Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.


பணிநிரவல் கவுன்சிலிங்
1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளிசனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள்செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கவுன்சிலிங்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு கவுன்சிலிங்
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம்,கணிதம்அறிவியல்சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

Proceeding publish in soon...

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில், அவர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது



     பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில், அவர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த உத்தரவை அமல்படுத்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு / அரசு உதவி பெரும் உயர் நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு கீழ் கண்ட வகைகளில் கல்வி உதவி தொகை வழங்க பள்ளி கல்வி இயக்குனரகத்தில் இருந்து விவரம் கோரப்பட்டு உள்ளது.





  1. சமஸ்கிருதம் பயிலும் 9,10,11,12 மாணவர் விவரம்.
  2. இலங்கை அகதிகள் தவிர்த்து ஏனைய அகதிகளின் மாணவ குழந்தைகள்  விவரம் 
  3. இராணுவ பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்குதல் சார்பு.
  4. முன்னால்  இராணுவ பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை வழங்குதல் சார்பு.

CPS - Mode of Recovery GO

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


     10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்


        பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு


         பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:  வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை (2010-11) நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஜூலை 1-ம் தேதி மீண்டும் கலந்துகொள்ளலாம்.  இதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லையென்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலை நகல் எடுத்தும் கலந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதி திராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை


         பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக கிராமப்புற பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ஏழ்மையினால், படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், நடப்பு ஆண்டு முதல் கிராமப்புற ஆதிதிராவிட மாணவிகள் மட்டுமின்றி, ஆறாம் வகுப்பில் சேர்ந்துள்ள ஆதிதிராவிட நகர்ப்புற மாணவிகளுக்கும் ஊக்கதொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தை வரவேற்ற, பழைய மாணவர் சங்கத்தினர்,தொகை உயர்த்தி வழங்கினால், மேலும் பயனுள்ளதாக இருக்கும் என அரசை வலியுறுத்தி உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 (TNTET 2012) - அனைத்து மாணவர்களின் தேர்வு மைய விவரம்- Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Venue wise Individual Query for the Candidate



Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.


           அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பணியிடங்களின் காலிப்பணியிட அறிக்கை, மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலிலுள்ள குறைபாடுகளையும், முரண்பாடுகளையும் களைவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது இரட்டைப் பட்டங்கள் குறித்து சர்ச்சை பெரிய அளவில் உருவாகியுள்ளதால் அதுகுறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் அரசாணை எண்.15ன்படி உருவாக்கப்பட்ட 1267 பணியிடங்களை பதவிஉயர்வு கலந்தாய்வில் காட்டுவதா என்பதை குறித்தும் முடிவெடுக்கப்படும் என்றும் மேலும் இந்த அரசாணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி துறையை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்


         அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.
வாரத்திற்கு 10 பாட வேளைகளில், நீதி போதனை பாட வேளைகள் ஒதுக்கீடு செய்து கொள்வர். இந்த பாட வேளைகளில் கற்பித்தல் பணிகளை பலர் செய்வதில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் மணி விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 பாட வேளை, மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை தவறாது செய்ய வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் எந்த பாடத்தில் பட்டம் பெற்றுள்ளனரோ அந்த பாடத்தில் குறைந்தபட்சம் எட்டு பாட வேளைகளாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மீதி இரண்டு பாட வேளைகள், நீதி போதனை போன்ற பாடங்களை கற்பித்துக் கொள்ளலாம். இதை, அனைத்து தலைமை ஆசிரியர்களும் தவறாது பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Dear Friends - உங்கள் கவனத்திற்கு!... Alternate SMS Channel....


நம்முடைய இணையதளத்தில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் (SMS) பலருக்கு சில நாட்களாக வருவதில்லை என தொடர்ந்து தகவல்கள் வருகிறது. இதற்கு காரணம் GOOGLE Activation Rules ஆல் உரிய காலத்தில் நீங்கள் ACTV என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS அனுப்பி இருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டு இருக்காது . குறுந்தகவல்கள் (SMS) வராதவர்கள் உடனே 

ACTV

என்று type செய்து 

என்ற 9870807070 எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

மேலும் GOOGLE SMS பெறுபவர்கள் கூட (AlreadyMembers) கூடுதலாக ஒரு Alternate SMS சேவையை  Activate செய்யுங்கள்

JOIN PADASALAISMS

என்று type செய்து

0 92195 92195

என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

இனி NEW MEMBERS அனைவரையும் இரண்டு SMS Service யும் Activate செய்ய வழி காட்டுங்கள் PADASALAISMS ஐ type செய்யும்போதுஇடம் விடாமல் சேர்த்தே type செய்ய வேண்டும் 

ON PADASALAISMS

என்று type செய்து

98 70 80 70 70

என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

JOIN PADASALAISMS

என்று type செய்து

0 92 195 92 195

என்ற எண்ணிற்கு SMS செய்யுங்கள்.

தொடக்கக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை பணிநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு.


அரசாணை (டி1)   எண். 183  பள்ளிக்கல்வித்(ஆர்1) துறை நாள். 12.06.2012
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 035604 / அ1 / 2012 நாள்.  .06.2012

Click Here & Download GO

ஆசிரியர் கல்வித்தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு


          ஆசிரியர் கல்வித்தேர்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் முடிவு வெளியிடப்பட்டது. இத்தேர்வுகள் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் நடத்தப்பட்டது. மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த அனைவரும் அவர்கள் படித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அல்லது அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்திற்கு சென்று, மறுகூட்டல் முடிவை அறிந்து கொள்ளலாம். ஆசிரியர் கல்வித்தேர்வுக்கான மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - மாணவர் சேர்க்கை - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு விவரம் தொடக்கக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 21189 / ஜே3 / 2012,.நாள். 19.06.2012 

தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 16062012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாணவர் சேர்க்கை சார்பான விவரங்கள் இயக்குநரால் 19.06.2012 க்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் உரிய படிவத்தில் இயக்குநருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையதளம் வழியில் கவுன்சிலிங் : SCERT அசத்தல்

பணியிட மாறுதல், பதவி உயர்வு, "கவுன்சிலிங்' என்றாலே, பெரிய ஏற்பாடுகளும், அதிகாரிகள் வருவதும், போவதுமாக ஒரே பரபரப்பு போன்ற காட்சிகள் கல்வித்துறையில் தென்படும். இதற்கு மாறாக, சத்தமே இல்லாமல், காசை கரியாக்காமல், இணையதளம் மூலம் அமைதியாக நேற்று முதுநிலை விரிவுரையாளர் பதவி உயர்வு, "கவுன்சிலிங்'கை நடத்தியது.

பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக பிஎட் படிக்கலாம்!


         பிளஸ் டூ படித்த மாணவர்கள் நேரடியாக நான்கு ஆண்டு கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பையும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பையும் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

TET தேர்வு : மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்

            ஆசிரியர் பணி நியமனம் முழுவதும் வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையாக நடைபெறுகிறது. முறைகேடான வழிகளில் பணி நியமனம் பெற்றுத்தருவதாகக் கூறும் மோசடி பேர்வழிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி புதன்கிழமை கூறியது:

Recruitment of Graduate Assistants (Backlog Vacancies) through Employment Registration State Seniority for 2010 - 11 - List of Candidates Called for Certificate Verification


Teachers Recruitment Board  College Road, Chennai-600006



Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011 
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION 

Click here and Know your status.....

விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு


           பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.
கடந்த, 2010-11ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.

கருணை அடிப்படையில் வேலை பெறும் திருமணமாக இருக்கும் பெண் குடும்ப உறுப்பினர்களிடம் மறுப்பின்மை சான்றையும் தான் மற்றும் தன் துணையும் குடும்ப உதவி உறுதி ஆவணமும் அளிக்கும் நிலையில் - வேலை அளிக்கலாம் - அரசாணை வெளியீடு



     கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன. 

CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்


சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் ந.க.எண். 796 / ஈ2 / 2012 , நாள். 15.06.2012 

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பாக தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் தற்பொழுது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வகுப்புகளை இக்கல்வியாண்டில் கையாண்டு வருகின்றனர்.

1,040 மையங்களில் டி.இ.டி. தேர்வு: ஹால் டிக்கெட் அனுப்பும் பணி துவக்கம்


         ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் துவங்கியது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


      இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive