![]() |
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் |
Discretion is better than valour
விவேகம் வீரத்தினும் சிறப்பு
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.
2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.
பொன்மொழி :
"கல்வி என்பது எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு."
Thought for the Day :
Education is the most powerful tool you can use to shape your future.
பொது அறிவு :
1. மனித உடலில் தன்னைத் தானே பழுதுபடுத்திக் கொள்கிற உறுப்பு எது?
கல்லீரல்.
2. உலகிலேயே மிகச்சிறிய அரசு எது?
வத்திக்கான் நகரம் (Vatican City)
English words :
Influence – Affect, தாக்கம் ஏற்படுத்து.
Maintain – Preserve, பராமரி.
NMMS :
ஒரு வட்ட வடிவ புல்வெளியைச் சுற்றி அலங்கரிக்க ஒரு மீட்டருக்கு ₹50/- வீதம் ₹11,000/- செலவாகிறது எனில் அதன் விட்டம் என்ன??
1. ரூ. 50 செலவு = 1 மீ
ரூ 11,000 செலவு = 50/11000 = 220 மீ
2. வட்டத்தின் சுற்றளவு = 2πr = 220 மீ
πr = 220/2 = 110
( π=22/7) 22/7 r = 110
r = 110 * 7 / 22
r = 770/22 = 35 மீ
வட்டத்தின் ஆரம். r = 35 மீ
எனில் வட்டத்தின் விட்டம் d = 2 * r
= 2 * 35 = 70 மீ
விடை = 70மீ
புவியியலும் சுற்றுசூழலும் :
"பூமியின் இயற்கை துணைக்கோள் சந்திரன் ஆகும்.
பூமியில் மட்டுமே நீர் நிலைகள் பெரும் கடல்கள் உள்ளன. இந்த பெருங்கடல்கள் சூரிய ஒளியில் உள்ள நீல நிறத்தை பிரதிபலிக்கின்றன. எனவே ""நீலக் கோள்"" (Blue Planet) என்று அழைக்கப்படுகிறது"
ஜூன் 16
நீதிக்கதை
நீதிக்கதை: "தூய்மையான வகுப்பறை"
ஒரு பள்ளியில் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் படிப்பில் நன்றாக இருந்தாலும், வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. பென்சில் சீவல்கள், காகிதத் துண்டுகள் போன்றவற்றை தரையில் போட்டுவிடுவார்கள்
ஒருநாள் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தார். வகுப்பறை மிகவும் அசுத்தமாக இருந்தது. அதை பார்த்த ஆசிரியர், "இந்த அறை நம் இரண்டாவது வீடு. வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வோமோ, அதுபோல வகுப்பறையையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
அடுத்த நாள் ஆசிரியர் இரண்டு செடிகளை கொண்டு வந்தார். ஒரு செடியை சுத்தமான இடத்திலும், மற்றொரு செடியை குப்பைகள் நிறைந்த இடத்திலும் வைத்தார். சில நாட்களில் சுத்தமான இடத்தில் இருந்த செடி பசுமையாக வளர்ந்தது. குப்பைகள் அருகில் இருந்த செடி வாடத் தொடங்கியது.
இதைக் கண்ட மாணவர்கள் தூய்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர். அதன்பிறகு அனைவரும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டு, தினமும் வகுப்பறையைச் சுத்தமாக வைத்தனர்.
சில மாதங்களில் அவர்களின் வகுப்பறை பள்ளியிலேயே மிகவும் தூய்மையான வகுப்பறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆசிரியர் அனைவரையும் பாராட்டினார்.
நீதி: தூய்மை நம் ஆரோக்கியத்தையும், கற்றல் சூழலையும் மேம்படுத்தும். வகுப்பறையை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்வோம். 🌷📚
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...