NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு

           மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு; சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.

கேபினட் அமைச்சர்கள்:

1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.

2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட்விவகாரத்துறை


3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.

4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்புமற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.

5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறைஅமைச்சகங்கள்

6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும்உணவு, வழங்கல் துறை.

7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்போக்குவரத்து துறை.

8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்துறை.

9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.

10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.

11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.

12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம்மற்றும் சட்டம், நீதித் துறை.

13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.

14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.

15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.

16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.

17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில்மற்றும் வேலைவாய்ப்புத் துறை.

18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை

19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை

20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு

21.ராதா மோகன் சிங்- விவசாயம்

22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி

23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று (திங்கள்கிழமை)பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 45 அமைச்சர் களும்பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று அமைச்சர்களின்இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)

1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவுவிவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.

2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம்,பாதுகாப்பு அமைச்சகம்

3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்றவிவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதிபுனரமைத்தல்

4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா

5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர்மேம்பாடு, திறன்சார் மேம்பாடு

7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம்,பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.

8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை

9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை

10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும்நாடாளுமன்றத் துறை.

இணை அமைச்சர்கள்:

1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை

2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை

3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.

4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம்,பஞ்சாயத்து ராஜ் துறை.

5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.

6. கிரண் ரிஜிஜு- உள்துறை.

7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை,கப்பல் போக்குவரத்து துறை.

8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல்துறை.

9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.

10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும்வழங்கல் துறை.

11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத்துறை.

12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.

பிரதமராக பொறுப்பேற்றார் மோடி:

பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்றுகாலை முறைப்படி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

காலை பிரதமர் அலுவலகத்திற்கு வந்த அவரை அதிகாரிகள்பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்துகையசைத்து விட்டு அலுவலகத்திற்குள் சென்ற மோடி, உள்ளேஇருந்த மகாத்மா காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலிசெலுத்திவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

நிதிஅமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி:

நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி, "தன் முன்மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. வளர்ச்சியின் வேகத்தைதுரிதப்படுத்துவதும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதும் தற்போதையதேவை" என்றார்.

வெளியுறவு அமைச்சரான முதல் பெண்:

சுஷ்மா ஸ்வராஜ் (62), இந்திய அரசியல் வரலாற்றில் வெளியுறவுஅமைச்சரான முதல் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

25 வயதிலேயே ஹரியானா அமைச்சரவையில் இடம்பிடித்து. இளம்அமைச்சர் என்ற சாதனையை படைத்தார் சுஷ்மா ஸ்வராஜ்.


பின்நாளில், டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதல்வர், அரசியல்கட்சியின் முதல் பெண் செய்திதொடர்பாளர் ஆகிய பெருமைகளும்சுஷ்மா ஸ்வராஜை சேர்த்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive