NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல குரலில் அசத்தும் ஆசிரியை ஜோதிசுந்தரேசன்..



   சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியும், அரசின் நேரடி மான்யத்தில் இயங்குகின்ற பள்ளியுமான முத்தாத்தாள் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி  ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் மு.ஜோதிசுந்தரேசன்...இவர் கல்வியியலில் முதுகலையும்,ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.
இவர்    2004 முதல் பதினைந்து வருடமாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர்  தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு பல்வேறு பாலர் பட்டிமன்றங்கள் நிகழ்த்தியுள்ளார்.    கம்பராமாயணத் தலைப்பில் மாணவர்களை நடுவராகப் பங்குபெறச் செய்து நிகழ்த்தியுள்ளார். மாணவர்களைப் பல்வேறு போட்டிகளுக்கு அழைத்துச்சென்று பரிசுகள் பெறச்செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். .
நடனப் போட்டிகளுக்குப் பயிற்றுவித்து பரிசுகள் பெறச் செய்துள்ளார்.
 பலகுரல் பேச்சாளர், தொகுப்பாளர்,கவிஞர். கட்டுரையாளர் எனவும்
 250   மேடைகளில்  பட்டிமன்றப் பேச்சாளராக வலம் வந்துள்ளார்.
மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தை கருத்தில் கொண்டு
"பாடிப்படிக்கலாம் வாங்க"  என்ற மாணவர்களுக்கான நூலை  வெளியிட்டுள்ளார்.. இப்புத்தகமே இவரின் முதல் கனவு புத்தகம் ஆகும். எளிய முறையில் ஆங்கில இலக்கணத்தைப் படிப்போமா
என்ற ஆங்கில இலக்கண நூலை வெளியிட உள்ளார்.. மாணவர்களை பன்முகத் திறமையாளர்களாக, படைப்பாளர்களாக உருவாக்குவதே தனது இலட்சியம் என்கிறார்.. 2013 இல் தேவகோட்டை லயன்ஸ் சங்கத்தால் "கல்வி நாயகர்" விருது பெற்றுள்ளார். இவரது வளர்ச்சிக்கு காரணம் என்னவென்று கேட்டால் தனது மாணவர்களின் வளர்ச்சியே தனது வளர்ச்சி என்கிறார் புன்முறுவலாக...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive