அரசு,
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில்
அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி (BC), எம்பிசி (MBC) பிரிவைச்
சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், பிரதம
மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் ஆண்டுதோறும்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-26ஆம்
கல்வியாண்டுக்கான இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு, மாணவ, மாணவிகளுக்குக்
கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள யுஎம்ஐஎஸ் (UMIS) எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31ஆம் தேதி ஆகும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...