Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.


         மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி கட்டடம் அமைக்கும் பணி: புவியியல் துறையினர் ஆய்வு

        குன்னூர் சின்ன வண்டிச்சோலையில் புதிய பள்ளி அமைக்கும் இடத்தை புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
 

பிளஸ் 2 படிக்காமல் தலைமை ஆசிரியரான பெண்

       பிளஸ் 2 படிக்காமல் இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர்பயிற்சி பெற்ற பெண், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
 

2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்

       கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

      ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல் இனவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
OC - 508
BC - 22172

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

         ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி  TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853 
ஆங்கிலம் - 10716

இரவு நேரத்தில் ஆன்லைன் கலந்தாய்வு ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதி

       நாமக்கல்லில் இரவில் நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வால் ஆசிரியர்கள், அலுவலர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக கடந்த இருவாரமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 

டி.இ.ஓ. இன்று ஓய்வு கூடுதல் பொறுப்பை ஏற்க 20 தலைமையாசிரியர்கள் மறுப்பு

       நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பிரபு ராதாகிருஷ்ணன் (58). இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

         தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சிவாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டுபேசினார்.

TRB Special TET 2 More Questions Wrong!      தமிழ் வினாவில் கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு என்ற கேள்விக்கு நான்கு விடைகள் தரப்பட்டன.
அ) முந்நீர்   ஆ. ஆழி    இ.பரவை    ஈ. சமுத்திரம்

குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்

          கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து உள்ளனர். இதனால், கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குரூப் 2 தேர்வு 32 சதவீதம் கட்

           திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் நேற்று டி.என்.பிஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. 2 ஆயிரத்து 846 பதவியிடங்களுக்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 114 மையங்களில் நேற்று காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை எழுத்து தேர்வு நடந்தது.
 

சுய நிதிப் பள்ளிகளையும், மானியத் திட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்ன?

          பள்ளிகள் திறந்துவிட்டன. ஏராளமான பெற்றோர், நல்ல பள்ளிக்கூடம் எது என்று தேடி அலைந்து தங்கள் குழந்தைகளைச் சேர்க்கிறார்கள். எவ்வளவு பணம் செலவானாலும் அதனைக் கடன் வாங்கியாவது சமாளிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்கள் பற்றியெல்லாம் ஊடகங்களில் விலாவாரியாக எழுதியாகிவிட்டது.

நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு

       திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்... : காலி பணியிடங்களால் திண்டாட்டம்

          பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, மாநிலம் முழுவதும், 44 ஆயிரத்து 976 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உடற்கல்வி  ஆசிரியர் தரத்தில், 3,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 
 

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்...
=========================================================
திருவண்ணாமலை மாவட்டம்  ********************************************* டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,  பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

படம்: இஸ்ரோ"திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…" இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும், அதன் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு; 8 மணி நேரம் காத்திருப்பு

              சிவகங்கையில், "ஆன்லைனில்' நேற்று மாலை வரை காலியிட விபரங்களை வெளியிடாததால், ஆசிரியர்கள் எட்டு மணி நேரம் வரை, கவுன்சிலிங் மையத்தில் காத்திருந்தனர். சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என, அறிவித்தனர்.
 

மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம் ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்

         முதன்மைக்கல்வி அலுவலகத்தில்கலந்தாய்வு துவங்குவதில் கால தாமதம்ஏற்பட்டதால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
 

தினமும் மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக் கல்வித்துறை

          அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாலை நேரம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதில் முக்கிய பாடங்களை படிக்க மற்றும் எழுத கற்பிக்கப்படும்.
 

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஜெயலலிதா.     சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா நேரில் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வின்போது, தமிழக ஆளுநர் ரோசய்யா உடன் இருந்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு.

   டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் என்று சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
 

குரூப் 2ஏ தேர்வு : 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்

          தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடைபெற்றன. வணிகவரித்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள உயர் பதவிகளை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் இந்த தேர்வை நடத்தியது.
 

SG Asst Vacant List: Pudhukottai District.

புதுக்கோட்டை மாவட்டம்; குன்றாண்டார் கோவில் ஒன்றியம், இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடம்
1. தெம்மாவூர் - 1
2. தெம்மாவூர் - 2

TET - சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். / TRB


         ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
 

PG TRB வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன:

         முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன:


பி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா?

          பி.இ., கலந்தாய்வு தேதியை, நாளை அல்லது நாளை மறுநாள், அண்ணா பல்கலை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 27ம் தேதி துவங்க வேண்டிய பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.
 

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள் !

1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும்.
 

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு!

        ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார்.

வங்கி கடன் மூலம் வீடு வாங்குகிறீர்களா? உங்களுக்கு சலுகை காத்திருக்கிறது

       வங்கி கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

NHIS 2014 for Pensioners

New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners - Form

DSE: SG to BT Promotion 530 பேருக்கு

            பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு


2014 ஜூலை மாத நாட்காட்டி


01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம்

05-குறை தீர் சிறப்பு முகாம்

ஆசிரியர் தகுதித்தேர்வு: குஜராத் மாநில தேர்வு வாரியம் அறிவிப்பு.         குஜராத் மாநிலத்தில் அரசு & தனியார் நிர்வாகம் நடத்தப்படும் பள்ளிகளில் முதன்மை ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET - 21014) அறிவிப்பை குஜராத் மாநில தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் -கொடைக்கானல் ஒன்றியம்- இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

    *தொடக்கக்கல்வித்துறை* திண்டுக்கல் மாவட்டம் -கொடைக்கானல் ஒன்றியம்- இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

Thanks to-Mr.Veeraramprabu Thilagar
1.சின்னூர் -1.
2.பெரியூர்-1.

பொறியியல் கலந்தாய்வு: இரவு10 மணி வரை நீட்டிக்க திட்டம்?


       பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க, ஒரு வாரம் வரைகால தாமதம் ஏற்படலாம் என்பதால் இந்த நாட்களை ஈடுகட்ட இரவு 10:00 மணி வரை கலந்தாய்வை நடத்த அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

கவுன்சிலிங்'கில் எதிர்பார்த்தது 190; காட்டியது 12 மட்டுமே

          மதுரையில், 190 காலி இடங்களை எதிர்பார்த்து பங்கேற்ற 'கவுன்சிலிங்'கில், 12 இடங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

ஆசிரியர் தகுதி தேர்வில் சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும்

         ஆசிரியர் தகுதி தேர்வில், சரியான விடை எழுதிய ஆசிரியருக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி என்பவர் தாக்கல் செய்த வழக் கில் கூறியிருப்பதாவது:நான் கடந்த மே மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை எழுதினேன். அதில், 81 மதிப்பெண் பெற்றேன். தேர்வில், 33 வது கேள்விக்கு சரியான விடை எழுதிய எனக்கு மதிப்பெண் கொடுக்க தவறிவிட்டனர்.
 

பிளஸ் 2 கணித விடைத்தாள் நகல் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்': ஐகோர்ட் உத்தரவு

         பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், 4 பக்கங்களை காணவில்லை; மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

சத்துணவு சாம்பாரில் விழுந்த சிறுமி சாவு: பள்ளியில் 3 பேர் இடைநீக்கம்

       ராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மூவரை மாவட்ட ஆட்சியர் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம்

        சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம் (திருத்தி வெளியிடப்பட்டுள்ளது) மற்ற மாவட்டங்கள் பற்றிய காலிப்பணியிடங்கள் விவரம் தொகுத்து எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பினால், அம்மாவட்ட விவரம் வெளியிடப்படும்.

Special TET: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம்

    மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி


உதவி பேராசிரியர் தேர்வில் குளறுபடி; மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்

         அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,096 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதில், குளறுபடி ஏற்பட்டுள்ளது. 'ரெகுலர்' முறையில், எம்.பில்., படித்து, வேலை பார்த்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண்ணை வழங்காத, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 'அஞ்சல் வழியில் படித்தவர்கள், திறந்த நிலை பல்கலையில், எம்.பில்., படித்தவர்களுக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவித்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பட்டபடிப்புக்குப்பின் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவருக்கும் பதவி உயர்வு!

       இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி தமிழாசிரியர் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு:சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வெட்கக்கேடு!


     எளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் இமையம். 'கோவேறு கழுதைகள்', 'செடல்', 'மண்பாரம்' எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார்.

TRB தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

      TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

        டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது
 

ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்த கவுன்சிலிங்:பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

          ஆசிரியர் - மாணவர் உறவை பலப்படுத்த, முதல்கட்டமாக, ஆசிரியர்களுக்கு "கவுன்சிலிங்' தர, பள்ளி கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
 

10 லட்சம்: ஆரம்ப கல்வி பெறாத குழந்தைகள்-யுனெஸ்கோ

         இந்தியாவில் ஆரம்பக்கல்வி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆக உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அடு்த்த படியாக பாகிஸ்தான், இந்தோனேஷியா நாடுகள் இடம் பிடித்துள்ளது.
 

பி.எட்., விண்ணப்ப வினியோகம் ஜூலை 18 வரை நீட்டிப்பு

          மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் வினியோகம், ஜூலை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்குனர் பாலன் தெரிவித்துள்ளார்.

நாளை குரூப் 2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்:

          நாளை நடைபெறும் குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) குரூப் ‘2ஏ’ பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவி) அடங்கிய 2,846 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நாளை நடத்துகிறது.
 

மாணவ-மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடியில் இலவச சைக்கிள்:

            மாணவ - மாணவிகள் 6,44,000 பேருக்கு ரூ.230.70 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவிகள் அனைவருக் கும் தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டில் (2014-2015) ஆண்டு தொடக்கத்திலேயே மாணவ - மாணவிகளுக்கு ரூ.230 கோடியே 72 லட்சம் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6,44,000 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 மாணவ - மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல்:

         தமிழக அரசு சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இலவச பாடபுத்தகங்களின் முதல் பக்கத்தில் விலை இல்லா பாடநூல் என்பதை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பக்கத்தை மட்டும் கிழித்துவிட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 

திருப்பூரில் மாணவி தற்கொலை!

       திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி அரசு பள்ளி மாணவி சுவாதி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளி கணக்கு ஆசிரியை பிரியா, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகர் 2வது வீதியை சேர்ந்த மனோகரன் - சுசீலா தம்பதியின் மகள் சுவாதி (18), வீரபாண்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

NHIS - 2014

          MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Provision of Health Care Assistance to the Pensioners (including spouse) / Family Pensioners through the United India Insurance Company Limited, Chennai – Implementation – Orders – Issued.

பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை

       பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று வந்தவர்களாக இருப்பர்.
 

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

           அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

High School HM Promotion Regarding | தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

       உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு திராக தொடுத்த வழக்கு இன்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

தேர்வுத்துறைக்கு உத்தரவு.

          +2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு.
 

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

         மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

'குரூப் 2' தேர்விற்கு கடும் போட்டி இருக்கும்

ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்

          தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2 தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள் தவிக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2800 உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' எழுத்துத்தேர்வு, ஜூன் 29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.வங்கித் தேர்வு: பாரத ஸ்டேட் வங்கிக்கு இந்திய அளவில், 1897 'புரபேஷனரி ஆபீசர்' பணியிடங்களுக்கான எழுத்து தேர்வும், ஜூன் 29 காலை, பிற்பகலில் சென்னை உட்பட 14 நகரங்களில் நடக்கிறது. ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும் விண்ணப்பித்தவர்கள் எந்ததேர்விற்கு செல்வது என புரியாமல் தவிக்கின்றனர்.


டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.

       அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
 

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்

          பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், ஜூனியர் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. இதன்படி கூடுதலாக (சர்பிளஸ்) உள்ள ஆசிரியர்கள், பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் அடிப்படையில் மாற்றப்படுவர்.

பெண் குழந்தை விடுதிகளின் பாதுகாப்பிற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

       தமிழகத்தில், விடுதிகளில் தங்கும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருதி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். பொள்ளாச்சியில் விடுதியில் தங்கி இருந்த, இரண்டு மாணவியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவு - பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு

       அண்ணா பல்கலையில் ஜுன் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு, உச்சநீதிமன்ற உத்தரவால், திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு துவங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'திறமையாக செயல்பட ஊழியர்களை ஊக்கப்படுத்துங்க!'

       அரசு ஊழியர்களை நேர்மையாகவும், திறமையாகவும் பணியாற்றும்படி, ஊக்கப்படுத்த வேண்டும்' என, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி


           பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி 2 சுற்றுகளாக நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெறும். மாநில அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். மாவட்ட அளவிலான பயிற்சி ஜூலை மாதம் 7ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நாள் வீதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

TRB PG TAMIL மீண்டும் இன்று (27 06.14) மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

           TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்

       தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்...

மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம்

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .

  திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள்.
ஆலங்குளம் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

         பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்' ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு துாக்கியடிப்பது தவிர்க்கப்பட்டது.பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக உள்ள பணியிடங்கள் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகின்றன. 
 

ஓர் ஆசிரியருக்காக ஒரு ஊரே சேர்ந்து போராட்டம் - ஆசிரியரை மாற்ற எதிர்ப்பு: பள்ளியை பூட்டி மாணவர்கள் பெற்றோர் சாலை மறியல்

 
          ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி .ஆர். நகரில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாராயணன். இந்நிலையில் இவரை சங்கீதவாடி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணியளவில் பள்ளிக்கு திரண்டு வந்தனர்.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.


    புதுவை பாரதியார் கிராம வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

புதுச்சேரியில் ஆசிரியர் காலியிடங்கள்.


         தமிழக நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அந்த அரசின் சார்பாக 19 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TET என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!

              அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை

          கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

          உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்:

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.


            இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு


         தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
 

சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி.


     சென்னையில் 80 மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விமேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.
 

மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் நடவடிக்கை

         தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

        ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

SG TO BT Promotion Final Panel

           பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து தமிழ் / ஆங்கிலம் / கணிதம் / அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 'ரேங்க்' பட்டியலில் சென்னை மாணவிக்கு 3வது இடம்: மறுமதிப்பீட்டில் 9 மதிப்பெண் கூடியதால் சாதனை.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில், சென்னை, போரூரைச் சேர்ந்த மாணவி, நவீனாவின், மொத்த மதிப்பெண், 1,191 ஆக உயர்ந்தது.
இதனால், மாநில அளவில், மூன்றாம் இடம் பெற்றமாணவர்கள் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த மே 9ம் தேதி வெளியானது.

TNTET புதிய வழக்கு தாக்கல்

           TETபுதிய வழக்கு தாக்கல் : வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்


Complete School Profile


Prepared by Mr. Sugumar, HM, Thiruvannamalai Dt.

TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதா?

           TNTET அரசின் புது யோசனை விரைவில் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளதாம்-UG TRB EXAM FOR TET PASS CANDITATES(TNTET 50% + UG TRB 50% )

TRB PG TAMIL மீண்டும் இன்று (26.06.14) வழக்குகள் விசாரணை

           TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (26.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

இது.... TNTET காலக்கோடு....

???????? பணி நியமனம்
29-05-2014 Absent Candidates CV
26-02-2014 Click here - Additional C.V Call Letter for Paper I

இது....TRB PG காலக்கோடு....

???????? பணி நியமனம்
18-02-2014 Provisional Selection List (Zoology,Geography,HomeScience,Phy.Edn.Dir.Gr-I & Bio-Chemistry)
11-01-2014 Revised CV Call Letter for

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்- Dinamalar News

           இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

மூன்று ஆண்டுகளாக 'உறங்கும்' அரசு உத்தரவு: 'கவுன்சிலிங்' எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்

        தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட, துறை ரீதியான மாறுதல் உத்தரவு, 3 ஆண்டுகளாக செயல்பாட்டிற்கு வரவில்லை.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive