NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி, கல்லுாரிகளுக்கு 9 நாள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு

பொங்கலுக்கு முந்தைய நாளான, 14ம் தேதியும், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகை, வரும், 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான, 14ல், போகி அன்று விடுமுறை கிடைத்தால், சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி, வரும், 14ம் தேதி திங்கள்கிழமை, அரசு விடுமுறை என்றும், அதற்கு பதில், பிப்., 9ம் தேதி, சனிக்கிழமை வேலை நாள் என்றும், அரசு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இடையில், 18ம் தேதி மட்டும், வேலை நாளாக உள்ளது.அதாவது வரும், 11ம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளிகள் முடிந்தால், மறுநாள் சனிக்கிழமை, தேசிய இளைஞர் தினம் விடுமுறை; 13ம் தேதி, ஞாயிறு; 14ல், அரசு விடுமுறை; 15ல், பொங்கல்; 16ல், திருவள்ளுவர் தினம்; 17ல், உழவர் திருநாள் விடுமுறை.இதையடுத்து, வரும், 18ம் தேதி, வெள்ளிக்கிழமை மட்டும், பள்ளி, கல்லுாரிகளுக்கு வேலை நாளாகும். 19 மற்றும், 20ம் தேதி, சனி, ஞாயிறு என்பதால், 21ம் தேதி தான், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.இந்த நாட்களில், 18ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும், மாணவர்கள் விடுமுறை எடுத்தால், ஜன., 12 முதல், 20 வரை தொடர்ச்சியாக, ஒன்பது நாட்களுக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும்.அதனால், சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பெற்றோரும், ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்




2 Comments:

  1. 18,19.01.2019 REVISION EXAM IRUKKU
    Students leave edukka mudiyathu

    ReplyDelete
  2. 18,19.01.2019 REVISION EXAM IRUKKU
    Students leave edukka mudiyathu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive