Beget   பெறு, உண்டாக்கு
Boast தற்பெருமை
Border எல்லை,ஓரம்
Bulge.  வீக்கம்
Bushy. புதர்

அறிவியல் விந்தைகள்

தூக்கணாங் குருவி

*தங்கள் உள்ளுணர்வின் உந்துதலால் சிறப்பான கூடுகளைக் கட்டும் பறவைகளுள் தூக்கணாங்குருவி  முக்கியமான ஒன்று.
* பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பின்னும் தொங்கு கூடுகள் வியப்பை அளிப்பன.
* இது ஊர்க்குருவி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க்குருவியை ஒத்திருக்கும்.
* கூடுகள் நார்களால் பின்னிய தடிப்பக்கங்களுடன் சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும்.
* கூட்டின் பக்கங்களில் இக்குருவி களிமண் கட்டிகளை அப்பி அதில் மின்மினி பூச்சியினை ஒட்டி வைத்து கூட்டினை வெளிச்சம் ஆக்கி அழகு படுத்தும்.


Some important abbreviations for students

1. AC     - Alternate Current OR Air Conditioner

2. AIDS      - Acquired Immuno Deficiency Syndrome

நீதிக்கதை

_ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்.._

_அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்.._

_ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது.._

தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது.._

_ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.._

_அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..
_அவரை அழைத்துக் கொண்டு சென்றார்._முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்.._

_அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன.._
_அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.._

_எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது.._

_ஆனால், அந்தோ பரிதாபம்.._

_அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை.._

_எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.._ _அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.._ _அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.._

_அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.._ _அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.._

_ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்.._

_கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா.._

_இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது.._

_கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்.._
🐝

👇
அடுத்தவருக்கு செய்யும் உதவியே.. ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு..

பிறரை மகிழ்வித்து மகிழ்..

அதுவே சொர்க்கம்..

🐝

இன்றைய செய்திகள்
03.01.2019

* பள்ளிகளில் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்துவரக் கூடாது. மறுசுழற்சி செய்ய முடியாத தெர்மாகோல் போன்றவற்றை செய்முறை கற்றலில் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

* சூரியனை மிகவும் நீண்ட தொலைவில் சுற்றி வரும் "அல்ட்டிமா துலே' என்ற நுண்கோளின் அருகே சென்று, அமெரிக்காவின் "நியூ ஹொரைஸன்' விண்கலம் சாதனை படைத்துள்ளது.

* ஆதார் சட்ட விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில், மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளது.

* பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பயண அட்டை வழங்கப்படுவதாகவும், அதுவரை அவர்களது அடையாள அட்டையை வைத்து அனுமதிக்கவேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

*  ஒடிசாவில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ரக்பி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, மகாராஷ்டிராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
பட்டம் வென்ற தமிழக அணியில் சோழிங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி தமிழ் மொழி, துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Today's Headlines

🌹Do not take the snacks and lunch at schools in plastic box. The school authorities have ordered the chief authorities to inspect instructions not to use recyclable thermacol as a method of learning.

🌹 The New Horizons spacecraft of the United States has created a new record by moving  near  to "Altima Duke " which is a micro planet revolves farthest from the sun

🌹 The Central Government will come up with a fine of Rs 1 crore to the companies violating the Adarsh ​​Act.

🌹The Transport Corporation has advised students of the school to provide a free pass card in the form of a smart card untill they are permitted with their  ID card advised Transport corporation

🌹 In the final round of the 14-year-old Rugby event in Odisha, the Tamil Nadu team defeated Maharashtra to win the championship title.In
Tamilnadu team ,sozhinganallur ,panchayat union middle school student Tamilmozhi and Duraipakkam Government Higher Secondary School students participated 💐🤝

Prepared by
Covai women ICT_போதிமரமர




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive