Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

DSE & DEE - THIRAN - மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - Directors Proceedings

6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing ) இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்

பொருள்:

பள்ளிக் கல்வி -2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 01. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing )இயக்கத்தை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - தொடர்பாக.

2025-26ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கம் ஜூலை மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு THIRAN என்னும் முனைப்பு இயக்கம் தொடங்கிய முதல் 4 வாரத்திற்கு அடிப்படைக் கற்றல் விளைவுகள் பகுதி கற்பிக்கப்பட்டு, அதனடிப்படையில் காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில், அதிகப்படியான மாணவர்கள் இன்னமும் அடிப்படை கற்றல் விளைவுகளில் (BLO) தேர்ச்சி அடையவில்லை என்பது தெளிவாகிறது. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், அடிப்படை கற்றல் விளைவுகள் (Basic Learning Outcome) பகுதியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற இன்னமும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது.

இதனை சார்ந்து பின்வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளித் வழிமுறைகளை அனைத்துப் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, நடைமுறைப்படுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவறுத்தப்படுகிறார்கள். தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்:

1. திறன் இயக்கத்திற்கு தேர்வான அனைத்து மாணவர்களும், இந்த கல்வியாண்டில் திறன் இயக்கம் முடிவடைவதற்குள் அடிப்படை கற்றல் விளைவுகளில் (BLO) தேர்ச்சி அடைவதை உறுதி செய்தல் வேண்டும்.

2. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் திறன் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் கற்றல் நிலை குறித்தும் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.

3. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் திறன் வகுப்புகள் சரியான கால அட்டவணையின் படி நடைபெறுவதை உறுதி செய்து, வாரம்தோறும் ஆசிரியர்களுடன் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து ஆய்வு செய்தல் வேண்டும்.

4. பள்ளிகளில் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ள "உயர் தொழில்நுட்ப ஆய்வகம்" (Hi tech lab) மற்றும் "திறன் மிகு வகுப்பறைகளை" (smart classroom) மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும்.

5. மாதாந்திர மதிப்பீட்டின் முடிவுகளை ஆராய்ந்து, அதிக கவனம் செலுத்த வேண்டிய வகுப்புகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திடல் வேண்டும். ஆய்வு அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள்:

1. முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பள்ளிப்பார்வை 2.0 செயலி மூலம் வாரத்தில் 2 நாட்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

2. வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பள்ளிப்பார்வை 20 செயலி மூலம் வாரத்தில் 3 நாட்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

3. மாணவர்களின் தலைமை முன்னேற்றநிலை குறித்து மாதந்தோறும் ஆசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்திட வேண்டும்.

4. திறன் மாணவர்களின் கற்றல் நிலை குறித்து கண்காணிக்க "Dashboard" உருவாக்கப்பட்டு, அனைத்து கண்காணிப்பு அலுவலர்களின் "EMIS Login" இல் வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நடைமுறைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

5. திறன் இயக்கம் ஒரு இலக்கு சார்ந்த திட்டம் என்பதை உணர்ந்து, இந்த கல்வியாண்டிற்குள் அனைத்து மாணவர்களும் "அடிப்படை கற்றல் விளைவினை" அடைந்திடுவதை உறுதி செய்தல் வேண்டும்.

இணைப்பு: திறன் - Dashboard - வழிகாட்டு நெறிமுறைகள்

👇👇👇 

PDF Download Here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive