Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வி மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வில் மாற்றம்


28.07.2012 - 
காலை - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் மற்றும் 
                   ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி
                    நிரவல் 
மதியம் - ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் 

29.07.2012
காலை - ஒன்றியம் விட்டு ஒன்றியம் பொது
                    மாறுதல் 

31.07.2012
காலை - மாவட்டம் விட்டு மாவட்டம் பொது
                    மாறுதல் 

01.09.2011 ன் மாணவர் எண்ணிகையின் அடிப்படையில் 2012 -13 இடைநிலை /பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு வழிகாட்டுதல் நெறிமுறைகள்


 அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெறுகிறது -
21.07.2012 - SGT to BT Promotion
23.07.2012 - Elementary HM Promotion if any Elementary HM create by Ele HM to BT promotion. 
Click Here 4 Download Namakkal DEEO proceeding - Promotion counselling schedule
Reference GOs: 
GO 15 DATED 23.01.2012 
Click here Download the GO 172 dated 11.07.2012 - 1267 BT post by promotion 

(பதவி உயர்வு கலந்தாய்வு அரசாணை எண்.172 (15) நாள். 11.07.2012 ன் படி உருவாக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும் நடைபெறும்)

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மீளாய்வு செய்து தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆலோசனை வழங்குவது தொடர்பாக சென்னையில் தலைமை ஆசிரியர் கூட்டம் நடை பெற உள்ளது

பொது தேர்வில் 50 சதவீதத்திற்கும்  குறைவாக பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்படுவார்கள் ( மாவட்டத்திற்கு நான்கு பள்ளி தலைமை ஆசிரியர் வீதம்). 


பள்ளி பெயர் பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் விரைவில் வெளியிடப்படும்.






Promotion Order-Regarding

          கடந்த 11.07.2012 அன்று சென்னை, அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொண்டு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் அதற்குண்டான ஆணையினைஅந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TET - உயர் நீதிமன்றத்தில் வழக்கு


       

டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு


    வரும் டிசம்பரில் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வால் தகுதியான ஆசிரியர் கிடைப்பது நிச்சயம்: ஆசிரியர் தேர்வு வாரியம்


             டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வை எழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும், நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர் புகாராகத்தெரிவித்தனர்.

குரூப்-2 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்


             குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்றுடன், ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்தனர். நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலகத்தில் உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப்-2 நிலையில், 3,631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

RTE ACT GO for Necessary Action

DEE-Dengue Fever - Instructions

தேர்வு நேரத்தை அதிகரித்திருக்க வேண்டும் : ஆசிரியர்கள்

          தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு டிஇடி இன்று நடைபெற்றது. இன்று காலை பட்டயப் படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. 150 கேள்விகளைக் கொண்ட இந்த தேர்வினை எழுத ஒன்றரை மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் பலரும், வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும், தேர்வெழுதிய போதிய கால அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் வருந்தினர்.
150 கேள்விகளுக்கும் விடைகளை செயல்முறையில் கண்டுபிடித்து பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்ததால், ஒன்றரை மணி நேரம் என்பது மிகவும் குறைவாகும். பட்டயப் படிப்பு ஆசிரியர்களுக்கான வினாத்தாளில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளும் கேட்கப்பட்டதாகவும் சில ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதியத்துக்கு மேல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது.

டி.இ.டி தேர்வு கடினமாக இருக்குமா?


      வரும் 12ம் தேதி நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,), கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின்படி தேர்வு என்றாலும், பிளஸ் 2 நிலையில், கேள்விகள் கடுமையாகவும், சிந்தித்து விடை அளிக்கும் வகையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

வேலை நாளில் கல்வி வளர்ச்சி தினம்: பள்ளி கல்வித்துறை


        கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி தினத்தை, பள்ளி வேலை நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி , கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இரு தினங்களில், ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி. தேர்வு: ரோல் நம்பர், பெயர் தெரிவித்தால் எழுதலாம்


          நாளை நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், தங்களது ரோல் நம்பர், பெயர் தெரிவித்து தேர்வு எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேது ராமவர்மா தெரிவித்தார்.

ஆசிரியர் பட்டயப் படிப்பில் 15,000 இடங்கள் காலி


          ஆசிரியர் பட்டயப் பயிற்சி சேர்க்கையில், அரசு ஒதுக்கீட்டின்கீழ், 17 ஆயிரம் இடங்கள் இருந்தும், வெறும், 1,998 பேர் மட்டுமே, இந்த பயிற்சியில் சேர்ந்தனர். ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு வேலை வாய்ப்பு இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த படிப்பில் சேர்வோர் எண்ணிக்கை, சரிந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடந்தது.

Online Applications invited for the post of Village Admn.Office (VAO) Last Date:10.08.2012



S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity
FromTo
1
26/2012
09.07.2012
Village Administrative Officer in T.N. Ministerial Service 09.07.201210.08.201230.09.2012

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive