Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RTI Letter Regarding TNTET 2013


கணித தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடிய 10-ம் வகுப்பு மாணவர்

படிப்பில் சுமாரான மாணவர்களை எப்போதுமே தேர்வு பயம் ஆட்டிப் படைக்கும்.

TET வழக்கு விபரம்!

          தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது. 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?

இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில்,
  1. ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது.   ஆங்கிலத்தில் "Probability of getting 3 heads and 3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.
  2. 5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண்  38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்ட நாற்கரமானது ஒரு சாய்சதுரம் என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7) are the vertices of a rhombus." என்று உள்ளது.
மேற்காணும் தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

1986-87 வரை DTEd படித்தவர்களுக்கான அரசாணை

         பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிர்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியீடு

தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் கேள்விதாள் மாறியதால் குழப்பம்

           தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் நேற்று மதியம் தொழிற்கல்வி பிரிவிற்கு 'டைப்ரைட்டிங்' தேர்வு நடந்தது. வினாத்தாள் வாங்கிய மாணவர்களுக்கு இரண்டாம் பக்கத்தை திருப்பியதும் ஒரே அதிர்ச்சி. 2,3,மற்றும் 4ம் பக்கங்களில் பிளஸ்2 பாடத்திற்கான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
 

பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

           கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முன்னிட்டுப் பலவித சோதனைகளைக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் விதவிதமான பலபரீட்சைகளைப் பிரயோகித்து வருகிறார்கள். எல்லாம் சரி.

அரசு பள்ளி மாணவர்கள் பரிதவிப்பு : தகவல் உரிமைச்சட்டத்தில் அம்பலம் ; விளையாட்டு துறைக்கு நிதியில்லை!

           கோவை மாவட்டத்தில், பெரும்பாலான அரசு பள்ளிகளில் விளையாட்டு துறைக்கு என, மாணவர்கள் செலவினங்களுக்கும், உபகரணங்கள் வாங்கவும் ஒரு ரூபாய் கூட, நிதி ஒதுக்கப்படவில்லை என்பது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக அம்பலமாகியுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு துவங்கியது: நகலெடுப்பு கடைகளை மூட உத்தரவு

           கர்நாடகா மாநிலம் முழுவதும், 3,038 தேர்வு மையங்களில் நேற்று, 10ம் தேர்வு நடந்தது. மொத்தம், 3,038 தேர்வு மையங்களில், 8.57 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்; 829 தேர்வு மையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 
 

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி 54 மையங்களில் இன்று தொடங்குகிறது

         கேரளாவில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி 54 மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்புகள்: 13 இடங்கள் காலி

        தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் 13 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
 

அரசு பள்ளி ஆண்டுவிழாவில் SSA - SPD பூஜா குல்கர்ணி பங்கேற்பு!

          27.03.2015 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், மொளசூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் விழிப்புணர்வு விழா நடைபெற்றது. விழாவிற்கு மரக்காணம் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) திரு. கே.சம்பத் அவர்கள் தலைமைத் தாங்கினார்.

'தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு

      பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

      பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
 

உத்தர பிரதேசத்தில் முதல் குடிநீர் ஏ.டி.எம்: நடிகை ஹேம மாலினி திறந்து வைத்தார்


உத்தர பிரதேசத்தில் முதல் குடிநீர் ஏ.டி.எம்: நடிகை ஹேம மாலினி திறந்து வைத்தார்

       அவசர தேவைக்கு கார்டைத் தேய்த்தால் பணம் தரும் அதே ஏ.டி.எம். தான், உத்தர பிரதேச மக்களின் தாகத்தை தீர்க்கும் குடிநீரை தரும் இயந்திரமாகவும் மாறியிருக்கிறது. இதற்கென பிரத்யேகமாக வழங்கப்படும் கார்டை தேய்த்தால், பணம் வருவதற்கு பதிலாக குடிநீர் வருகிறது. குழந்தைகளுக்கு இந்த ஏடிஎம்-ல் குடிநீர் இலவசம். சவ்வூடு பரவல் ஆலை(RO) மூலமாக இதில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு, வெறும் 2 ரூபாய் செலவில், 20 லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கும்.  

வாட்ஸ்-அப்பில் வினாத்தாள்: பணியாளர்களின் தாற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை

      பிளஸ் 2 கணித வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில் அலுவலகப் பணியாளர்கள் 2 பேரை தாற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

இணைய பயன்பாட்டின் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்!

         இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா, இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது. அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

         பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு நியமனம் இல்லை: அவமதிப்பு வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.,க்கு கண்டிப்பு

      நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சொந்த மாவட்டங்களில் 1,078 ஆசிரியர் நியமனம்

          'கவுன்சிலிங்' மூலம், 1,078 பேர் சொந்த மாவட்டங்களிலேயே, முதுகலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

              ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 

புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி.

        புதுச்சேரி அரசின்கீழ் காரைக்கால், மாஹியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

         அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டது.  
 

RTI Letter Regarding Computer Instructors Incentive

போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்

 
       நேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

GPAT - 2015 தேர்வு முடிவுகள் வெளியீடு

       கிரஜூவேட் பார்மசி ஆப்டிடியூட் டெஸ்ட் (GPAT)2015 நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

ஏப்ரல் 1 முதல் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி

           காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி, ஏப்ரல் 1ம் தேதி முதல், இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உதவித் தொகை: ஆட்சியரிடம் புகார்

     திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயின்று பார்வையில்லாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி


சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி

    மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டண தாமதம் : 1ம் வகுப்பு சிறுமியை நாள்முழுதும் வெளியில் நிற்கவைத்த தனியார் பள்ளி

       பெங்களூரு: கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு மாணவியை, நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக, தனியார் பள்ளி மீது புகார் எழுந்துள்ளது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது: இஸ்ரோ பெருமிதம்

           இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ தயாரித்த கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1டி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 3 செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு விட்டன. 

பத்தாம் வகுப்பு – தமிழ் இரண்டாம் தாள் 2015 குளறுபடிகள்பொதுத்தேர்வு

        சமீபத்தில் நடந்த பத்தாம் வகுப்பு – தமிழ் இரண்டாம் தாளில் பல வினாக்கள் குளறுபடிகளால் அமைந்துவிட்டன. தமிழ் ஆசிரியச் சான்றோர்கள் பலரும் நமக்கேன் வம்பு என்று மரபுப்படி வாய்மூடித் தியானித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இது வருத்தம் தரும் செய்தி.  இந்த இரண்டாம் தாளில் என்ன என்ன குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கீழே பார்க்கலாம்.

'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு

          வாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள், குற்றம் சாட்டி உள்ளனர். அதிகாரிகளை விட்டு விட்டு, அப்பாவி ஊழியர்களை பழி வாங்குவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

          நாளை கடைசி நாள் தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்க:தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
 

அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்ட 9ம் வகுப்பில் 'வடிகட்ட' உத்தரவு

            அடுத்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சியை எட்டுவதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, 'வடிகட்ட', தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

           பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

நாளையுடன் முடிகிறது பிளஸ் 2 தேர்வு

          தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது. மொழிப்பாடங்கள் மற்றும் பெரும்பாலான முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் முடிந்து விட்டன. நாளை உயிரியல், தாவரவியல், கணிதப் பதிவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கான தேர்வுகளுடன், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிகிறது. 

கல்வி மானியக் கோரிக்கை நாளில் போராட்டம்

           தொழிற்கல்விப் பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்வி மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
 

உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தேர்வு வாரியம் குளறுபடி: பெண்ணுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவு

          உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) குளறுபடியை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி உரிய உத்தரவைப் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

பள்ளிப் பாடத்துடன் பசிக்கு உணவு : 'தாய்மையுடன்' ஆசிரியப்பணி: விடுமுறையிலும் தவறாத கடமை

         அரசுப் பள்ளி தானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத் தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர். மதுரை அருகே மேலுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயலைப் பார்த்து ஆசிரியர் சமூகம் 'காலரை' துாக்கி விட்டு பெருமைப்படலாம்.

ஜாக்டோ உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியல் விவாதித்து வெளியிட வாய்ப்பு

              சென்னையில் ஜாக்டோ கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் வரும் உண்ணாவிரதப் போரட்டத்தில் பங்காற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியல் விவாதித்து வெளியிட வாய்ப்புள்ளது. மேலும் புதிய சங்கங்கள் இணைப்பது தொடர்பான ஆலோசனையும் நடைபெற உள்ளதாக தகவல்.
 

வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் மோசடியில் தொடர்புடைய பள்ளியில் தேர்வு மையங்கள் ரத்து?

              வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிகளின் தேர்வு மையங்களை, வரும் கல்வியாண்டு முதல் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
 

மழலையர், தொடக்கக் கல்வித் தரத்தை உறுதி செய்ய வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

           தமிழகம் முழுவதும் உயர் கல்விச்சாலைகளை ஏற்படுத்தி விட்டோம். பல பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், நிர்வாகப் பயிற்சிக் கல்லூரிகள் வந்து விட்டன. 
 

மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது;


       மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை, ஏழாவது சம்பளக் கமிஷன், விரைவில் அரசிடம் தாக்கல் செய்யஉள்ளது; இதில், தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்குமா என, ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


CPS எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

       பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறைக்கு மாறுதல் பெற்றாலும் அவர்களின் CPS க/கு எண்ணை மாற்றம் செய்ய தேவையில்லை.

வானில் பறக்கும் வேளையில் வை-ஃபை இண்டர்நெட் வசதி: இந்திய விமானங்களில் விரைவில் அறிமுகம்


       இந்தியாவி்ல் விமானங்களில் பறக்கும் போது வை-ஃபை இண்டர்நெட் பயன்படுத்தும் வசதியை தற்போது எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களே வழங்கி வருகின்றன. பெரும்பாலான விமான பயணிகள் நீண்டகாலமாக இந்த இன்பிளைட் வை-ஃபை வசதியை எல்லா விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்

           இந்தியாவில் 10-ல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

"பென்டா' செல்லிடப் பேசிக்கு மக்களிடையே வரவேற்பு

         அஞ்சல் நிலையங்களில் விற்கப்படும் "பென்டா' செல்லிடப் பேசிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக மதுரை தலைமை தபால் நிலைய முதுநிலை அதிகாரி என். பிரகாஷ் தெரிவித்தார்.
 

1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது இமாச்சல பிரதேசம்1-ம் வகுப்பிலிருந்தே இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடமாக்குகிறது இமாச்சல பிரதேசம்

       மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பிலிருந்தே, இந்தி, ஆங்கிலம், மற்றும் கணிதத்தைக் கட்டாயப் பாடமாக்குவதாக இமாச்சல பிரதேச முதல்வர் விர்பத்ரா சிங் அறிவித்துள்ளார்.


உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வரலாற்று சாதனைஉலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை சாய்னா நேவால் படைத்துள்ளார்அதோடு கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பேட்மிண்டன் தரவரிசையில்

வீட்டுக் கடன் சொல்லும் பாடம்

          சொந்த வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே அதை வாங்குகிறார்கள். வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும் போது பல விஷயங்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

6 மாதமாக பள்ளிக்கு வராத 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை: சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

           10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காததால் பெற்றோருடன் மாணவர்கள் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நத்தம் அருகே வேலாயுதம்பட்டி அரசு பள்ளியில் 140 மாணவர்கள் படிக்கின்றனர். 32 மாணவர்கள் 10 ம் வகுப்பு படிக்கின்றனர்.
 

இட பற்றாக்குறையால் திணறும் தனியார் பள்ளிகள்: அங்கீகாரத்தை ரத்து செய்து இழுத்து மூட திட்டம்

          பள்ளிக்கல்வி விதிகளின்படி, இடமின்றி திணறும் தனியார் பள்ளி களின் பட்டியலை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தயாரித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு

        மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

1,746 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்

         ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,746 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
 

முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு

          முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்டது. இதில், சென்னை உள்ளிட்ட, முக்கிய மாவட்டங்களில் உள்ள, பணியிடங்கள் காட்டப்படவில்லை.

ஈஷா அறக்கட்டளை நடத்தும் சம்ஸ்கிருத பள்ளிக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி:

      ஈஷா அறக்கட்டளை நடத்தும் சம்ஸ்கிருத பள்ளியில் மாணவர்களை சேர்க்கத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்குரைஞர் எம்.வெற்றிச் செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
 

உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பதவி: வரும் 6 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு டி.என்.பி.எஸ்.சி. தகவல்.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன.


அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகள்: 2 நாள்களுக்கு இரவு 8 மணி வரை நீட்டிப்பு

        மத்திய, மாநில அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை திங்கள், செவ்வாய்க்கிழமைளில் இரவு 8 மணி வரை நீட்டித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 

'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா': கடுப்பான கல்வி அதிகாரி

         சிவகங்கையில் நடந்த உதவித் தொகை வழங்கும் விழாவில் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. கடுப்பான மாவட்ட கல்வி அதிகாரி நல்லமுகமது, 'எங்களுக்கு வேல... வெட்டி இல்லையா?' என கடிந்து கொண்டார்.
 

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்


 
      வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

       செந்துறை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது  .இது குறித்து, செந்துறை வட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள ஆதனங்குறிச்சி,மணக்குடையான்,பெரியாக்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்கலில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பான் செல்ல வாய்ப்பு

          அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நடுநிலை, உயர்நிலை பள்ளி விழாவுக்கு மத்திய அரசு நிதி; துவக்க பள்ளிகளுக்கு இல்லை

           அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆண்டு விழா நடத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது ஆனால் துவக்க பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காததால், மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு எழுத தடை: சி.இ.ஓ., அலுவலகம் முற்றுகை

          10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்காததால் பெற்றோருடன் மாணவர்கள் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 

ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்

ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்
      ஆந்திராவில் வெண்ணிலா, கருடா, கருடா பிளஸ் என்ற பெயரில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் வருகிற ஏப்ரல் 1–ந்தேதி முதல் இண்டர்நெட் வைபை வசதி செய்யப்பட உள்ளது.
 
 
 

சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு

          சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர்கள் சார்பில், கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

செல்போன் கட்டணம் உயர்கிறது: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு

    தொலை தொடர்புக்கான அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள்


வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள்

          இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ தயாரித்த கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்–1டி செயற்கைகோள் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது.

புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம்

              பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது.

100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?

          100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை, சிலபல காரணங்களைக் கூறி, பள்ளி நிர்வாகமே, தேர்வெழுத விடாமல் தடுக்கிறது என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.

இயற்பியல்வினாத்தாளில் சிக்கலான, தெளிவற்ற கேள்விகளால் முழு மதிப்பெண் பெறுவதில் சிக்கல்


          நேற்று(27.03.15) நடைபெற்ற இயற்பியல் தேர்வில் பத்து, ஐந்து மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன; அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன்இருந்த அதே தருணத்தில், ஒரு-மதிப்பெண் வினாக்களில்ஐந்து/ஆறு வினாக்கள் சிக்கலாகவும் தெளிவற்ற சொல்லாடல்களாகவும் இருந்ததால் மாணவர்கள் குழம்பினர். பலர் நெடுநேரம் சிந்தித்தும் என்ன கேட்கப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை என்று கூறும் நிலை.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

              தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!

             CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

              அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்


இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை வெளியிட ஆப்பிள் திட்டம்
           ஐ-போன் பிரியர்களை ஆச்சரிப்படுத்தும் விதமாக ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக 3 ஐ-போன்களை  வெளியிட முடிவு செய்திருப்பதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

          'பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 இயற்பியல் தேர்விலும் குழப்பம்

           நேற்று நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், சில கேள்விகள் பிழையாகவும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி' டைப் வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 14 வது கேள்வியில், '400 ஆம்ஸ்ட்ராங் அலைநீளமுள்ள ஒரு ஒளியானது 2 மைக்ரோ மீட்டர் தொலைவு கடந்த பிறகு உருவாக்கம் கட்ட வேறுபாடு' என கேட்கப்பட்டது.
 

பொதுத்தேர்வில் பழைய வினாத்தாள்: வரிசை மாறாமல் 'அப்படியே' கேள்விகள்

           ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 திருப்புதல் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள், 'அப்படியே' பொதுத்தேர்விற்கும் வழங்கப்பட்டது.

10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு

           தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு

            அகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு - வழிமுறைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

          பிளஸ் 2 பொருளியல் வினாத்தாளில் 'புளு பிரின்ட்' படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு மதிப்பெண் வினாவில் 18, 20 வது கேள்விகள் தவறாக, குழப்பமாக கேட்கப்பட்டிருந்தன. மூன்று மதிப்பெண்ணில் 53 வது கேள்வி 'பழமை பொருளாதாரம் பற்றி குறிப்பு வரைக' என கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி, பாடப்புத்தகத்தில் 10 மதிப்பெண் வினாவாக உள்ளது. 
 

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி: பீகாரில் தொடக்கம்


பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி: பீகாரில் தொடக்கம்

         பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது.  
 

இந்த மாதம் கடைசி நாளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணப்பயன் உறுதி

        பகுதிநேர பயிற்றுநர்களின் 2015 மார்ச் மாத ஊதியமும், ஏப்ரல் 2014 லிருந்து அக்டோபர் 2014 வரையிலான காலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையும் 31.3.2015 க்குள் வழங்கி, உரிய பதிவேடுகளில் பதியப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர்.

பல்கலை மாணவர்களுக்கு பாடம் எடுத்த 9ம் வகுப்பு மாணவர்கள்!

        கழிவுப் பொருட்களை கலை நயமிக்க பொருட்களாக மாற்றுவது எப்படி என, பொறியியல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தி அசத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்

                மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று தொடங்கி வைத்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive