தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு நாளை (நவ.29) காலை 10 முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் தேர்வுத் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் காலை 9.30 மணிக்கு தங்களுக்கான தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறையிலும் 20 பேர் மட்டுமே தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஹால் டிக்கெட் மற்றும் பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களை ஒப்பிட்டுப் பார்த்து தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். தேர்வர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வினாத்தாள் புத்தகத்தில் விடைகளை குறிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...