NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்ணுக்கு பாய்கின்றது சந்திராயன்-2 விண்கலம்.!



இந்தியாவின் கனவு திட்டமான சந்திராயன்-1 வெற்றி அடைந்தது. மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதை உலக நாடுகளுக்கு கண்டுபிடித்து முதலில் கூறியது.
இதை நாசா விண்வெளி மையமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் சந்திராயன்-1 விண்கலம் செயல் இழந்தால், மீண்டும் இஸ்ரோ சார்பில் நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலம் செலுத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு முறை கால தாமதம் ஏற்பட்டால், தற்போது விரைவில் விண்ணுக்கு செல்ல இருக்கின்றது சந்திராயன்-2 விண்கலம். இது இந்தியாவின் சாதனை முயற்சியாகும்.
சந்திராயன்-1:
கடந்த 2008ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் நிலவில் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை சுற்றி மட்டுமே வந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும் தங்களின் விண்கலத்தை நிலவில் இறங்கியுள்ளன. இருந்தாலும்
இந்தியாவின் சந்திராயன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

சந்திராயன்-2:
சந்திராயன்-2 திட்டத்தில் நிலவில் செயற்கைகோளை இறங்கி ஆய்வு செய் இஸ்ரோ திட்டமிட்டது. முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக சந்திராயன் விண்கலம்-2 ஏவுதல் அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு:
சந்திராயன்-2 விண்கலம் அக்டோபருக்கு பதிலாக டிசம்பர் மாத்தில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1ஹெச் செயற்கைகோள் ஏவப்பட்ட போது, வெப்பத் தகடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டில் இருந்து செயற்கைகோளை பிரித்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாத நிலை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

ஜிசாட் 6செயற்கை கோள் இணைப்பு துண்டிப்பு:
இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணிற்கு ஏவப்பட்டது. தரைக்கப்பட்டு மையத்தில் இருந்து அதன் தொலைத்தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக்கோளை நிலை நிறுத்துவதிலும், தகவல்களை பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டிசம்பருக்கு தள்ளிவைக்க முக்கிய காரணம்:
மேற்கூறிய இரண்டு தொழில் நுட்ப கோளாறுகள் சந்திராயன்-2 திட்டத்திற்கு ஏற்பட கூடாது என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர். இதன்காரணமாக சந்திராயன்-2 விண்கலம் ஏவும் முயற்சி 2 முறையாக டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் இஸ்ரேலும் போட்டா போட்டி:
நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலும் வரும் டிசம்பர் மாதம் ஒரு விண்கலத்தை விண்ணுக்கு ஏவுகிறது. இதனால் நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளில் பட்டியலில் இஸ்ரேலுக்கு 4ம் இடம் கிடைக்குமா இல்லை இந்தியாவுக்கு 4ம் இடம் கிடைக்குமா என்று போட்ட போட்டி நடத்துகின்றன.

ஏப்ரலில் ஏவப்படுகின்றது.
சந்திரயான்-2 விண்கலம் வருகிற (2019)ஏப்ரல் மாத த்தில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சிவன் தகவல்:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவற்கான ஏற்பாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது மிகப் பெரிய திட்டம் என்பதாலும் பல்வேறு விதமான தொழில்நுட்ப யுக்திகளை கையாள வேண்டி உள்ளதாலும் தாமதம் ஆகி வருகிறது என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive