NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சொர்க்கமே என்றாலும் அரசுப்பள்ளி போல வருமா!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு!



ஏழை எளிய மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடும், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியிலும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 

அடிப்படை வசதியில்லா அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை திணிப்பதா? ராமதாஸ் கண்டனம்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இதுவரை ஆங்கில வழிக் கல்வி  அறிமுகப்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை உடனடியாகத் தொடங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தொலைநோக்கில்லாத, தாய்மொழி வழிக்கல்வி வாய்ப்பை பறித்து மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

"கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

       தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் "ஹாக்' செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள், மற்றவர்களின் "லாக் இன்' விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள். 

மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு !!!

        ‘ரயில் இப்போது மாம்பலம் ஸ்டேஷனில் நிற்கிறது’ என நவீன ரயில் பெட்டிகளில் எல்.இல்.டி திரை சொல்கிறது. ஆனால் ரயிலுக்குள் இருக்கும்  பயணிகளுக்குத்தானே இது பயன்படும்? சைதாப்பேட்டை ஸ்டேஷனில் நிற்கும் ஒரு பயணிக்கு தான் ஏறவேண்டிய ரயில் இப்போது மாம்பலம் ஸ்டேஷனில்  நிற்கிறது... இன்னும் 2 நிமிடத்தில் வந்துவிடும் என்பது தெரியுமா? 

வெளிநாட்டுக் கல்வி மாய மான் வேட்டையா?

           நடுத்தரக் குடும்பத்திலேயே, ‘என் பையன் உக்ரைன்ல படிக்கிறான்’, ‘ரஷ்யாவுல படிக்கிறான்’ என்று சொல்லும் அளவுக்கு வெளிநாட்டுக் கல்வி எளிமையாகி விட்டது. ‘50% மதிப்பெண் போதும். உலக ரேங்கிங் கல்லூரியில் குறைந்த செலவில், பகுதிநேர வேலை, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளோடு படிக்கலாம். முடிந்ததும் லட்சங்களில் மாதச் சம்பளம். குடியுரிமையும் வாங்கலாம்’ என்றெல்லாம் விளம்பரங்கள்் மயக்குகின்றன. ஆண்டுக்கு ஆண்டு வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இந்தக் கல்வியாண்டில் தமிழகத்திலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடு் செல்ல இருக்கிறார்கள். 

கோடை விடுமுறையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 1 மாத ஊதியம் 'கட்'

         கோடை விடுமுறையால், 15 ஆயிரம் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு, ஒரு மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், சிறப்பாசிரியர்கள் பலர், பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கண்ணீரும், கவலையுமாக பணிக்கு வந்து சென்றனர்.

'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை

         பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, இரண்டு பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும், 'பிட்' பிரச்னையில் சிக்கிய ஐந்து ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு, திரும்பப் பெறப்பட்டுள்ளது; ஏழு பேரும் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.
 

அரசு புது மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் தயார்

         தமிழக அரசு புதிதாக துவக்கியுள்ள, ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான எம்.சி.ஐ., பரிந்துரைத்து உள்ளது. மத்திய அரசு அனுமதி, சில நாட்களில் கிடைக்கும் என்பதால், திட்டமிட்டபடி, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.

சமச்சீர் கல்வியில் படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு கடினம்?

        அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், ’பேஸ்புக்’கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.


காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

           இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. 
 

விண்டோஸ் 10 இயங்கு தளம் வரும் ஜூலை மாதம் 29ல் அறிமுகம்

         மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 அடுத்த மாதம் அறிமுகம்: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

 

திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்

          ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமா என்று கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன  

ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி ரசீது வழங்கப்படாது: எச்டிஎஃப்சி வங்கி அறிவிப்பு

         எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி காகித வடிவிலான ரசீது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வாடிக்கையாளரின் செல்ஃபோன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மட்டும் தகவல் தெரிவிக்கப்படும்.

425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

             புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 425 ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு திங்கள் (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,500 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு!

        தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘தோல்விக்கு பின்னாலும் வெற்றி உள்ளது’; பிரதமர் மோடி

         “தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை தேற்றுங்கள்; அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். தோல்விக்கு பின்னாலும் வெற்றிக்கான ஒளி உள்ளது என்பதை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்,” என, பிரதமர் மோடி கூறினார்.

'பஸ் பாஸ்' என்னாச்சு?

          பள்ளிகளில் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு, பஸ் பாஸ் பெறும் மாணவர்களின் பட்டியல் வந்து சேராததால், பஸ் பாஸ் தயாரிக்கும் பணி துவங்கவில்லை. இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால், பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பயணிக்க, வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மின் கட்டண கூடுதல் வைப்பு தொகை:20 லட்சம் பேரிடம் ரூ.50 கோடி வசூல்

         மின் வாரியம், 20 லட்சம் பேரிடம், 50 கோடி ரூபாய் அளவிற்கு, கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூல் செய்துஉள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, வணிகம், தொழிற்சாலை என, மொத்தம், 2.60 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். புதிய மின் இணைப்பு பெறும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, ஒரு முனை, 200 ரூபாய்; மும்முனை, 600 ரூபாய் என, காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது.
 

தமிழகத்தில் 7 ஆண்டுக்கு பின் தடையில்லா மின் சாதனை!

           தமிழகத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, கோடையில் மின் தடை நீடித்த நிலையில், நடப்பாண்டு மின் உற்பத்தி நிறுவுத்திறன் அதிகரித்ததாலும், கோடைமழை கை கொடுத்ததாலும், தடையில்லா மின் வினியோகம் செய்து, வாரியம் சாதனை படைத்துள்ளது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வெட்டிக் கொலை

           திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவாரூர் விளமல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சி.வேணுகோபால்(56). இவர் கொரடாச்சேரியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார்.
 

74 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு: ஜூன் 15-க்குள் அறிவிக்கை வெளியாகும்

         74 பணியிடங்களுக்கான குரூப்-1 புதிய தேர்வு அறிவிக்கை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய பிரிவுகளில் 83 துணை மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
 

PAY CONTINUATION ORDER FOR ALL G.O.S' RELEASED

சென்டம் கோச்சிங் - வெற்றி பெற்ற மகிழ்வில்...

அன்புநிறைந்த பாடசாலை.நெட் நிர்வாக ஆசிரியர் அவர்களுக்கு,  வணக்கம்.
நலம். நாடலும் நலமே.

         கடந்த கல்வியாண்டு எல்லோருக்கும் நல்விதமாக அமைந்ததை வெளிவந்த  பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. அத்தேர்ச்சி முடிவுகள் மாணவர்களின்
எதிர்காலத்தை சிறப்பானதாக ஆக்கவும், பெற்றோரின் கனவுகளை நனவாக்கவும் வழிவகுத்ததென்றால், அதற்கு பாடசாலை.நெட் இணையதளமும் ஒரு காரணம்.



பள்ளிகள் இன்று திறப்பு

         அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை ( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.

 

ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள்

        அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், 'பேஸ்புக்'கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.
 

அரசு பணிக்கான நேர்காணல் வீடியோவில் பதிவு:முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி., அதிரடி

         அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். 
 

முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

        பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.
 

பட்டியல் வந்தாச்சு; பணி நியமனம் என்னாச்சுகலக்கத்தில் உதவி பேராசிரியர்கள்

      அரசுக் கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் ஏப்ரலில் வெளியிடப்பட்டது. 
 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தாமதமாகும்

          பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை வகுப்பு குறித்து உயர்கல்வி துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வராததால் கவுன்சிலிங் முடித்த முதலாமாண்டு மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பிறகே கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை

        மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

எளிதாக வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம்: கெடு தேதியையும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு

         வருமான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக, வருமான வரி தாக்கல் படிவம் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றே பக்கங்களில், மிகக் குறைவான நிரப்புதல் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. வழக்கமாக, ஜூலை 31க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி தாக்கல் படிவங்களுக்கான காலக்கெடு, இந்த ஆண்டு, ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 31க்குள் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive