NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம் - குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கலாமா?


(S.Harinarayanan)


ப்ரிட்ஜ்... அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம். இப்போதெல்லாம் டி.வி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு ஃப்ரிட்ஜில் இட்லி மாவு தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்துவைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து, அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது ஏறக்குறைய எல்லார் வீட்டிலும் வழக்கம். ஆனால் அப்படி முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக் கூடாது என புதிய ஆய்வு கூறுகிறது.

சால்மோனெல்லா பாக்டீரியா  :

முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா (Salmonella)வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.

குளிர்சாதனப் பெட்டி :

கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பேக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.
சால்மோனெல்லா பேக்டீரியா வளர தட்ப வெப்ப நிலை சாதகமாக குளிர்சாதனப் பெட்டி தருகிறது. மிகவும் குளிர்ந்த ஈரப்பதம் உடைய தட்ப வெப்ப நிலையில் சால்மோனெல்லா பலமடங்கு பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கிறது.இதனால் பேக்டீரியா பலபடங்கு பெருகி நோய்களை உருவாக்க தயாராகிறது

அறை வெப்பம் :

சாதாரண அறைவெப்பத்தில்( 37டிகிரி) இந்த பேக்டீரியா வளர்ச்சி அடைய முடியாது. இதனால்அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வயிறு சம்பந்த நோய்கள் :

இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

குற்றம் :

ஐரோப்பா நாடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கக் கூடாது. அமெரிக்காவிலும் முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்.

சாதரண அறை வெப்பத்திலேயே வைத்து உடனுக்குடன் உபயோகியுங்கள். குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பயன்படுத்தும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் உடல் நலத்தை கெடுக்கக்கூடியதாகவே உள்ளது.Immuno compromised persons என்னும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக கர்ப்பிணிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி எடுத்துக்கொள்பவர்கள்,  பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது. ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்...’’





1 Comments:

  1. Super sir. Well done job. I like to many question in this type.so please uploaded this type of questions.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive