Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.12.2025








திருக்குறள்: 

குறள் 463 

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

விளக்கவுரை:

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

பழமொழி :

Broken trust is like a cracked mirror. 

உடைந்த நம்பிக்கை , விரிசல் விழுந்த கண்ணாடியைப் போன்றது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

கற்பவர்களிடம் கற்றுக் கொள்வதை விட கற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் கற்றுக் கொள்

      – காரல் மார்க்ஸ்

பொது அறிவு : 

01.மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது? 

ஆந்திரப் பிரதேசம் 
Andhra Pradesh

02.சந்திரனின் மறுபக்கத்தை முதலில் புகைப்படம் எடுத்த விண்கலம் எது?

  லூனா 3 -Luna 3

English words :

replenishment-refill

conceited-proud

தமிழ் இலக்கணம்: 

 அரைப்புள்ளி (;) என்பது இரண்டு நெருங்கிய தொடர்புடைய முழுமையான வாக்கியங்களை இணைக்கப் பயன்படும் ஒரு நிறுத்தற்குறி; இது கமா மற்றும் முற்றுப்புள்ளி இரண்டையும் விட சற்று அதிக இடைவெளியைக் குறிக்கும்; 
எ: கா   "புயல் வீசியது; மரங்கள் சாய்ந்தன" (ஒரு கருத்தை மையப்படுத்த); "அவன் சொன்னான்; நாங்கள் கேட்டோம்". 
"மழை பெய்யத் தொடங்கியது; நான் குடை எடுக்க ஓடினேன்."

அறிவியல் களஞ்சியம் :

 இந்தியாவின் கங்கை நதியை போல, கோடிக்கணக்கான ஆண்டுக்கு முன் செவ்வாய் கோளில் பெரிய நதி அமைப்பு இருந்ததாக அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. செவ்வாய் தரைப்பரப்பில் பள்ளத்தாக்கு, நீரோடை, ஏரி, வண்டல் படிவு உள்ளிட்ட 16 முக்கிய அமைப்புகளை ஆய்வு செய்தனர். இவை ஒரு லட்சம் சதுர கி.மீ., பரப்பளவிலான நீர்நிலைகளை உள்ளடக்கியுள்ளது என கண்டறிந்தனர். இது செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 17

ஓய்வூதியர் நாள்

ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 171982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம்ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது

நீதிக்கதை

 கடமையே வெற்றி தரும்


ஒரு குரு நாதருக்கு வயதாகி விட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. சீடர்களை அழைத்து எனக்கு பிறகு நம் ஆசிரமத்தைக் கவனிக்க தகுதியானவர் யாரோ அவரை நியமிக்க உள்ளேன். இன்று முதல் உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக கவனிப்பேன் சிறந்த ஒருவரை தலைவராக அறிவிப்பேன் என்றார்.


தலைவராகும் ஆசையில் எல்லா சீடர்களும் கடுமையாக உழைத்தனர். குரு நாதரின் தேவையறிந்து நிறைவேற்றினர். ஒரு முடிவுக்கு வந்தவராக குரு நாதர் சீடர்களை ஒன்று கூட்டினார். வயதில் இளைய சீடனைக் காட்டி இவரே நம் மடத்தின் புதிய தலைவர் என அறிவித்தார். மற்றவர்கள் அதிர்ந்தனர்.


குரு நாதரே இவனை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்பது புரியவில்லை. குறிப்பிட்டுச் சொல்லும் விதத்தில் எந்த சாதனையும் இவர் செய்யவில்லையே என்றனர். அது தான் அவரது நற்குணமே நீங்கள் பதவிக்காகத் தான் என்னைக் கவனித்தீர்கள். இவரோ எப்போதும் போல் இயல்பாக இருந்தார். பதவிக்காக அலையும் பண்பு இவரிடம் இல்லை. என்னிடம் தேவையற்ற நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவரது கடமையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பொறுப்பை ஒப்படைத்தேன். கடமை என்னும் மூன்றெழுத்தே வெற்றி தரும் என்றார் குரு நாதர்.

இன்றைய செய்திகள்

17.12.2025

⭐தமிழ்நாட்டின் 15,000 குழந்தைகள் உட்பட இந்தியா முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக் கப்பட்டுள்ளனர்.

⭐புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு
* எலெக்ட்ரிக் பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.  ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

Today's Headlines

⭐9 lakh children across India, including 15,000 children in Tamil Nadu, are affected by type 1 diabetes.

⭐Decision to operate 75 more electric buses in Puducherry. Rs. 8 crore has been allocated for improving the infrastructure for electric buses.

⭐ Australia's Bondi Beach is very famous. Two unknown assailants opened fire indiscriminately.

 🏀 SPORTS NEWS

🏀 The mini-auction of players for the 19th IPL cricket tournament has begun in Abu Dhabi. Only 350 players have been selected in the IPL auction.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive