Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா.. டிசம்பர் 1 முதல் இந்த சேவை கிடைக்காது.. இதோ முழு விவரம்..

sbi-mcash1-1764322632 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் டிசம்பர் 1 முதல் ஒரு முக்கிய சேவையை நிரந்தரமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது பயனர்களுக்கு வழங்கி வந்த mCASH எனப்படும் பணப் பரிவர்த்தனை சேவையை டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. எனவே வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் SBI மற்றும் YONO Lite செயலிகளில் mCASH மூலம் பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த வசதியை இதுவரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளில் சில மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். எம்கேஷ் (mCASH) என்பது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யாருக்கும் பணம் அனுமதித்த ஒரு வசதி ஆகும். இதற்கு பயனாளரை முன்பே பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மொபைல் நம்பர் அல்லது மின்னஞ்சல் ஐடியை மட்டும் பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.

சில அவசர தேவைகளுக்குச் சிறிய தொகைகளை அனுப்ப இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல் இதில் பணம் பெறுபவருக்கு ஒரு பாதுகாப்பான இணைப்பு மற்றும் 8 இலக்க கடவுச்சொல் கிடைக்கும் அதை பயன்படுத்தி அவர்கள் தங்கள் வங்கி கணக்கில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற சூழலில் தான் இந்த வசதி நவம்பர் 30-ம் தேதிக்கு பிறகு நிறுத்தப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் அதற்குப் பதிலாகச் சிறந்த பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட கட்டண முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதாவது mCASH சேவை நிறுத்தப்பட்ட பின்பு வாடிக்கையாளர்கள் BHIM SBI Pay (யுபிஐ), IMPS மற்றும் பிற டிஜிட்டல்முறைகளைப் பயன்படுத்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

mCASH நிறுத்தத்திற்கான காரணம்

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும் மாற்றுவதே இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக பழைய தொழில்நுட்பத்தில் இயங்கிய mCASH சேவைக்கு பதிலாக தற்போது நவீன மற்றும் மேம்பட்ட கட்டண முறைகளான யுபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என எஸ்பிஐ வங்கி ஊக்குவிக்கிறது. அதுவும் இந்த மாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைகள் மேலும் பாதுகாக்கப்படும் என்று வங்கி நம்புகிறது.

முன்பு கூறியது போல் mCASH சேவை நிறுத்தப்பட்டாலும் BHIM SBI Pay (UPI App), IMPS போன்ற பல பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண முறைகளை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. அதுவும் யுபிஐ மூலம் வங்கிக் கணக்கு எண் அல்லது க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி நொடிப்பொழுதில் பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறைகள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் 24/7 செயல்படக்கூடியவை.

இதுவரை mCASH பயன்படுத்தி எளிதாகப் பணம் அனுப்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றம் தொடக்கத்தில் சில சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் அவர்கள் இனி யுபிஐ அல்லது ஐஎம்பிஎஸ் போன்ற புதிய முறைகளுக்கு மாற பழகிக் கொள்ள வேண்டும். குறிப்பாக வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதே வங்கியின் முதன்மை நோக்கம் என்பதால், இந்த மாற்றம் ஒரு அவசியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive