தமிழக
அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் 6 அரசு
பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல்
கல்லூரிகளில் பகுதி நேர பிஇ படிப்புக்கு 1,400 இடங்கள் உள்ளன. இதில்,
பொறியியல் டிப்ளமா முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்த அல்லது
பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 15-ல் தொடங்கியது. கடைசி நாள் ஜூலை 15-ம் தேதி. கூடுதல் விவரங்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறியலாம்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...