ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக
செப்டம்பர் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி 2011ம்
ஆண்டில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசாணைக்குப் பிறகு
நியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது
என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது எழுந்துள்ள சந்தேகம்
என்னவெனில் 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அரசாணை
வெளியிட்ட பிறகு இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
பெற்ற ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் இருந்து தொடக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களிருந்து நடுநிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு
கட்டாயம் எழுத வேண்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
ஆசிரியர்
தகுதித் தேர்வு கட்டாயம் எனில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இரண்டு
ஆண்டுகளில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று கட்டாயம்
ஆக்கப்பட்டுள்ளதா என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது
இக்குழப்புத்தினை விரைவில் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஆசிரியர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது
ஏனென்றால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கடைசி தேதி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடுவதால் அதற்குள்ளாக பள்ளிக்கல்வித்துறை ஒரு தெளிவான விளக்கத்தை அளக்கும் பட்சத்தில் தற்போது பணியில் உள்ள பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...