NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்விச்சீர் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களிடத்தில் சமூக பங்கேற்பு மேலோங்கும். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்விச்சீர்
நிகழ்ச்சி கொண்டாட 313 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும்,இந்த கல்விச்சீர் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களிடத்தில் சமூக பங்கேற்பு மேலோங்கும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் 2019- 2020ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தயாரிப்பதற்கான கூட்டம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.. 
கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: 2018- 2019 ஆம் கல்வி ஆண்டில் 270 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ,43 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்விச் சீர் நிகழ்ச்சி ஜனவரி 31க்குள் நடத்தி முடித்திட வேண்டும்.கல்விச்சீர் நிகழ்ச்சி நடத்திடும் பள்ளிக்கு உரிய தொகை தொடர்புடைய வட்டார வளமையங்கள் மூலம் விடுவிக்கப் படும்...வட்டார அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யும் பொழுது முந்தைய பள்ளி சார் ஆவணங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.சமுதாய பங்களிப்பு சிறப்பாக உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் புரவலர்கள் மூலம் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடப் பாடுபடும் தலைமையாசிரியர் உள்ள பள்ளிகளைத் தெரிவு செய்திட வேண்டும்..வட்டார அளவில் வட்டாரக் கல்வி அலுவலர்,வட்டார மேற்பார்வையாளர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து பள்ளிகளை தெரிவு செய்திட வேண்டும்.தெரிவு செய்யப்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளூர் நன்கொடையாளர்கள்,அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் போன்றவை மூலம் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான நிதி அல்லது பொருட்களை கல்விச் சீராகப் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஜனவரி மாதத்திற்கான பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் வருகிற ஜனவரி 26 அன்று அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.குறிப்பாக இந்த கல்விச்சீர்நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களிடத்தில் சமூக பங்கேற்பு மேலோங்கும் என்றார்.
கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்
புதுக்கோட்டை (பொறுப்பு) ராஜ்குமார்,அறந்தாங்கி(பொ) கு.திராவிடச் செல்வம் ,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் இரா.இரவிச்சந்திரன்,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, பள்ளித் துணை ஆய்வாளர்கள் ,வட்டாரக் கல்வி அலுவலர்கள் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,புள்ளியல் அலுவலர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive