அக்டோபர் 5, 6ஆம் தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்
செய்தி வெளியீடு எண்: 2352,
நாள்: 03.10.2025
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, தாயுமானவர் திட்டத்தில் அக்டோபர் 5, 6ல் முதியோர் , மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை முன்னிட்டு அக்டோபர் மாதத்தின் 5 மற்றும் 6 தேதிகளில் வீடு தேடி குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர்,
சென்னை மண்டலம்
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள:
tndiprnews tndipr tndipr TN DIPR www.dipr.tn.gov.in TNDIPR, Govt. of Tamil Nadu









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...