Total Pageviews

பள்ளிகளில் யோகா வகுப்புகள் நேரம் மாற்றியமைக்கப்படுமா?


           "தமிழகத்தில் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்" என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

பள்ளி நேரம் மாற்றப்படுமா?.... போக்குவரத்து நெரிசல் குறையுமா? - Dinamalar


           காரைக்குடி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க, அனைத்து பள்ளிகளையும், காலை 8.30 மணிக்கே துவங்கிட, கலெக்டர் ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC & TRB Posting


            தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆசிரியர் தேர்வு வாரியமும் (டி.ஆர்.பி.,) மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.


             சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த மாதிரிப்பள்ளிகள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றதால், புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

வங்கி மூலம் உதவித்தொகை


             மத்திய, மாநில அரசுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துவங்கி, அயல்நாடு சென்று கல்வி கற்பது வரை, கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ரோபோ போட்டி


             பள்ளி மாணவர், "இளம் விஞ்ஞானி விருது" பெற தேசிய, "ரோபோ தொழில்நுட்பம்" போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தை சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டுநர்...! மகன் ஐஏஎஸ் அதிகாரி..!


   
வறுமைதான் என் வைராக்கியத்தை உறுதிப்படுத்தியது..!

டாப்சிலிப் மலைவாழ் அரசு பள்ளியில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் மாணவர்களுக்கு வகுப்பு நடக்கிறது


     பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் உள்ள மலைவாழ் அரசு உறைவிட நடுநிலை பள்ளி உள்ளது.
 

எஸ்.எம்.எஸ்., ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்


                எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன், ரயில்வே ஏஜன்சிகள், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. 

தொலை நிலைக் கல்வி மையங்களுக்கு சிக்கல் : பல்கலை மானியக்குழு புது உத்தரவு


           "அரசு சார்புள்ள மற்றும் தனியார் பல்கலைகள், தொலை நிலைக் கல்வி படிப்பு மையங்களை, படிப்பு எல்லை அல்லது மாநிலத்திற்குள் மட்டுமே நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டு உள்ளது.
 

சனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍?-poonthalirblog


               கி.ராஜ‌ நாராய‌ண‌ன் எழுதிய‌ "தாத்தா சொன்ன கதைகள்" சென்ற‌ முறை புத்த‌க‌க் க‌ண்காட்சியில் வாங்கினோம். சிறு க‌தைக‌ளின் தொகுப்பு. 

பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


           விண்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தில் கிளைஸ் 667-சி என்ற நட்சத்திரத்தை மூன்று கோள்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. 

மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை


            "மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. 
 

நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும் !--------இவைகளில் இருந்து.


            இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் இன்றளவும் தேரிகறது ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.
 

பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்கள் மட்டுமே! கல்வித்துறை உத்தரவு


          பிளஸ்-2 வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம் கார்டுக்கு சேவைக் கட்டணம் அமல்


         ஏடிஎம் அட்டையுடன் தொடர்புடைய எஸ்எம்எஸ் சேவைக்கு ஒரு காலாண்டுக்கு ரூ.15 கட்டணமாக ஆண்டுக்கு ரூ.60 வசூலிக்கும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அமல்படுத்தியுள்ளது.
 

ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்


            ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும் தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். 
 

இந்த ஆண்டு முதல் அமலாகிறது மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கல்வி உதவித்தொகை

            இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. 

ஊர்ல உள்ள எல்லா பய புள்ளைகளும் படிச்சாகணும் - தினமலர்


         நல்லாசிரியர் ராமசாமி, இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.


TET Hall Ticket only by Online| ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்


               ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏழாவது சம்பள கமிஷனை அமைக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தம்: ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை


            ரெயில்வே தொழிலாளர்களின் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்கங்களில் 10.26 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனம் மிகப் பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.

புதிய SSA மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


              புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனெவே அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குநராக பணிபுரிந்த திரு.முகமது அஸ்லாம், இ.ஆ.ப அவர்களை சிறுபான்ன்மை நலத்துறை ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாவட்ட அளவில் விடுமுறை பட்டியல் அறிவிப்பதில் இழுபறி, ஆசிரியர்கள் கவலை


             இந்த கல்வியாண்டில் பள்ளி திறந்து ஒருமாதம் கடந்த நிலையில் தொடக்க கல்வி அதிகாரிகள் ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய பள்ளி நாட்களை திட்டமிடுவதில் மெத்தனம் காட்டுவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு


                ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு, மறுகூட்டல் முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு


                சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு


              கலந்தாய்வு மூலம், கல்லூரிகளில் சேரும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு மற்றும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம், அரசால் வழங்கப்படும்.

நெட் தேர்வு: சென்னையில் 14 ஆயிரம் பேர் பங்கேற்பு


              யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், கல்லூரி விரிவுரையாளர் தகுதிக்கான தேசிய தகுதி தேர்வு (நெட்), சென்னையில், நாளை நடக்கிறது. சென்னையில், 11 மையங்களில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

விவரம் கோரி உத்தரவு

            தொடக்கக் கல்வி - அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் தமிழ்வழி / ஆங்கில வழியில் 1ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி உத்தரவு.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

 
          மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். 
 

TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

          
*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.

ஆய்வுக்கூட்டம்

           தொடக்கக் கல்வி - CPS திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணக்குத்தாள் தொகுத்து வழங்குவது குறித்து அரசு தகவல் தொகுப்பு விவர மைய அலுவலர்கள் மற்றும் அரசு தணிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டம் 03.07.2013 அன்று காஞ்சிபுரம், திருச்சி மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.

 

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்


            ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது? - நாளிதழ் செய்தி

           பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று வரை வழங்கப்படவில்லை.

தேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,


             மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்"


              பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன் நிரம்பிவிட்டன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை


              பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படை வசதிகளற்ற பி.எட். கல்லூரிகள் மூடல்


            "தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார்.

போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"


          டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி


          உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

PGTRB - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஒரு வாரத்தில் ஹால் டிக்கெட்


           முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் 2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

TRB தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை


           மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்ணை எடுத்தால்தான், அரசு பணியில் சேர முடியும்.


மாற்றித்தான் பார்ப்போமே... தினமணி தலையங்கம்


              பள்ளி வேலைநேரத்தில் மாற்றம் இல்லை; பாடவேளையில் மட்டுமே மாற்றம்'' என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது.

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது


           அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு


          நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு


          இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள் செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி, தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசூலாகாத கல்வி கடன்கள்: கனரா வங்கி புதிய திட்டம்


              வசூலாகாத கல்விக் கடன்களை திரும்பப் பெறுவதற்கு, கடன் சீர்திருத்த திட்டத்தை, கனரா வங்கி செயல்படுத்த உள்ளது. இவ்வங்கியின் வசூலாகாத கல்விக் கடன், 9 சதவீதமாக உள்ளது. இதை, 2 சதவீதமாகக் குறைக்க இவ்வங்கி திட்டமிட்டுள்ளது.

ரயிலில் இடமில்லை... பொறியியல் கலந்தாய்வு செல்லும் மாணவர்கள் தவிப்பு


           நாமக்கல் பகுதிகளில் இருந்து, சென்னைக்கு, பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்லும் மாணவர்கள், பேருந்து மற்றும் ரயிலில் இடம் கிடைக்காமல், அவதிப்படுகின்றனர். எனவே, சேலம் வழியாக, சென்னைக்கு, சிறப்பு ரயில் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு


           கல்லூரிகளில், செமஸ்டருக்கான வேலை நேரம் கூடுதலாக, 150 முதல், 450 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சுற்றறிக்கைகளை உயர்கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.

எம்.டி.எஸ்., படிப்புக்கு ஜூலை 2ம் தேதி கலந்தாய்வு


          "முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு (எம்.டி.எஸ்.,), ஜூலை, 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்" என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"


          டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

''ஆசிரியர் பணி ஒரு தொழில் அல்ல!''


           ''உலகம் முழுவதும் ஆரம்ப கல்வி கற்பிக்கவே 1.7 மில்லியன் ஆசிரியர்கள் இன்னும் தேவைப்படுகிறார்கள். 
 

பிளஸ்–1 மாணவிகளுக்கு நன்னெறி பயிற்சி முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் அறிவுரை


பிளஸ்–1 வகுப்புகள்

          தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–1 வகுப்புகள் தொடங்கி உள்ளன. 10–வது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் படிப்பை தொடர்கிறார்கள். சிலர் வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை


          அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும், பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

கவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு


         மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெறுவது அத்தியாவசியம். காப்புரிமைச் சட்டம் எனப்படும் பேடன்ட் ரைட் என்பது ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது.

தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! - டாரத்தி

 

REAL STATUS OF GOVERNMENT SCHOOL TEACHERS
    பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்!


பி.எட்., பயிலும் ஆசிரியர்களை, அவர்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளியிலேயே, பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும்

         ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் பி.எட்., பயிற்சிக்காக, விடுப்பு எடுத்து செல்வதால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
 

மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்


           மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின் துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
 

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற மாணவர்கள் தவிப்பு


           கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
 

TEACHER ELIGIBILITY TEST SYLLABUS

TEACHERS ELIGIBILITY TEST 2013 NOTIFICATION, PROSPECTUS and SYLLABUS for Paper 1 and 2

 
TEACHER ELIGIBILITY TEST PROSPECTUS

அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10ஆம் வகுப்பு கையாளும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்க முடிவு


* மாவட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி : 04.07.2013 & 05.07.2013

* கணித பாட ஆசிரியர்களுக்கான 4 நாள் பயிற்சி : 10.07.2013, 11.07.2013 மற்றும் 22.07.2013, 23.07.2013
 

SSA- 2013-14ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது, 40% ஆசிரியர்கள் கலந்து கொள்ள உத்தரவு.

           தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான 2013-14ஆம் கல்வியாண்டின் முதல் CRC 06.07.2013 அன்று தொடங்குகிறது. 

கனவு ஆசிரியர் - கற்றலை இனிமையாக்கும் ஆனந்தி டீச்சர்!

        தமிழகத்தில் சி.சி.இ. மதிப்பீட்டு முறை நடைமுறைக்கு வந்த பிறகு, பள்ளி மாணவர் களிடையே கற்றல் இனிமையாகி இருக்கிறது. இனிமையான சூழலுடன் மாணவர்கள் பாடங்களைச் சுமையின்றிக் கற்கிறார்கள்.


வீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்?

      
            நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். 
 

சாதனை மாணவர்களுக்கு, முதல்வர் இன்று மீண்டும் பரிசு


          பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்த, 211 மாணவர்களுக்கும், இன்று கோட்டையில், முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் பரிசு வழங்குகிறார்.

மாணவர்கள் கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்


         தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆய்வுக்கட்டுரை போட்டியில் சிதம்பரம் மாணவி சாதனை


         கூகுள் இணையதளம் நடத்திய, உலக அளவிலான, "அறிவியல் போட்டி 2013" ஆய்வுக் கட்டுரைப் போட்டியில், சிதம்பரம் மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் துவக்கம்


          தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம் தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
 

பள்ளி மாணவர்களுக்கு கணித அறிவாற்றல் குறைவு


              ஐந்தாம் வகுப்பு பயிலும் 46.5 சதவிகித மாணவர்களுக்குக் கணித அறிவாற்றல் மிகவும் குறைவாக உள்ளது என்று இந்திய அளவில் தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது,
 

அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்


           இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
 

பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்


         "பொறியியல் படிப்பில் சேரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட வேண்டும்.
 

அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல் சார்பான விளக்கம்


          "ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.
 

ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்


        "பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி


          டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை, 6 லட்சத்தை எட்டியுள்ளது; கடைசி நாளான, ஜூலை, 1ம் தேதிக்குள், மேலும், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது.
 

வால்பாறையில் கனமழை: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

 
      வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

குரூப்- 4: பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சியளிக்க உத்தரவு


         குரூப்- 4 தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வழங்க, வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
 

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்


            இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 

ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


          நீதிமன்றங்கள் வழக்கை உடனுக்குடன் முடிக்கவும், அவமதிப்பு வழக்கை தவிர்க்கவும் புதிய மென்பொருள் நடைமுறைப்படுத்த 25.06.2013 அன்று ஒரு நாள் பயிற்சி நடத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

பள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் - நாளிதழ் செய்தி

 
             பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம் - நாளிதழ் செய்தி


           தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
 

பள்ளிக்கூடங்கள் திறக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை, பாடவேளைகளில் மட்டுமே மாற்றம் - இயக்குனர் தகவல்

 
      பள்ளிக்கூடம் தொடங்கும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு இல்லா -விடில் “கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்" மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


          ‘‘குற்றச்சாட்டு எதுவும் இல்லாத போது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும்’’ என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 

பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்


           புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்தன.
 

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்


1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
 

We Need Specimen copy - Govt School Teachers

பாடம் நடத்த புத்தகம் இல்லை: பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி

         பாடம் நடத்த புத்தகங்கள் வழங்கப்படாததால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசு, 2011ம் ஆண்டில், பழைய பாடத்திட்டங்களை மாற்றி, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தியது.

24.06.13 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களால் நடத்தப் பட உள்ள தலைமையாசிரியர்கள் கூட்டம் சார்பான பொருள் விவரம்
 குறிப்பு : ஒரு சில ஒன்றியங்களில் மேற்காணும் பொருள் சார்பான கூட்ட தேதி மாறுபடலாம்.

"இனி பள்ளிகளில் புத்தகங்கள் இருக்காது"


            தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். 

Proceedings


1.தொடக்கக் கல்வி-சர்வதேச அளவில் பதக்கம் வருங்கால விளையாட்டு வீரர்களை கண்டறியும் திட்டம் - 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தி, உடற்திறன் திறமை அறிக்கை அட்டை செயல்படுத்த தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

2. 2013-14ம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளி வாரியாக மாணவர்களின் சேர்க்கை குறித்து அறிக்கை -யினை தொகுத்து அனுப்ப SPD உத்தரவு.

தமிழகத்தில் பள்ளி நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக் கல்வித்துறை - Source Pudhiya Thalaimurai

 
       தமிழகத்தில் பள்ளிகளின் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 
 

பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்


         அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம் பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சாதனை மாணவர்களுக்கு மீண்டும் பரிசளிப்பு விழா: கல்வித்துறை ஏற்பாடு


         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால், கடும் ஏமாற்றமடைந்தனர். 

சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய மருத்துவ படிப்புகள்


         சென்னை மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் நல மருத்துவம் தொடர்பான, புதிய மருத்துவப் படிப்புகள் துவங்கப்படுகின்றன.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு எப்போது?


         மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

பி.இ., மாணவர் சேர்க்கை: என்.ஆர்.ஐ., இடங்கள் குறைப்பா?


         பி.இ., படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான (என்.ஆர்.ஐ.,) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று இப்பிரிவின் கீழ், கலந்தாய்விற்கு வந்திருந்த பலர், அண்ணா பல்கலை அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

நிறைய மதிப்பெண் வேண்டுமா?


          கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சென்ற ஆண்டு படித்ததை விட, இந்தாண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை மாணவர்களிடம் இருக்கும். அதற்கு எப்படி தயாராகப் போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.

எதிர்பார்ப்புடன் வந்தோம். ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்


        அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கன  இடங்கள் குறைவாக இருப்பதாக அறிவித்ததால் குழப்பம் நிலவியது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


          இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில், தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை மதிப்பெண்களை, தலைமையாசியரிடம் பெற்று, அரசுத்தேர்வுகள் இயக்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று, அரசுத் தேர்வுகள் இயக்கம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

10ம் வகுப்பு பாடத்தில் காமராஜர் பிறந்த ஊர் மாற்றம்


           பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் புத்தகத்தில், காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகே, விருதுபட்டி என, தவறுதலாக குறிப்பிட்டுள்ளது.
 

2013-14ஆம் கல்வியாண்டு குறுவள மையம் மற்றும் பணியிடைப் பயிற்சி நாட்கள் விபரம்


இந்த வருடம் ஆசிரியர்களுக்கு மொத்தம் 7 நாட்கள் மட்டுமே பயிற்சி நாட்கள்.
 
குறுவள மையம் 3 நாட்கள் CRC Training
(இடைநிலை மற்றும் பட்டதாரிகள்)
1. 06.07.2013
2. 26.10.2013 
3. 04.01.2014
பணியிடைப் பயிற்சி 4 நாட்கள் 1. 20.08.2013 BRC Training
2. 04.09.2013
3. 20.11.2013 
4. 04.12.2013

சீருடை அணிந்திருந்தாலே பஸ்சில் இலவச பயணம்: போக்குவரத்து துறை வாய்மொழி உத்தரவு

        
         பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே, இலவசமாக பயணிக்க அனுமதிக்கலாம்' என, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, வாய்மொழி உத்தரவு இடப்பட்டுள்ளது.
 

காலை 9 மணிக்கு இறைவணக்கம் 24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்


           தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல் காலை 9 மணி முதல் துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 

TET Online TEST

அன்புள்ள வாசகர்களுக்கு,

             வணக்கம், நமது பாடசாலை வலைத்தளத்தில் பல்வேறு TET Study Materials ஐ பதிவேற்றி உள்ளோம். தற்போது தேர்வை எதிர்நோக்கி உள்ள ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் அவர்களின் அறிவுத்திறனை சோதித்து மேம்படுத்திக்கொள்ள "Rani TET Park" Coaching Center உடன் இணைந்து நமது வலைதளத்தில் TET Online Test நடத்த உள்ளோம்.                           

          3 மணிநேரம் நடைபெறும் வகையில் இத்தேர்வு நடைபெறும். தங்களின் மதிப்பெண் மற்றும் சரியான விடை தங்களின் Email ID க்கு அனுப்பி வைக்கப்படும்.


Blog Archive