NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்


            விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு ஆசிரியர்களின் முக்கிய பணி.
 

சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்


         சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.

Latest 12th Study Material


Physics
Mr. P. Ilayaraja, PG.Asst., Panchanthikulam, Nagapatinam.

Physics 2nd Volume Full Study Material - Tamil Medium


For Download More Study Material Collection - Click Here

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?


          முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 

EMIS - Collections



Tutorials

How to EMIS - Photos Ready Offline with out Special Softwares -  
Click Here For Download Tutorial 5

How to EMIS - Photos Ready with Adobe Photoshop Software 
- Click Here For Download Tutorial 4


How to EMIS - Photos Ready within One Second via Online- 

அரசு தேர்வு மையங்களை தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு ..........நாளிதழ் செய்தி


எஸ்.எஸ்.எல்.சி....மற்றும் பிளஸ்டூ தேர்வு மையங்கள் தீர்மானிக்க கல்வி இணை இயக்குனர்கள் ஆய்வு.

மாநில அளவில் தேசிய திறனாய்வு முதல்நிலை தேர்வு 98 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

       உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத்தேர்வை எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள் எழுதினார்கள். மாநில அளவில் நடந்த முதல் நிலைத்தேர்வில் 98 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.


சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…


         அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் சிலிண்டருக்கான மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே…

அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை


      அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலிவ் எண்ணெய் நமக்கு எப்படி எல்லாம் பயன்படுகிறது !!


               நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. 
 

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


bananas-for-sleep             தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

           அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும்


            தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

EMIS - மாணவர்களின் புகைப்படத்தை இணையதள வசதி இல்லாத கணிணியில் Resize செய்வது எப்படி?

EMIS - Offline Photo Resize Tutorial
Step By Step Instruction Now Available.

Step  1:

        எந்த புகைப்படத்தை Compress செய்ய வேண்டுமோ அதை Select செய்து Right Click செய்யவும். திரையில் தோன்ற கூடிய Windows Picture Manager ஐ Select செய்ய வேண்டும்.


EMIS - Photos Ready within One Second in Online


             EMIS - பணிக்காக 100 மாணவர்களின் புகைப்படங்களை கூட,  ஒரே நொடியில்  தேவையான 200 x 200 pixel (Below 30 kb) அளவிற்கு Resize செய்து பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து Tutorial வெளியிட்டு உள்ளோம். நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இதை பயன்படுத்திப் பார்த்து தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

- என்றும் அன்புடன் பாடசாலை.


அறிவிப்போடு நின்றுபோன சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு - மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம்


           சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்து ஒன்றரை மாதங்களுக்குமேல் ஆகியும் அரசாணை வெளியிடப்படாததால் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை


            செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.

பணியாளர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு


         தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர் மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?


           வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. 
 

பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு


          பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்" திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

உயர் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஜெயலலிதா உறுதி


           மாநில அரசின் செயல் திட்டங்களில் உயர் கல்வி மேம்பாடு முதலாவதாக உள்ளது எனக் குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, மனிதவளத்தை மேம்பாடு அடையச் செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை நீக்க தடை ஐகோர்ட் கிளை உத்தரவு


               ஒரே பள்ளியில் பணிபுரியும் 10 ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்துக்காக பணி நீக்கம் செய்ய, ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
 

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்


பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. 
 

வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா

              வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 2013, - 23.11.2013 அன்று காலை 9.00 மணி அளவில் மணி நாயுடு மகாலில் நடைப்பெற்றது.

           அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு.சு.ரவி அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்கி கல்வி சார்ந்து அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.மதி அவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புறை வழங்கினார். வேலூர் மாவட்ட சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட அலுவலர் திரு. நடராஜன் அவர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள புதுமைகள் குறித்து பேசினார். மாணாவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

TNTET - 2012 Hall Ticket Link


          ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.

Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் DTEd முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை


                ஆசிரியர் பயிற்சி முடிவு வராததால் கூடுதல் மார்க் இருந்தும்ஆசிரியர் பயிற்சி முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை

பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை.


            மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவருக்கும் சம்பளம்: சுவிட்சர்லாந்து நாட்டில் புரட்சி திட்டம்


          பெர்ன் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்து நாட்டில், அனைவருக்கும், மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும், புரட்சிகரமான திட்டம் துவக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சி பள்ளி 10, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சுண்டல் மன்றக்கூட்டத்தில் தீர்மானம்


          மாநகராட்சி பள்ளியில் 10, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல் வழங்கப்படும் என்றும், சென்னையில் இயங்கும் 200 அம்மா உணவகங்களில் தலா 3 நவீன கேமராக்கள் வீதம் 600 கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்


              இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரே ஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூசா திட்டம் - 12 மாநிலங்களுக்கு உயர்கல்விக்கென தலா 120 கோடி!


             ரூசா திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த, 12 மாநிலங்களுக்கு தலா 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு


           தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு


               ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

RMSA High Schools Lab Asst Post Filled by Employment Seniority

          பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive