Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2026






திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:50.இடன் அறிதல்

குறள் எண்:493

குறள்:

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

பொருள்:

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

பழமொழி :

One doth the act, another hath the blow.

பாவம் ஒரு பக்கம் ; பழி ஒரு பக்கம்.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும். எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி : 

“திறமைக்கு வாய்ப்பு கிடைக்க காத்திருக்காதே; உன் முயற்சியால் வாய்ப்பை உருவாக்கு.”

Thought for the Day :

Democracy Day: “Respect every voice, uphold every responsibility.”

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை? 

 25 மாநகராட்சிகள்

 2. தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் எத்தனை? 

 137 நகராட்சிகள்.  

English words :

1. Subtle – Not easily noticed, நுட்பமான.


2. Versed – Well-informed or skilled, நன்கு அறிந்தவர் / திறமைமிக்கவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆறுகள் மிக முக்கியமானவை.
முக்கிய ஆறுகள்:
காவிரி
தென்பெண்ணை
பாலாறு
வைகை
தாமிரபரணி
பவானி
அமராவதி
நொய்யல்
கொள்ளிடம்

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் 85+14=18, 96+27=24 என குறிப்பிட்டால் 14+27ன் மதிப்பு என்ன? 

 (1) 14. 

 (2) 27.

(3) 20. 

 (4) 26.

 விடை: (1) 14

செப்டம்பர் 14

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

நீதிக்கதை

ஆவியில் வேகவைத்த உணவின் சிறப்பு

நீதிக்கதை

ஒரு சிறிய ஊரில் ஜகதீஷ் மற்றும் மோனிகா என்ற அண்ணன், தங்கை வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய அம்மா தினமும் வீட்டில் சுவை யான உணவுகளைச் சமைத்து கொடுப்பார். ஆனால் ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவற்றின் மீதுதான் அதிக விருப்பம்.

ஒருநாள் காலை அம்மா இட்லி, இடியாப்பம் மற்றும் ஆவியில் வேகவைத்த காய்கறிகளைத் தயாரித்தார்.

“அம்மா, தினமும் இட்லி, இடியாப்பமா? எங்களுக்கு பூரியும், வடையும் வேண்டும்!” என்று ஜகதீஷ் கேட்டான்.

“ஆமாம் அம்மா, எண்ணெயில் பொரித்த உணவுதான் ரொம்ப சுவையாக இருக்கும்!” என்று மோனிகாவும் சொன்னாள். அப்போது அப்பா சிரித்துக்கொண்டே , “குழந்தைகளே , சுவை மட்டும் பார்த்து உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. உடலுக்கு எது நல்லது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு அதிக எண்ணெய் தேவையில்லை . இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , ஆவியில் வேகவைத்த காய்கறிகள் போன்றவை எளிமையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.  வீட்டில் தயாரித்த சத்தான உணவுகளை விரும்பி சாப்பிடுவது நல்ல பழக்கம்,” என்று விளக்கினார்.

அம்மா அன்று ஜகதீஷுக்கும் மோனிகாவுக்கும் வண்ணமயமான காய்கறிகளுடன் ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை செய்து கொடுத்தார்.

இருவரும் சுவைத்துப் பார்த்துவிட்டு, “அம்மா! இது ரொம்ப சுவையாக இருக்கிறது. இனிமேல் ஆவியில் வேகவைத்த உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுவோம்!” என்றனர்.

அதன்பிறகு, அவர்கள் வீடில் வாரத்தின் பல நாட்களில் இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை , வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகள் இடம்பெறத் தொடங்கின.

நீதி:

சுவையான உணவு மட்டுமல்ல; உடலுக்கு ஏற்ற சத்தான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆவியில் வேகவைத்த உணவுகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு நல்ல பகுதியாக இருக்கலாம். 

இன்றைய செய்திகள்

15.09.2026

🗒️செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் உலகை ஆட்டிப் படைக்கிறது’ - ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

🗒️ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் நாட்டின் முதல் டி.ஆர்.ஐ. ஆலை அமைக்க மத்திய அரசு திட்டம்.

🗒️தமிழகம் மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தலில்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேல்  உள்ளவர்கள் தபால் ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: தன்வி சாம்பியன் பட்டம் வென்றார்

🏀ஜப்பான் பாரா பேட்மிண்டன்: பிரமோத் பகத்துக்கு இரட்டை பதக்கம் இந்தியாவின் பிரமோத் பகத், சக நாட்டவரான யு.குமாரை தோற்கடித்து சாதனை.

🏀உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று வரலாறு படைத்த தீரஜ்.

Today's Headlines

🗒️ “Artificial Intelligence is ruling the world in all fields,” said High Court Judge Anand Venkatesh.

🗒️ The Central Government plans to set up the country’s first DRI plant that will run using hydrogen fuel.

🗒️ In the Tamil Nadu and Puducherry by-elections, the Election Commission has allowed persons with disabilities and people above 85 years of age to vote by postal ballot.

🏀 Sports News

🏀 Asian Junior Badminton: Tanvi won the championship title.

🏀 Japan Para-Badminton: Pramod Bhagat won two medals. He defeated fellow Indian U. Kumar and created a record.

🏀 Dheeraj made history by winning gold in the World Archery Championship.

Covai women ICT_போதிமரம்

 

Quarterly / Term 1 Exam 2026 - 2026 - 2027 - Time Table Download


Tamilnadu Quarterly / Term 1 Exam Syllabus 2026 Download

12th, 11th, 10th, 9th to 1st Standard All Standards - Latest Study Materials - English Medium & Tamil Medium - Download

12th, 11th, 10th, 9th - 1st Standard All Standards - Latest Study Materials - English Medium & Tamil Medium - Download


10th, 11th, 12th Standard - Monthly Test & Unit Test Question Papers & Answer Keys

10th, 11th, 12th Standard - Monthly Test & Unit Test Question Papers & Answer Keys

10th, 11th, 12th Standard - Monthly Test & Unit Test Question Papers & Answer Keys

     

10th Standard - Study Material - PDF Download

 


12th Physics - Study Material - PDF Download

 


10th History - Time Line - Study Material

 


Quarterly Exam - Model Question Paper - PDF Download

 


தொலைந்த பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் அசல் நகல் பெற என்ன செய்ய வேண்டும்?

தொலைந்த பள்ளிக்கல்வி சான்றிதழ்கள் அசல் நகல் பெற என்ன செய்ய வேண்டும்?

 படி 1 (காவல் துறை அறிக்கை): சான்றிதழ் தொலைந்துவிட்டதென்றால், உடனடியாக தமிழ்நாடு காவல் துறையின் இணையதளத்தில் LDR (Lost Document Report) அல்லது ஆன்லைன் FIR பதிவு செய்து, அந்தப் புகாரின் நகலைப் பெற வேண்டும். 

 படி 2 (வட்டாட்சியர் சான்றிதழ்): காவல் துறை அறிக்கையை வைத்துக் கொண்டு, உங்களது பகுதி தாசில்தாரிடம் (Tahsildar) "சான்றிதழ் தேடியும் கிடைக்கவில்லை" என்ற சான்றிதழைப் (Non-Traceable Certificate) பெற வேண்டும். (குறிப்பு: சான்றிதழ் தீ விபத்திலோ அல்லது வெள்ளத்திலோ சேதமடைந்திருந்தால் நேரடியாக தாசில்தாரிடம் சான்றிதழ் பெறல

படி 3 (பள்ளித் தலைமை ஆசிரியர் ஒப்புதல்): பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன், தாசில்தார் சான்றிதழ், LDR நகல் மற்றும் கட்டணம் செலுத்திய அரசாங்க சலான் (Challan) ஆகியவற்றை இணைத்து, நீங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் (Headmaster) சமர்ப்பிக்க வேண்டும். 

 படி 4 (அரசிதழ் வெளியீடு மற்றும் ஒப்புதல்): பள்ளித் தலைமை ஆசிரியர் அதனைச் சரிபார்த்து மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு (DEO Office) அனுப்புவார். அங்கு சான்றிதழ் தொலைந்தது குறித்த அறிவிப்பு அரசாங்க அரசிதழில் (Government Gazette) வெளியிடப்படும்.


 படி 5 ( சான்றிதழ் பெறுதல்): அதன் பின்னர், சென்னை அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் புதிய இரண்டாம் படி (Duplicate) மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட்டு உங்களது பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

10th Standard - Science - Study material - PDF Download

 


12th Standard - Physics - Study material - PDF Download

 


TMCMTSE - Test 6 - Question Paper - PDF Download

 


12th Standard - Commerce - Study Material - PDF Download

 


Pre Quarterly Exam - Question Papers - PDF Download

 


11th Commerce - One Marks Question Bank - PDF Download

 


10th Standard - Maths - Study Material - PDF download

 


12th Standard - Physics - Study Material - PDF Download

 


12th Standard - Physics - Study Material - PDF Download

 

10th Standard - Social Science - Study Material - PDF Download

 

10th Standard - Science - Study material - PDF Download

 

12th Standard - Tamil - Study Material - PDF Download

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive