![]() |
| வெற்றி நாள் |
A faithful friend is life's shield.
நம்பிக்கையான நண்பன் நம் வாழ்க்கையின் கேடயம் ஆகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.
2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொன்மொழி :
மனநிறைவு கொண்டவர்களுக்கே மகிழ்ச்சி சொந்தமாகும் - அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
01.உலகின் மிகப்பெரிய வளைகுடா எது?
02.மனித இரத்த வகைகளை கண்டுபிடித்தவர் யார்?
English words :
bustle-move in an energetic manner
consonance-agreement
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
Boat with baking powder
தேவையான பொருட்கள் :ஒரு பிளாஸ்டிக் குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவு கலர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.
செய்முறை :
குப்பியில் உள்ள மூடியில் சிறு துளை இட்டு அதில் உறிஞ்சு குழலை சொருகவும். குப்பியின் உள்ளே ஆப்ப சோடா போட்டு அதனுடன் சிவப்பு உணவு கலரை சேர்க்கவும் வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி நீர் நிரம்பிய தொட்டியில் இடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போல செல்வதைக் காணலாம்.
அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினை புரிந்து CO2 உற்பத்தி செய்யும். இது அதிக விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறும். இந்த விசை குப்பியை அதி வேகத்தில் அங்கும் இங்கும் இயங்க வைக்கும். சிவப்பு வர்ணம் தொட்டியில் உள்ள நீரில் இருந்து வேறுபடுத்தி அறிய சேர்க்கப் படுகிறது.
டிசம்பர் 16
நீதிக்கதை
இறக்கை இழந்தாலும்
ஒரு காட்டில் ஒரு அழகிய பசும்புல் நிலம் இருந்தது. அந்த நிலத்திலே அநேக வண்ண மலர்கள் பூத்திருந்தன. அவற்றில் ஓரமாக மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்களும் இருந்தன. அவற்றில் ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. அதில் வர்தினி என்னும் ராணி தேனீயும் பல வேலைக்கார தேனீக்களும் இருந்தன. அவற்றில் பபுல் எனும் தேனீ மிகவும் சுறு சுறுப்பான தேனீ. அதற்கு தேன் கிடைக்கும் இடங்கள் நன்கு தெரியும். தான் அறிந்த தகவலை மற்றவர்களுடன் எப்பொழுதும் பகிர்ந்து கொள்ளும் எனவே அத் தேன் கூட்டில் அனைவரும் பபுல் தேனீயை விரும்புவார்கள். அக்கூண்டில் இப்பொழுது புதியதாக லாரா என்று சொல்லக்கூடிய ஒரு தேனீ பிறந்தது. அது இந்த பபுல் தேனியை பார்த்து தானும் அதைப்போல சுறுசுறுப்பாகவும் மற்றவர்கள் விரும்பும் வண்ணமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியது. அதனால் அது அதிக தூரங்களுக்கு பறந்து சென்று தேன் இருக்கும் மலர்களை கண்டுபிடித்து வந்து சொல்வதுண்டு. அப்பொழுது அங்குள்ள முதிய தேனீக்கள் அதிக தூரம் போகாதே நீ இப்பொழுது சிறியவள். அதிக தூரம் போவது சில வேளைகளிலே ஆபத்தாக முடியும் என்று அறிவுரை கூறின. ஆனால் ஆர்வம் பகுதியில் லாரா தேனி அனேக இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தது. அப்படி ஒரு நாள் செல்லும் பொழுது பலத்த காற்று அடித்து அத்தேனீ கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்ததினால் அதன் இறக்கைகள் உடைந்து விட்டன இப்பொழுது அதற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை பிற மிருகங்களால் தனக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று சொல்லி ஒரு பெரிய இலையின் கீழ் அமர்ந்து கொண்டது. அங்கே இரண்டு நாள் குளிரில் நடுங்கி கொண்டிருந்தது. யாருக்கும் அது இருக்கும் இடம் தெரியவில்லை. அதிக மனவேதனை அடைந்தது பெரியவர்கள் அறிவுரையைக் கேட்காமல் போனேன் என்று வருந்தியது. அங்கிருந்தபடியே தன்னை சுற்றி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தது. அப்படி கவனிக்கும் பொழுது அது அனேக காரியங்களை கற்றுக் கொண்டது. எந்த நாட்களிலே எந்த மலர்களிலே மதுரம் இருக்கும் எந்த மலர்களில் மகரந்த துகள்கள் அதிகம் இருக்கும். எந்த மலர்களில் பூத்தேன் அதிகம் இருக்கும். காற்று எந்த திசை வீசும் போது நாம் பறக்க கூடாது. போன்ற காரியங்களை அதிலிருந்து அது கவனித்துக் கொண்டே இருந்தது. அதனால் அது மலர்களில் இருக்கும் மதுரம் மகரந்த துகள்கள் குறித்து அதிக அறிவடைந்தது. இப்பொழுது அங்கிருந்தபடியே தனது கூட்டில் இருந்து வரும் சிறு தேனீக்களுக்கு புதிய தேனீக்களுக்கு இளம் தேனீக்களுக்கு பபுல் தேனீக்கு கூட அது அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. இங்கு செல்லுங்கள் அப்படி செல்லுங்கள் இந்த மலரில் ஏறினால் அங்கு சிலந்தி பூச்சி இருக்கும் நம்மை பிடித்து உண்ணும் பூச்சிகள் உண்டு அவைகளில் சிக்கி விடாதீர்கள் என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. இப்பொழுது தேன்கூட்டியலிருந்த எல்லா தேனிகளும் இதனிடமிருந்து ஆலோசனை கேட்ட பிறகு தேன் எடுக்க செல்ல ஆரம்பித்தது அதனால் அந்த கூட்டில் தேன் மிகுதியாக அவைகளுக்கு கிடைத்தது.
நீதி: பெரியோர் ஆலோசனைகள் கேட்க வேண்டும்
நமக்கு ஒரு பிரச்சனை வந்தாலும் அதையே நினைத்து கலங்காமல் அதையே நமது திறமையாக மாற்ற வேண்டும்
இன்றைய செய்திகள்












































