தேர்வு
முறையை மாற்றியதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் எதிரில் புதுச்சேரி
ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு பள்ளிகளில், தேர்வுகளை
பிற பள்ளி ஆசிரியர்களை கொண்டு நடத்திட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனைக் கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு மற்றம்
பணியிட மாறுதல்களை காலம் கடத்தாமல் கலந்தாய்வு மூலம் வழங்க வலியுறுத்தில்
புதுச்சேரி ஆசிரியர் சங்கத்தினர் நேற்று மாலை, பள்ளிக் கல்வித்துறை
அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர்
செங்கதிர் தலைமை தாங்கினார். பாலமோகன், ஆலோசனைக்குழு தலைவர் ஷண்முகம்,
ராதாகிருஷ்ணன், செயலர் சதீஷ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பொருளாளர் ரமேஷ், சுபாஷினி, கோமதி, சுவாமிராஜ், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
TET Study Materials
Home »
» தேர்வு முறையை மாற்றியதை கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...