Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Today Rasipalan 10.6.17

மேஷம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடகம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வேண்டாமே. உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை ஆலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
 

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading