Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு

 
          கோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறதுஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
 

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

        கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு

           பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

Special TET Key Answers (Tentative)

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன...

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

          ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்

         20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி தொடக்கம்

      பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான

TNPTF 12.06.2014 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்பாட்டம்

          மாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்கள் மாலை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.

தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை

         தமிழ் நாட்டில் ஏன் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவில்லை? மத்திய அரசு அறிக்கை

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை

      பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், கடும் எச்சரிக்கை விடுத்தார்.
 

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

           பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி இயக்குனர் கேட்டு உள்ளார். 
 

பாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்

        குஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடக்கக்கல்வி Promotion & Transfer சார்பான பணிகள் விரைவில் தொடங்கும்.

          பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய்வு பணிகள் தொடங்கும் என இயக்குனர் தகவல்  

Private Schools Fee Structure 2013-2016

TN Private Schools Fee Determination Committee - Latest up dated (inclusive order on Objection) Fee Structure 2013-2016


Justice Thiru S.R Singaravelu,
Chairman, 

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு

        50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை நிகழாண்டில் தொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

எந்த மொழியில் பேசினாலும் இனி உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்

           சாஃப்ட்வேர் துறையில் முன்னனி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ஸ்கைப் சாஃப்ட்வேரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவரது மொழிக்கு மாற்றம் செய்து அவர் தேர்வு செய்த மொழியில் கேட்கும் அமைப்பை மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்துயுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
 

TRB Special TET Question May 2014




TRB Special TNTET Question 2014  - Click Here For Download

TET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

     டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210,  புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக்கல்வி துறையில் பதவு உயர்வு கலந்தாய்வு எப்போது? - ஏக்கம்

           தொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்


பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை

       கோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2 ஆண்டு ஆசிரியர் அனுபவம் உள்ளவர்கள் எம்.எட். படிப்பில் சேரலாம். அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியிலோ தற்போது பணியில் இருக்க வேண்டும்.

ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்

             ''பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர் விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு வருகின்றன.

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்

          மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு

           தர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது: பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒருபள்ளியில் நான்கு பிரிவுக்கு (செக்ஸன்) மேல் கூடுதலாக வகுப்பு துவக்கினால் கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை வாகனங்கள் எப்சி செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயமாக அனுமதிபெற வேண்டும். 10 ஆண்டு அனுபவம் பெற்ற டிரைவர்களை நியமித்து பள்ளி வாகனங்கள் ஓட்டவேண்டும். பள்ளிகளுக்கு பரவலான இடங்கள் வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு - சீருடை 2ம் தேதி முதல் கிடைக்கும்

           பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 2ம் தேதி முதல் புத்தகம், நோட்டு, சீருடைகள் உள்ளிட்ட அனைத்து இலவச பொருட்களையும் வழங்க வேண்டுமென மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் 14 வகை பொருட்களில் பெரும்பாலானவற்றை வழங்கிட மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

பிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி

             விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நான் 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். 
 

வரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள முதல்வர்

           கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. 
 

பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு!

              கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தை அமல்படுத்தாததால், தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள், அவர்களது மொழிப் பாடத்தை, முதல் பாடமாக படித்து வருகின்றனர். இவர்கள், எப்படி, தமிழை, பொது தேர்வாக எழுதுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்

             கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 

இந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்! - ஸ்மிருதி இரானி

          என் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பியுள்ளனர். எனக்கான அமைச்சர் பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, அந்தப் பதவிக்கு நான் தகுதியானவளா, இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.


மழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு!

            மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது. 
 

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு

             தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: மதிமுக தீர்மானம்

                   தமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கியது. நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்க உள்ளது.

"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி

           பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு

குஜராத் பள்ளி் பாடத்திட்டத்தில் மோடி

      2015ம் கல்வியாண்டிலிருந்து பிரதமர் மோடி குறித்த பகுதி, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளதாக குஜராத் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 

TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி

         TNPSC - DEPARTMENTAL EXAM - தேர்வில் குளறுபடி .....28.5.2014 FN,THE ACCOUNTS TEST FOR EXECUTIVE OFFICERS - 117 - தாளில் கொடுக்கப்பட்ட VI கணக்கு கேள்வியில் குளறு படி.25 மதிப்பெண் வழங்க கோரிக்கை.

TNTET-2013: Process ஒரு முழு வருடமா?

1.NOTIFICATATION - DATE - 22-05-2013 - 371 - Days

2 . APPLICATION SALE DATE - 17-06-2013 - 345 - Days

TNPSC DEO Exam Hall Ticket Download Now Available

TNPSC DEO Exam Hall Ticket Now Available

         மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இணையதளத்திலிருந்து தற்போது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி ஏன்? - ஆய்வுகட்டுரை




பின்னடைவின் பாடம் !
                    
                     இருபத்துமூன்றாம் தேதியின் கனத்த முற்பகல் நிமிடமொன்றில் தலைமையாசிரியர் அந்த அரக்குவண்ண உறையைப் பிரித்தார். சுற்றியிருந்த ஆசிரியர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஒரு மிரட்சி. ஓர் எதிர்பார்ப்பு.  

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவில்லை எனில் போராட்டம் - தமிழ் மாநில கட்சி தலைவர்

              சமீபத்தில் வெளியான பொதுத் தேர்வு முடிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள், பெரிய அளவிற்கு தேர்ச்சி பெறவில்லை என்பதும், மதிப்பெண் குறைவாக பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. பள்ளியில், அலுவலக பணியாளர் பணியிடங்களும், அதிகளவில், காலியாகவே உள்ளன. 

ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெற வழிமுறைகள்

         ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ திட்டத்திற்கு, ஜூன் 30க்குள், விபரங்களை படிவத்தில் தெரிவித்து, அடையாள அட்டை (ஐ.டி., கார்டு) பெறலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று 'டோஸ்' - Dinamalar

           பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இன்று நடக்கும் கூட்டத்தில், "டோஸ்' கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது

              இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயது முதல் 19 வயதுக்குள் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்புச் சத்து குறைபாடே இதற்கு முதன்மை காரணம். ரத்த சோகையால் பருவம் அடைதல்,மாதவிலக்கு மற்றும் மகப்பேற்றின் போது பெண்கள் உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தொடர் சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்னைகளால் படிப்பிலும் கவனம் குறையும். வாரம் தோறும் இரும்புச் சத்து மாத்திரை மற்றும் இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இக்குறைபாட்டை சரி செய்ய அரசு முயற்சி எடுத்துள்ளது.
 

மாணவ-மாணவிகளுக்கு அனைத்து சான்றிதழ்களும் பள்ளியில் கிடைக்க நடவடிக்கை

              மாணவ - மாணவிகளுக்கு அனைத்து சான்றிதழ்களும் பள்ளியிலேயே கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. 
 

கூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு

            பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்

              கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

துவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

              தமிழகத்தில் துவக்கக்கல்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில் ணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
 

தமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு

           அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை; தமிழக அரசுக்கு நோட்டீசு

          மாநில அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.

அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்

          அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கும் பரிந்துரை தேவைப்படும் காலம் விரைவில் வரும்: மாவட்ட திட்ட இயக்குநர்

கல்வியில் காட்டப்படும் பிரிவினையும் பாகுபாடும்


           ஆழ்வார்பேட்டையில் உணவருந்த விரும்பினால் அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி ஒரு ரூபாய்க்கும், அருகிலிருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே இட்லி ரூ.150-க்கும் கிடைக்கும். இட்லி ஒன்றுதான். ஆனால், விலைதான் வேறுபடுகிறது. இட்லியைப் போன்று கல்வியும் கடைச்சரக்காகிவிட்டது. மாநகராட்சிப் பள்ளி மழலையர் வகுப்புகளில் இலவசச் சேர்க்கையும், தனியார் பள்ளிகள் சிலவற்றில் ஆண்டுக் கட்டணம் இரண்டு லட்ச ரூபாய் வசூலிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

பாடசாலையின் கனவு கட்டுரை!


             கடந்த வருடம் பிரபலமான ஒரு தமிழ் தினசரி செய்திதாளில் வந்த செய்தி ”10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களுக்குள் ஏராளமான மாணவ மாணவிகள் மதிப்பெண் பெற்றுள்ளார்கள். அவர்களில் பலர் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள். ஆனால் இவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் படிக்கவைக்கபட்டு மாநில அளவில் சாதனை புரிந்துள்ளார்கள். ஒருவர் கூட அரசு பள்ளியில் படிக்கவைக்கவில்லை. ஏன்? அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே அரசு பள்ளி மீது நம்பிக்கை இல்லையா? இதற்கு வெட்கப்பட வேண்டாமா?”

         இந்த செய்தி வந்தபொழுது நாம் மிகவும் வேதனைபட்டோம்!. கோபப்பட்டோம்! சுயபச்சாதாபம் கொண்டோம்!. இயலாமை குறித்து ஆற்றாமை கொண்டோம்! இந்த வருத்தத்தில் விளைந்த கட்டுரை தான் இது.

                    முதற்கட்டமாக பல அரசு பள்ளி ஆசிரியர்கள் கூடிய SSA CRC & RMSA பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடம் நாம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தோம்!... 

கேள்வி 1 - அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?

கேள்வி 2 - அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

கேள்வி 3 - அரசு பள்ளிகளின் தரத்தை எவ்வாறு உயர்த்தலாம்? இன்றைய கல்வி முறையில் எந்த வகையிலான கல்வி மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

              இந்த  கேள்விகளுடன் நடந்த கூட்டங்களில் ஆசிரியர்கள் பலரும் தங்கள் கருத்தை ஆர்வமாக பதிவுசெய்தனர். ஆண் ஆசிரியர்களை காட்டிலும் பெண் ஆசிரியர்கள் பலரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூட வெளிப்படையாகவும், தெளிவாகவும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இக்கருத்துகளின் தொகுப்பே நமது இக்கட்டுரை.

கேள்வி 1 - அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளை ஏன் தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறீர்கள்?

  • அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் மனமும், கைகளும் கட்டப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது என்பார்கள்! ஆனால் அரசு பள்ளியில் மாணவர்களை அடித்து திருத்த இயலாது. இதனால் படிக்காமல் ஏமாற்றும் தீய ஒழுக்கங்களையும் கொண்ட மாணவர்களை கண்டு தங்கள் பிள்ளைகளும் கெட்டுவிடுவார்கள்! பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும், அதேசமயம் நாரோடு சேர்ந்த பூவும் கொஞ்சமாவது நாரத்தான் செய்யும். எனவே எங்கள் பிள்ளைகளை அடித்தும், கண்டித்தும் வளர்க்கக்கூடிய தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளோம்!
  • அரசு பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை கிடையாது. ஆனால் பல தனியார் பள்ளிகளிலும் இந்தியாவின் தேசிய மொழியான இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்படுகிறது. இதனால் அண்டை மாநிலத்திற்கு செல்லும்போதும், பல உயர்மட்ட தேர்வுகள் எழுதும்போதும் மாணவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது.
  • முந்தைய காலத்தில் பொதுமக்கள் பலரும் இரண்டுக்கும் மேற்பட்ட பல குழந்தைகளை பெற்றிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவளிக்கவே இயலாத நிலையில் அவர்களை அரசு பள்ளிகளில் படிக்க வைத்தனர். ஆனால் இப்போதோ ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை மட்டுமே பெரும்பாலோர் பெற்றுகொள்கின்றனர். ஆதலால் தனது பிள்ளைகளுக்கு உரிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டும் என நினைக்கின்றனர்.  இந்நிலையில் தன் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான கட்டிடம், மின்விசிறி அல்லது ஏசி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவற்றை வேண்டும் என பொதுமக்கள் நினைத்து இவை பெரும்பாலும் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் சேர்க்கும் போது அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நாங்களும், ஒரு பெற்றோராக தங்கள் பிள்ளைகளுக்கு மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என நினைப்பது தவறா?




 கேள்வி 2 - அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்றால், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
  • அரசு பள்ளிகளில் இந்தியும் ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரப்பட வேண்டும்.
  • அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற இதர பணிச்சுமைகளை குறைத்து முழுமையாக கற்பித்தலில் ஈடுபட செய்ய வேண்டும். 
  • சுகாதாரமான கழிவறை, தூய்மையான குடிநீர், பாதுகாப்பு குறைபாடு இல்லாத கட்டிடங்கள், மின்விசிறி, கணிணி கல்வி போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.



















ஜிடிபியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட அமைச்சர் ஸ்மிருதி இரானி திட்டம்

           மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில்(ஜிடிபி) 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நடிகை ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றுள்ளார். டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்த அவர் தனக்கு இத்தனை பெரிய பதவி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  
 

பொறியியல் படிப்பில் சேர ஜூன் 3-வது வாரத்தில் கவுன்சலிங்

          பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் மாணவ, மாணவிகள் விண் ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் கவுன்சலிங் தொடங்குகிறது.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் சலுகை

          இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா

         தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைசர் தலைமையில் நடந்த ஆய்வுகூட்ட தகவல்

                 பள்ளிக் கல்வித் துறை அமைசர் கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்ட தகவல்


மகாராஷ்டிர மாநில பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கர்

             மகாராஷ்டிரா மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து பாடத்தை சேர்த்துள்ளது.அம்மாநிலம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெண்டுல்கரின் சிறப்பை பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு பாடத்தின் மீது கவனம் ஏற்படும் என்பதால்தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Employment Office Detail - முதுகலை படிப்புடன் இரண்டாம் முறையாக பி.எட் பதிவுசெய்ய வேண்டும்

         முதுநிலைப்படிப்பை பதிவு செய்யும்போது இரண்டாம் முறையாக முதுநிலைப்படிப்புடன் பிஎட் படிப்பையும்தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு

          வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படுமா?

         நடப்பு கல்வி ஆண்டில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்புகள் ஜூன், 2 ல் திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டில் குறைபாடு:ஜுன் 19ல் ஆர்ப்பாட்டம்

        தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில துணைத்தலைவர் கே. அகோரம் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

குரூப் 1, 2 போன்ற அரசு தேர்வுகளில் வெற்றி பெற வழிகள்...

          அரசு பணி என்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவாக உள்ளது. இதில், சாதிக்க பல எளிமையான வழிகள் உள்ளன. இம்மாதம் முதல் குரூப் 1 தேர்வுகளும், தொடர்ந்து பல்வேறு தேர்வுகளும் நடக்க உள்ளன. குரூப் 1 தேர்வு, இனி மாநில குடிமைப்பணி என அழைக்கப்படவுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வில் தற்போது 4 தாள் கொண்டு வரப்பட்டு குரூப் 2 தேர்விலிருந்த நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் போன்ற பணி குரூப் 1 தேர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன.

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு சலுகை

              ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்காக, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) மூலம், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
 

பி.எட். பதிவு செய்யாமல் ஆசிரியர் பணியை இழக்கும் முதுநிலை பட்டதாரிகள்?

               இளநிலை பட்டத்துடன் பி.எட். முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததோடு, முதுநிலைப் பட்டத்துடன் தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மீண்டும் பி.எட். படிப்பை2-ஆவது முறை பதிவு செய்யாமல் ஏராளமான முதுநிலைப் பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

இந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி!

                                                   
          இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே 26ம் தேதி மாலை பதவியேற்றது.  

INDIA POST: அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

         வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive