குளோபல் எஜீகேசனல் ட்ரஸ்ட் இந்தியா ( பி ) லிமிடெட் மூலமாக மார்ச் 2025 மற்றும் மே- 2025 மாதங்களில் கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்குசென்று மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேள்விகளைக் பள்ளிநேரம் முடிந்தப்பிறகு மாணவர்களிடமும் பல்வேறு விதமான கேட்டதாகவும்.
அதில் பல ஆசிரியர்களிடம் பாடக் குறிப்புகள் இல்லை. ஆங்கில பாடம் போதிக்கும் பல ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுக்கவும். பேசவும் தெரியவில்லை எனவும் , அவர்களின் கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் , இரண்டு மாதங்கள் பல்வேறு குழுக்கலாக பிரிந்து பள்ளியினை பார்வையிட்டதில் பல பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதாகவும் . வந்தவர்களை மரியாதையாக நடந்துவதில்லை எனவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ் பாடம் எடுக்க தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது சார்பாக ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் , தேவைப்படின் ஆதாரங்களை நேரில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற புகார்கள் வருவது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் . எனவே அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் இதுபோன்ற தனிநபர் புகார்களுக்கு இடமளிக்காமல் பள்ளிப் பணி மற்றும் வெளி நபர்கள் வருகையின் போது தக்கவாறு செயல்பட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு : புகார் மனுநகல்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...