🟢 *SUCCESS 1:- மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட WP ல் TET மனுதாரர்கள் வெற்றி பெற்றார்கள்.
( *JUDGEMENT DATE:- 20-10-2022*)
🟣 *SUCCESS 2:- மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் அது இரண்டு நீதியரசர்கள் அமர்வுக்கு மாற்றப்பட்டு WA யில் இரண்டாவது முறையாக TET மனுதாரர்கள் மீண்டும் வெற்றி பெற்றார்கள்.
(*JUDGEMENT DATE:- 02-06-2023*)
🔴 *SUCCESS 3:- உச்ச நீதிமன்றத்தில் SLP/CAVIET/CA மனுக்களில் மீண்டும் TET மனுதாரர்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்கள்.
(*JUDGEMENT DATE:- 01-09-2025*)
🟢 *SUCCESS 4:- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தாங்கள் முழு தகுதி உள்ளவர்களாக இருப்பதும், பதவி உயர்வு கலந்தாய்வு 4 கல்வி ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதுவும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வு காலிப்பணியிடங்கள் தோராயமாக 6000 எண்ணிக்கையில் இருப்பதும் காரணம் காட்டி, வரிசைப்படி அனைத்து TET ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குக என்று, அனைத்து TET 2012/2014 ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் WP யில் TET மனுதாரர்கள் நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.(JUDGEMENT DATE:- 28-11-2025)
➖➖➖
WP யில் ஆரம்பித்து மீண்டும் WP யில் முடித்துள்ளோம்.
➖➖➖
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு, மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
➖➖➖
வழக்கு ஆரம்ப நிலையிலேயே முதல் கட்ட விசாரணையில் முழுவதுமாக புரிந்து கொள்ளப்பட்டு,ஏற்றுக்கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நலனை மட்டும் கருத்தில் கொண்டு சட்ட விதிகளின்படி முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கு 99.99 % மேல்முறையீடு செல்லாது என்பதாக புரிந்து கொள்வோம்.
➖➖➖
பதவி உயர்வு சார்ந்து முதன் முதலாக வழக்கு தொடரப்பட்ட தேதி இந்த வழக்கின் பயணம் தொடங்கிய தேதி
பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
*05-08-2022 ல் பதவி உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்து கொள்வீராக*
➖➖➖
இதுவரை தீர்ப்பு வழங்கிய 6 நீதி அரசர்களின் பெயர்களையும் அறிந்து கொள்வீராக:-
*SINGLE BENCH AT MADRAS HIGH COURT*
1) திரு கிருஷ்ண குமார்
*DOUBLE BENCH AT MADRAS HIGH COURT*
2) திரு மகா தேவன்
3) திரு முகமது சபீக்
*DOUBLE BENCH AT SUPREME COURT OF INDIA*
4) திரு திபன்கர் தத்தா
5) திரு மன்மோகன்
*SINGLE BENCH AT MADRAS HIGH COURT*
6) திரு இளந்திரையன்
➖➖➖
வழக்கு தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை *6 IAS அதிகாரிகள் கல்வித்துறை செயலாளர்/ஆணையர் நிலையில் பணியிட மாற்றம் மற்றும் பணி ஓய்வு பெற்றுள்ளார்கள்* என்பது குறிப்பிடத்தக்கது.
➖➖➖
இந்த வழக்கு முதன்முதலாக பதிவு செய்யப்பட்ட 05-08-2022 நாளிலிருந்து இன்று வரை TET ஆசிரியர்கள் யாரும்,
🟢கல்வித்துறை அமைச்சர்
🟣கல்வித்துறை செயலாளர்
🔵பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் 🔴தொடக்கக்கல்வித்துறை இயக்குனர்
🟢இணை இயக்குனர்
🔴துணை இயக்குனர்
🔵மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகள்
🟣மாவட்டக் கல்வி அலுவலர்கள்
🟢வட்டார கல்வி அலுவலர்கள் என யாரையும் நேரில் சந்தித்து
*குழுவாக எந்த மனுவையும் கொடுக்கவில்லை
*குழுவாக எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவும் இல்லை
*குழுவாக எந்த புகைப்படத்தையும் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
*இதற்குப் பிறகு கண்டிப்பாக சந்திப்போம்
➖➖➖
*வழக்கு தொடங்கியது முதல் ( மூன்றே கால் வருடத்தில் ) வழக்கில் உள்ள/ இணைந்த ஆசிரியர்களைத் தவிர, வேறு ஒரு ஆசிரியரிடமும் ரூபாய் 1 கூட நாம் தனிப்பட்ட முறையில் நிதியாக பெறவோ மற்றும் பயன்படுத்தவோ இல்லை என்பதை மிகுந்த நேர்மையுடனும் உங்கள் அனைவரிடத்திலும் பதிவு செய்கிறோம்.
➖➖➖
நமது குழுவில் உள்ள பல ஆசிரியர்கள் இதனை ஒரு சங்கமாக மாற்றினால் TET 2012/2014 (BT/SGT) ஆசிரியர்களுக்கு நலமாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்ததன் பேரில் இதனை ஒரு சங்கமாக பதிவு செய்தால் என்ன?* என்று தொடர் கலந்தாலோசனைகளும் நமது தரப்பில் நடைபெற்று வருகிறது.
நமது மூன்று குழுக்களிலும் 2500 TET (BT/SGT) ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
தமிழக அரசு சட்ட விதிகளின்படியும், தீர்ப்புகளின் படியும், TET ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் என்ற முழு நம்பிக்கையுடன் இன்றளவும் தன்னம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.
*இந்த தீர்ப்பு நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் TET ஆசிரியர்களுள் 95% TET ஆசிரியர்கள் பதவி உயர்வு அடைவார்கள் என்பதை கூடுதல் தகவல்களாக உங்களிடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.
தகவல் : TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...