PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழகத்தில் பள்ளி நேரத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக் கல்வித்துறை - Source Pudhiya Thalaimurai

 
       தமிழகத்தில் பள்ளிகளின் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது. தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
          ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது. பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது. 
 
       இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
 
            எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது. அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம்‌ தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





2 Comments:

  1. நல்லா கேட்டுக்குங்க நாங்க ஸ்கூல் டயத்த மாத்தல மாத்தல.

    ReplyDelete
  2. காலை வேளையில் பேருந்து கிடைப்பது என்பது கிராமப்புற மாணவர்களுக்கு சிரமம்.நகரங்களுக்கு ஒரு நேரமும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு நேரமும் என அமைந்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group