Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2025

 

December 1 - World AIDS Day








திருக்குறள்: 

குறள் 684: 

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன் 
செறிவுடையான் செல்க வினைக்கு 

விளக்க உரை: 

இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

பழமொழி :

Rough seas make brave sailors. 

அலைகள் நிறைந்த கடல் தான் தைரியமான மாலுமிகளை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப் பெறுதல் மேலானது - அரிஸ்டார்ட்டில்

பொது அறிவு : 

01.மசாலா பொருட்களின் ராஜா என்று எதை கூறுவார்கள்?

கருமிளகு Black pepper

02. உலகின் மிக நீண்ட மண்டபம் கொண்ட கோவில் எது?

ராமேஸ்வரம்- Ramseshwaram

English words :

vigorous –strong, healthy, and full of energy. அதிக சக்தி மற்றும் ஆற்றல் நிறைந்த

தமிழ் இலக்கணம்: 

 வினை மரபுச் சொற்கள் என்பவை, ஒரு செயலைச் செய்யும்போது அதற்குப் பயன்படுத்த வேண்டிய சரியான வினைச்சொல் ஆகும். முன்னோர் பயன்படுத்திய வழக்கத்தின்படியே, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மரபுச் சொற்களில் இதுவும் ஒன்று
எ.கா : சோறு உண்
நீர் குடி
பால் பருகு
கவிதை இயற்று
மலர் கொய்
இலை பறி 

அறிவியல் களஞ்சியம் :

 இதய சுவர்கள் விரிவடையும் போது, இதய அறைகளில் வெற்றிடம் உருவாகிறது. அதனால் தாழ்வழுத்த மண்டலம் உருவாகி, அதனை நிரப்ப, உடலெங்கும் குருதி இழுக்கப்படுகிறது. இதனால் அறைகளில் உயர் அழுத்தம் உருவாகி, மீண்டும் வெளி அனுப்பப்படுகிறது. இப்படித்தான் இதயம் குருதி சுற்றோட்டத்தினை தொடர்ந்து அனிச்சையாகச் செய்கிறது. இந்த மாறுதலுக்கு அழுத்தமும், இதயச் சுவர்களில் ஏற்படும் மின் தூண்டலும் தான் காரணம்.

டிசம்பர் 01

உலக எய்ட்ஸ் நாள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது

நீதிக்கதை

 தேவதைக் காட்டிய வழி

ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும். 

அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும். 

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது. 

நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது. 

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான். 

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது. 

ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான். 

மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான். 

பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.

இன்றைய செய்திகள்

01.12.2025

⭐டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது முதலமைச்சர்.

⭐உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்: பொருளாதாரம், ராணுவத்தில் முன்னேற்றம்.

⭐வெனிசுலாவில் எந்த விமானமும் பறக்கக் கூடாது அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

🏀 இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.

Today's Headlines

⭐The Chief Minister announced that Tamil Nadu is ready to support Sri Lanka, which has been affected by Cyclone Titva.

⭐India ranks 3rd among the world's most powerful countries, with notable progress in its economy and military.

⭐US President Trump warns that no flights should fly over Venezuela. Trump has accused Venezuela of being responsible for drug trafficking in the United States.

 SPORTS NEWS 

🏀Pakistan beat Sri Lanka to win the T20 tri-series 

🏀 The ODI series between India and South Africa is going to be held. The first ODI between the two teams will be held in Ranchi, Jharkhand.

Covai women ICT_போதிமரம்

School Calendar December 2025

  



 

Employment News Nov 29 - 05 Dec 2025

School Calendar - December 2025

 

12th Tamil - Half Yearly Exam 2025 - Important Questions

 


12th Economics - One Word - Full Portion Test - Question Paper

 


12th Economics - One Word - Creative Questions

 


12th Maths - Volume I - Important 5 Marks Questions


12th Tamil - New Slow Learner - Study Material

12th Physics - Unit 1 - Centum Notes

 


10th Maths - Important 5 Marks, Graph & Geometry

 


10th Maths - Important 2 Marks Questions

TRUST - New Hall Ticket Proceedings by DGE!



 

All DEO's Meeting - DEE Proceedings

 

அரசு பள்ளி SMC ஆசிரியை கொலை

 

IMG_20251127_123609

 

2026 Government Holidays Tamilnadu

 


12th Accountancy - 2nd Half Portions Exam - Question Paper

 


12th Maths - Chapter 11 - Question Paper

 


12th Maths - Model Exam 1 - Question Paper

 


12th Chemistry - Full Portion Test 1 - Question Paper

 


12th Physics - Unit Test 1 - Electrostatics - Question Paper

 


12th Accountancy - Full Portion Test - Question Paper


10th English - Grammar - Study Material

 


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive