NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்

        'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்

         அஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.



மேற்படிப்பு உதவித்தொகை: லாரி ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

       அசோக் லைலேண்ட் மூலம் வழங்கப்படும் மேற்படிப்பு உதவித்தொகை பெற, அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பள்ளி துப்புரவு பணியாளர்களுக்குஇம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல்

          அரசு பள்ளிகளில் பணியாற்றும் 2,000 துப்புரவு பணியாளர்களுக்கு இம்மாத ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் ரூ.3,000 சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் 2012 நவம்பரில் துப்புரவாளர்கள் என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் 2,000 பேர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசாணை வெளியிடப்படும். இந்நிலையில் இம்மாதம் ஊதியம் பெறுவது குறித்து நேற்றுவரை எந்த உத்தரவும் இல்லை.


கல்விகடன் திட்டத்திற்கு கலாம் பெயர்; டில்லி அரசு அறிவிப்பு

          புதுடில்லி : பள்ளி கல்வியை முடித்து கல்லுாரியில் இணையும் மாணவ, மாணவியர்களுக்கு, ரூ 10 லட்சம் வரையிலான் கல்வி கடன்களை டில்லி அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

எனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்திருந்த கலாம்!

         நாட்டை வல்லரசாக்க வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்த அப்துல் கலாம், தனது இறப்புக்கு அரசு விடுமுறை விட்டு விடக் கூடாது என்றும், கூடுதலாக ஒருநாள் வேலை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டவர்தான் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
 

காந்தி வரிசையில் கலாம்!

       நாட்டிற்காக, தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்து, 24 மணிநேரமும் மாணவர்களுக்காக உழைத்தவர். அவரது கண்டுபிடிப்புகள், உலகம் அழியும் வரை, அவர் பெயர் கூறும். காந்தி, காமராஜர் போல், அனைவரது மனதிலும், கலாம் நீங்கா இடம் பிடித்துவிட்டார். மீண்டும் ஒருமுறை அவர் ஜனாதிபதியாகஇருந்திருந்தால், இந்தியா வல்லரசாகி இருக்கும்.பெஜித்தா, பி.காம்.,அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி.
நாட்டை நேசித்தவர்!

மாணவியர் உயர் கல்வியில் அக்கறை

         நீலகிரி மாவட்டம், ஊட்டி கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜன், 85, அப்துல் கலாமுடன், 1950-54ல், திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில் படித்தவர்.
 

சம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு

       சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். 
 

கலாம் படித்த பள்ளியில் மக்கள் திரண்டு அஞ்சலி

       ராமேஸ்வரத்தில், அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு, திரண்டுவந்த பொதுமக்கள், கலாம் படத்திற்கு மலர்களை துாவி, அஞ்சலி செலுத்தினர்.
 

எதிர்மறை வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் புதிய விளக்கம் அளித்த கலாம்

      பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஏன் அப்துல் கலாமை முன்னுதாரணமாக, தங்கள் வாழ்க்கையின் ஒளி விளக்காக கருதினார்கள்? என்பதற்கு மற்றொரு காரணம், தோல்வி, முடிவு, இல்லை போன்ற வார்த்தைகளை கூட ஏற்றுக்கொள்ளாமல் அவற்றுக்கு புதிய விளக்கம் அளித்த அவரது இயல்புதான் என்று கூறலாம்.

மருத்துவர்களுக்கு கலாம் படிக்கச் சொன்ன புத்தகம்

       பட்டமளிப்பு விழா ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது....அதில் அவர் மருத்துவத் துறையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களும் இந்த புத்தகத்தை நிச்சயம் படிக்க வேண்டும் என்றார்.
 

கலாமை நினைத்து உருகும் ஓவிய ஆசிரியர்: "தொலைபேசி உரையாடல் இன்றும் ஒலிக்கிறது'

      முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் கணேசன், இன்றும் தனது செவியில் அந்த உரையாடல் ஒலித்துக் கொண்டிருப்பதாக உருக்கமுடன் தெரிவித்தார்.
இவர், அப்துல் கலாமின் உருவத்தை பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு 32 ஓவியங்களாகப் படைத்தவர்.

கல்லூரி பேராசிரியரான கலாமின் ஓட்டுநர்!

       கார் ஓட்டுநராக தன்னிடம் பணியாற்றியவரை கல்லூரிப் பேராசிரியர் நிலைக்கு உயர்த்தியவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.
 

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

Funny guy! Are you doing well? ' - அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!
"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.

எங்கள் இதயங்களில் பிறந்திருக்கிறார்: மாணவர்கள் உருக்கம்

குழந்தை உள்ளம்; கருணை பார்வை, கள்ளம் கபடம் அறியா தங்கத் தலைவன் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை இழந்து கண்களில் செந்நீர் வடிய செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது மாணவர் உலகம்.மண்ணை விட்டு பிரிந்தது அவர் உயிர்தானே தவிர, அவர் உணர்வுகளுக்கு என்றுமே இறப்பில்லை. ஆம், கலாம் இறக்கவில்லை; ஒவ்வொரு இந்திய இளைஞர்களின் இதயங்களில் தன்னம்பிக்கையாய் பிறந்திருக்கிறார் என்கிறார்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள். கலாமின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்ற உறுதியுடன் பேசுகிறார்கள்...

தமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி

          முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. 'ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மாணவர்களும் கலாமும்

          விஞ்ஞானி, ஏவுகணை மனிதன், ஜனாதிபதி உள்ளிட்ட பல பெருமைகளுக்கு கலாம் சொந்தக்காரர் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மாணவர்களுடன் உரையாட வேண்டும் என்பதே இவரது விருப்பமான பணியாக இருந்தது என சொல்லாம். இந்தியாவில் பல்வேறு மொழி, இனம் இருந்தாலும் தேசம் முழுவதும் உள்ள மாணவர்களின் ரோல்மாடலாக தன்னை உயர்த்திக் கொண்டார். 

கலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு

        முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
 

கட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

         கலாமுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

       பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரு சில தனியார் பள்ளிகள் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.

"அப்துல்கலாம்"‬ என்றொரு தமிழன் - வாழ்க்கையும் கல்வியும்...

                     கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். 



ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.




டிவிட்டரில் அப்துல் கலாமின் கடைசி பதிவு! & கடைசி நிமிடம்!

 

      10 மணி நேரங்களுக்கு முன்பு இறுதியாக ட்வீட் செய்திருந்தார் அப்துல் கலாம். அதில், ' நான் ஷிலாங்கிற்கு செல்கிறேன். அங்குள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனெஜ்மெண்ட் கல்லூரியில் வாழ்த்தக்கது இந்த பூமி என்ற தலைப்பில் பேச உள்ளேன் " என்று பதிவிட்டிருக்கிறார்.

புதுக்கோட்டையில் சாதனை புரிந்த காமராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவருக்கு பாராட்டு.

      புதுக்கோட்டை காமாராஜபுரம் நகராட்சி உயா்நிலைப்பள்ளி மாணவரின் அறிவியல் படைப்பு மாவட்ட அளவில் முதல்பரிசு பெற்று மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க விருது கண்காட்சிக்கு தோ்வு பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட அளவில் 372 இளம் அறிவியல் புத்தாக்க விருதுக்குரிய காட்சி படைப்புகளில் கண்காட்சி புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு தற்போதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

         செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள ”தமிழக பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு” தற்போது வரை தமிழக அரசால் உறுதிபடுத்தப்படவில்லை. முறையான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருக்கவும்.


TNPSC Group 2 Key Answers 2015




TNPSC Group 2 Key Answers 2015 - Click Here

  1.  Theni IAS Academy TNPSC Group 2 Answer Key Updated.

    2. Sri Malar Academy TNPSC Group 2 Answer Key Updated.

    3. Vidiyal Arni TNPSC Group 2 Answer Key Updated.

    4. NR IAS Academy TNPSC Group 2 Answer Key Updated.

    5. Appolo Academy TNPSC Group 2 Answer Key Updated.

    6.  Mamallan TNPSC Group 2 Answer Key Updated.

    7. Minarva TNPSC Group 2 Answer Key Updated.

    8. Asian Visac TNPSC Group 2 Answer Key Updated.

    9. Radian Academy TNPSC Group 2 Answer Key Newly Updated.





ஆசிரியர் இடமாறுதல் விதிமுறைகளை மாற்ற திட்டம் 'கவுன்சிலிங்' தேதி அறிவிப்பு திடீரென தள்ளிவைப்பு.

       இடமாறுதல், 'கவுன்சிலிங்' விதிமுறை களுக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், கவுன்சிலிங் தேதி அறிவிப்பது, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல்: 3 ஆண்டுகள் நிபந்தனையை குறைக்க ஆலோசனை.

      தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அவர்கள் ஒரே பள்ளியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive