பெரம்பலுார்: அரியலுார், ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் வித்யாமந்திர்
மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், 30 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்து,
துாவும் நிகழ்ச்சி நடந்தது.
அரியலுார் மாவட்டத்தில், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக கோவிந்தபுரம்,
வித்யாமந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், 30 ஆயிரம் விதைப்
பந்துகளை உருவாக்கியுள்ளனர்.
விளா, வேம்பு, சரக்கொன்றை, புங்கை, வாகை, புளி மரங்களின் விதைகளை கொண்டு, விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.
கோவிந்தாபுரம் சுக்கான் படையாச்சி ஏரியில், நடந்த விதை பந்துகள் துாவும்
நிகழ்ச்சியை, அரியலுார் கலெக்டர்,லட்சுமிபிரியா துவங்கி வைத்தார்.
அவர் கூறுகையில், ''அரசு பள்ளி மாணவ - மாணவியரை கொண்டும், விதைப் பந்துகள்
உருவாக்கி, ஏரி, குளங்கள், அரசின் புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில்
நடுவதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது,'' என்றா







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...