Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள் Northern state children studying Tamil in government schools

 



 அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள் Northern state children studying Tamil in government schools

ஓசூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழக மாணவர்க-ளுக்கு இணையாக, வடமாநில குழந்தைகளும், தமிழ் படித்து அசத்துகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், உத்தரபிரதேசம், மத்திய பிர-தேசம், பீஹார் உட்பட பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, தொழிற்சாலை, ரோஜா தோட்டம், செங்-கல்சூளை, கோழிப்பண்ணைகளில் பணிபுரிகின்றனர். தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக பேடரப்பள்ளி, உளிவீரனப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி, கொத்த-கொண்டப்பள்ளியில் அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் அதிகமாக படிக்கின்றனர். 

இதேபோல் ஓசூர் அருகே ஜீமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிக எண்ணிக்கையில் வடமாநில குழந்தைகள் படிக்-கின்றனர். இங்கு எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 180 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இதில், 90 பேர் வட-மாநில குழந்தைகள். இப்பள்ளியில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழியிலும் பாடம் கற்று கொடுக்-கப்படுகிறது. ஆனாலும் வடமாநில குழந்தைகள், தமிழ் மொழியில் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் ஆகியவற்றை கூறி அசத்துகின்றனர். பள்-ளியில் தலைமையாசிரியர் ராஜப்பா உட்பட எட்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive