Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7.5 லட்சம் அமெரிக்க அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம்

 

7½ லட்சம் அமெரிக்க அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம்

செலவின மசோதா நிறைவேறுவதில் சிக்கல் : அமெரிக்க அரசு நிர்வாகம் 2-வது நாளாக முடக்கம். 7½ லட்சம் அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம்.

1. அமெரிக்க அரசின் செலவின மசோதா நிறைவேற்றப்படாததால், அரசு நிர்வாகம் 2-வது நாளாக முடங்கியுள்ளது.

2. இதனால் சுமார் 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

3. அமெரிக்காவில் அரசு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்காக செலவின மசோதா தாக்கல் செய்யப்படும்.

4. ஆளும் குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தாலும், செலவின மசோதா நிறைவேறத் தேவையான 60 சதவீத வாக்குகளை செனட் சபையில் பெறவில்லை.

5. இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதரவு தேவை.

6. ஜனநாயகக் கட்சியினர் மலிவு விலை பராமரிப்பு சட்டத்தின் கீழ் வரும் சுகாதார காப்பீடு பிரிமியங்களுக்கான சலுகைகளை வழங்கக் கோரினர்.

7. குடியரசுக் கட்சி மறுத்ததால், செலவின மசோதாவுக்கு ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

8. செலவின மசோதா நிறைவேறாததால் அரசு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தடைபட்டு, துறைகள் முடங்கின.

9. அத்தியாவசிய துறைகளான ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, விமான சேவை, அறிவியல் ஆய்வு, வங்கிகள் மட்டுமே இயங்கும்; எனினும் ஊழியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்படும்.

10. தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பார்வையாளர் மையங்கள் போன்ற அத்தியாவசியமற்ற துறைகள் மூடப்பட்டு, 7.5 லட்சம் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

11. இந்த முடக்கத்தால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

12. நியூயார்க் சுரங்கப்பாதை மற்றும் ஹட்சன் சுரங்க திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 பில்லியன் டாலர் நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

13. அரசு நிர்வாக முடக்கத்தால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; சுற்றுலா தலங்களுக்குச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

14. இயங்கும் துறைகளிலும் பணியாளர்கள் குறைவாக இருப்பதால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

15. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து, நாட்டின் பொருளாதாரத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

16. ஆளும் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் மசோதா உடனடியாக நிறைவேறும் வாய்ப்பில்லை.

17. நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

18. நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடுவதால், இந்த முட்டுக்கட்டை மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனத் தெரிகிறது.

19. இந்த முடக்கத்துக்கு டிரம்பின் செயல்பாடுகளே காரணம் என ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

20. அமெரிக்க பணியாளர் தொகுப்பை மறுவரையறை செய்யவும், எதிர்ப்பாளர்களைத் தண்டிக்கவும் இந்த முடக்கத்தை டிரம்ப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21. குறிப்பாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மசோதா தோல்வி

அமெரிக்காவின் செலவீனங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவீனங்களுக்கு நிதி அங்கீகரிக்கப்படும்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மேலவையில் செலவீனங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு தோல்வி அடைந்துள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 55% வாக்குகளும், எதிராக 45% வாக்குகளும் பதிவாகியுள்ள்ன. இந்த மசோதா நிறைவேற 60% வாக்குகள் தேவை.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

இதனால், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (அக்டோபர் 1) நள்ளிரவு 12.01 மணிமுதல், அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து தொடங்கி சிறு வணிக கடன் அலுவலகங்களை வரை அனைத்தும் பாதிக்கப்படும்.

7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு

இந்த மசோதா நிறைவேறாததால், அத்தியாவசியமற்ற பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடுமையாக பாதிப்படுவார்கள். இவர்களை டிரம்ப் அரசு பணிநீக்கம் செய்யும் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்பும். பல அலுவலகங்கள் நிரந்தரமாக மூடக்கூடும்.

கல்வி மற்றும் சேவைத் துறைகளைச் சார்ந்த 90 சதவிகித அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.

சம்பளம் கிடைக்காது

ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள், விமானக் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசியப் பணியாளர்களாக கருதப்படுவர். இவர்கள் தங்களின் பணிகளை தொடர்ந்து செய்வார்கள்.

இருப்பினும், செலவீன மசோதா நிறைவேறும் வரை இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது.

ஏழை மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிதி உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும்.

மசோதா தோல்விக்கான காரணம்?

ஜனநாயகக் கட்சியினரும் வாக்களித்தால் மட்டுமே செலவீனங்களுக்கான மசோதாவை டிரம்ப் அரசால் நிறைவேற்ற முடியும்.

இந்த நிலையில், செலவீன மசோதாவில் அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தை நீட்டிக்கக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு மானியம் வழங்கும் சட்ட மசோதா இந்தாண்டுடன் நிறைவுபெறுகிறது. இதனை நீட்டிக்க ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்திய நிலையில், டிரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன்காரணமாக செலவீன மசோதாவை தோல்வியடைய செய்துள்ளனர்.

முதல்முறை அல்ல

டிரம்ப்பின் கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அமெரிக்க - மெக்சிகோ இடையே எல்லைச் சுவரைக் கட்டுவதற்கு டிரம்ப் கோரப்பட்ட நிதியை வழங்க மறுத்து, செலவீன மசோதாவை தோல்வியடைய செய்தனர். அப்போது, 35 நாள்கள் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது.

2013 ஒபாமா நிர்வாகத்தில் ’ஒபாமா கேர்’ என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து செலவீனங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், 16 நாள்கள் நிர்வாகம் முடங்கியிருந்தது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive