NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜிடிபியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டம்

           மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில்(ஜிடிபி) 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றுள்ளார். டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்த அவர் தனக்கு இத்தனை பெரிய பதவி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  
 
          இது குறித்து இரானி கூறுகையில், ஜிடிபியில் 3.8 சதவீதம் கல்விக்காக செலவிடப்படுகிறது. இந்த அளவை 6 சதவீதமாக உயர்த்துவதே எனது முதல் வேலை. (ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜிடிபியாகும் (Gross Domestic Product - GDP). மேலும் தேசிய ஆன்லைன் நூலகம் அமைப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பேன் என்றார். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரின் தலைமையில் உள்ள குழுக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை அளிக்குமாறு இரானி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேபினட் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தனது அலுவலகத்திற்கு வந்த இரானி மாநில வாரியான கல்வி நிலை குறித்த தகவலை அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். மாநில வாரியான கல்வி நிலை குறித்து அமைச்சர் கேட்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.




2 Comments:

  1. Good beginning!!!!! Hats off.... Tough years ahead though

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive