ஆசிரியர் தேர்வு வாரியம்: இடைநிலை ஆசிரியர் பணி சார்ந்து இன்றைய (31.05.2025) பத்திரிகைச் செய்தி
ஆசிரியர்
தேர்வு வாரிய அறிவிக்கை எண் . 01/2024 நாள் 09.02.2024 ன் படி , இடைநிலை
ஆசிரியர் தெரிவிற்கு பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு
போட்டித்தேர்வு 2107.2024 அன்று நடத்தப்பட்டது . மாண்பமை சென்னை
உயர்நீதிமன்றத்தினால் வழக்கு எண் . WMP.No. 16353/2024 ன்மீது 18.03.2025
அன்று வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பாணையின்படி தமிழ் வழித்
தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்பு
இவ்வாரியத்தால் 2.04.2025 அன்று வெயிடப்பட்டது . தேர்ச்சி பெற்ற
பணிநாடுநர்களிலிருந்து அறிவிக்கையின்படி , 1 : 1.25 என்ற விகிதத்தில்
சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் 30.01.2025 அன்றும் கூடுதல் சான்றிதழ்
சரிபார்ப்பு பட்டியல் 13.05.2025 அன்றும் இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டது.
இப்பட்டியலிகளின்படி
, 2.05.2025 முதல் 14.05.2025 வரையிலும் மற்றும் 16.05.2025 அன்றும்
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது . மேலும் , சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து
கொள்ளாத பணிநாடுநர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு 22.06.2025
அன்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்
தொடர்ந்து , சான்றிதழ் சரிபார்த்தலின் போது பணிநாடுநர்கள் சமர்ப்பித்த
கல்விச் சான்றிதழ்கள் , ஆசிரியர் தகுதிச் தேர்வு சான்றிதழ் மற்றும் இதர
முக்கிய ஆவணங்கள் , பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும்
தெரிவு நடைமுறை விதிகளை பின்பற்றி தகுதிவாய்ந்த பணிநாடுநர்களைக் கொண்டு
இனச்சுழற்சி மற்றும் இதர அரசாணைகளின்படி தமிழ்வழி காலிப்பணியிடங்களுக்கு
மட்டும் தற்காலிகத் தெரிவர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று (
31.05.2025 ) வெளியிடப்படுகிறது.
தற்காலிகத்
தெரிவு செய்யப்பட்டுள்ள பணிநாடுநர்களுக்கு அவர்கள் சார்ந்த பயன்பாட்டுத்
துறைகளின் மூலம் பணிநியமன ஆணைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
PROVISIONAL SELECTION LIST - Download here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...