NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Diploma படித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை

கொல்கத்தாவில் உள்ள இந்திய எஃகு தயாரிப்பு நிறுவனமான, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL)- இல் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணிகள்: 
ஓவர்மேன் (S-3) 
மைனிங் சர்தார், (S-1) 
சர்வேயர் (S-3)

காலிப்பணியிடங்கள்: 
ஓவர்மேன் (S-3) - 19 
மைனிங் சர்தார், (S-1) - 52 
சர்வேயர் (S-3) - 01 
மொத்தம் = 72 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்: 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 14.02.2019 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2019 
ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 10.03.2019

வயது வரம்பு: (10.03.2019 அன்றுக்குள்) 
18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வுக்கட்டண விவரம்: 
1. ஓவர்மேன், S-3 என்ற பணிக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: ரூ.250 
2. மைனிங் சர்தார், S-1 என்ற பணிக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: ரூ.150 
3. சர்வேயர், S-3 என்ற பணிக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: ரூ.250
எஸ்.சி / எஸ்.டி / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை.
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை: 
சல்லான் மூலமும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமும் இத்தேர்விற்கான கட்டணத்தை செலுத்தலாம்.

கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம்: 
1. ஓவர்மேன் (S-3) என்ற பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 3 வருட டிப்ளமோ இன் மைனிங் இன்ஜினியரிங் என்ற படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மைனிங் சர்தார், (S-1) என்ற பணிக்கு,பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய மைனிங் சர்தார் என்ற சான்றிதழ் படிப்பை பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சர்வேயர் (S-3) என்ற பணிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய 3 வருட டிப்ளமோ இன் மைனிங் & மைன்ஸ் சர்வே என்ற படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் அத்துறையில் குறைந்தபட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 
சைல் (SAIL) நிறுவனத்தின் இணையதளமான www.sail.co.in - என்ற இணையத்தில் சென்று, அதில் 'careers' - என்ற லிங்க்-இல் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive