ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!! இனி வரும் காலங்களில்
அனைத்து கல்வித் துறை சார்ந்த தகவல்களும் வலைதளத்தில் பதியவேண்டி உள்ளது.
ஆசிரியர்கள் இன்னும் கணினி பழக தெரியவில்லை வலைதளம் செல்ல தெரியவில்லை என
தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் இன்னும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று
இவற்றையெல்லாம் அப்லோட் செய்து கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டுகிறோம்.
ஏனெனில் இனிவரும் காலம், எல்லா நிகழ்வுகளும் நிர்வாகங்களும் இ கவர்னன்ஸ்
என்னும் இன்டர்நெட் வழி நிர்வாகமாகவே அமைய உள்ளது.. எனவே தங்களை இன்னும்
கணினி இயக்க தெரியாமல் ஆசிரியர்கள் இருக்கவேண்டாம்... உடனடியாக தங்களுக்கு
தெரிந்தவர்களிடம் அல்லது தங்கள் மகன் மகள் உறவினர் இடமோ அல்லது கணினி
கற்பிக்கும் நிலையங்களுக்கு சென்றோ கணினியை கையாள எம்எஸ் ஆபீஸ் என்னும்
படிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...ஓய்வு நேரத்தில் மாலையில் ஒரு
மணிநேரம் இதற்கென செலவு செய்யுங்கள்... ஏறக்குறைய 60 நாட்களில்
அத்தியாவசியமான கணினி பணிகளை நமக்கு நாமே செய்ய தயாராகிக் கொள்வோம்.
அடுத்தவரை நம்பி இனி இருக்கும் நிலையில் இனி பணியை செய்வது என்பது இயலாத
காரியமாக அமையும் ....எனவே ஆசிரியர்கள் இன்னும் தாமதிக்காமல் வயது
வித்தியாசம் பாராமல் இவ்வளவு வயதாகிவிட்டது இனியும் என்ன என சங்கோஜப்படாமல்
உடனடியாக கணினி மையங்களுக்குச் சென்று எம்எஸ் ஆபீஸ் என்ற கோர்ஸை
முடியுங்கள் ....உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளுங்கள் please update
your self as a computer knowledged person.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...