Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

               தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு வழங்கியது எதிர்த்து வழக்கு, தமிழக அரசு இன்று பதில் தாக்கல்

            சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய இன்று வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இன்று தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

UGC NET தேர்வில் OBC பிரிவினருக்கு புதிய மதிப்பெண் சலுகை!

 
           நெட் தேர்வை எழுதும் ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறுவதற்கான விதிமுறையை சற்று தளர்த்தும் செயல்திட்டத்திற்கு யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அவர்கள் இனிமேல் 55% மதிப்பெண் பெற்றால் போதுமானது.
 

இணைப்பு பள்ளிகளில் தனி பயற்சி வகுப்புகளுக்கு தடை - CBSE அதிரடி

         சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவது மற்றும் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய படிப்புகளை நடத்துவது உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்று சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
 

கேட் தேர்வில் ஒரு வினாவுக்கு கூட பதில் அளிக்காதவருக்கு 165 மதிப்பெண்கள்-சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 
          இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) இந்தோர் மையத்தில் 8இடங்களை காலியாக வைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
 

Flash News: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் அனுமதி.


               இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

குரூப்-4 ரிசல்ட் தயார் எந்நேரத்திலும் வெளியிடப்படலாம்.


            டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு தயாராக உள்ளது. எந்நேரத்திலும் ரிசல்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு.


          தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியுதவிபெறாத 5 ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் சங்கங்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு 2013 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்

 
          கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை

 
           பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய 715 கோள்கள்: நாசா கண்டுபிடிப்பு


           சூரிய குடும்பத்திற்கு வெலியே புதியதாக 715 கோள்கள் உள்ளதை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் கெப்ளர் தொலை நோக்கி இதனை கண்டுபிடித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

 
           ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.
  

பிளஸ்2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிச்சுமை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்

 
          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளதால் உயர்நிலை மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு

 
              நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது :

 
           கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.

முழு மதிப்பெண் அள்ளுவது எப்படி?

 
              என்ன வியூகம் வகுத்து, பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டால், முழு மதிப்பெண் பெறலாம் என, தனது கடந்தாண்டு அனுபவங்களை 'டிப்ஸாக' தருகிறார், 2013ம் ஆண்டில், பிளஸ் 2வில், மதுரை மாவட்டத்தில் முதல் 'ரேங்க்' பெற்ற சி.இ.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஜேஸ்வரி: பொதுவாக, அரசு தேர்வு என்ற டென்ஷனை முதலில் மூட்டை கட்டிவிட வேண்டும்.
 

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET EXAMS PAPER I AND II வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB அனைத்து வழக்குகளும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.

வேலை வேண்டுமா?

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார்.

புதிய ஐடியா: இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

தேடிப்போய் கிடைத்த புதையலை விட தானாகத் தட்டுப்பட்டு கிடைத்த பொக்கிஷங்கள் எனக்கு அதிகம்.

12 ஆயிரம் ஆசிரியர் "ஆப்சென்ட்": பாய்கிறது நடவடிக்கை.

தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த 12 ஆயிரம் ஆசிரியர், நேற்று விடுப்பு எடுத்து, போராட்டம் நடத்தினர்.

ஸ்டிரைக் செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

TET EXAMS PAPER I AND II சென்னை உயர்நீதிமன்றத்தில் 27 .02.14 ல் வழக்குகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள
TRB PG அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் 27.02.14 பிற்பகல் 2.15 விசாரணைக்கு வருகின்றன.
particulars of writs
GROUPING MATTERS

TET 2013 : district wise passed candidates PAPER 2

TET 2013 : district wise passed candidates PAPER 2
1. Chennai. 561

2. Ariyalur 361

TET 2013 : district wise passed candidates PAPER 1.

1. Chennai. 561

2. Ariyalur 219

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு :தாள் 2 ல் 25651பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது.

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க கோரி வழக்கு; 2வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்

2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உத்தரவிடக் கோரி திருவாரூரை சேர்ந்த மகேஸ்வரி மற்றும் எம்.ஆர்.சுகந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு
வந்தது.

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...

மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு?

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், மக்களவைத் தேர்தல் பணியில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு -

இன்று (26.02.2014) காலை தொடக்க கல்வி இயக்குநர் முனைவர். இளங்கோவன் அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

நாட்டின் பள்ளிகளை தரப்படுத்த தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி!

பள்ளிக் கல்வியை தரப்படுத்தும் பொருட்டு, மிகப்பெரிய அளவிலானதொரு பள்ளி தலைமைத்துவத்திற்கான பயிற்சியை, மத்திய மனிதவள அமைச்சகம் தொடங்கியுள்ளது.

TRB:TNTET-2013 Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.


Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click Here for Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks. - Click Here

GENERAL KNOWLEDGE 2

GENERAL KNOWLEDGE 1 :பூமியின் தோற்றமும் அமைப்பும்!

பேரண்டவெளியில் உள்ள 100 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளுள் (Galaxies) ஒன்றான சுழல் வடிவ பால்வெளி நட்சத்திரத் தொகுதியில் நமது சூரியக் குடும்பம் உள்ளது.

கற்றல் குறைபாடு (DYSLEXIA) சாபமல்ல வரம்

துரு துரு கண்கள் மழழை ததும்பும் சொற்கள், அத்தனை கேள்விகள், அத்தனை குறும்புகள், இப்படித்தான் தொடங்குகிறது ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் குழந்தைகளின் மீதான ஆச்சரியங்கள் குறைவதற்குள்ளாகவே அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் பற்றி பள்ளி சென்ற பின்னர் தான் தெரிந்து கொள்ள முடிகிறது.




TNPSC Latest Study material

TNPSC GROUP 1 & 2 EXAMS  Study material

GK Collection Study Materials - Click Here

If you want More TNPSC GROUP 2 EXAM COLLECTIONS - - Click Here

Thanks to Arivukkadal Padhipagam.

மார்ச் 2 அல்லது 3ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு?


            நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 2 அல்லது 3ம் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தல் 5 அல்லது 6 கட்டங்களாக நடத்தப்படும் என்றும் தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறலாம். 
 

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன.


            முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டனமுதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன வழக்குகள் அடுத்த மாதம் 5 ம் தேதிக்கு ஒத்திவக்கப்பட்டன. 
 

டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா:மார்ச், 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

 
           ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மாவட்டங்களில், மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.பின், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும்.

மாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி

 
        பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்' செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க, உத்தரவிட்டு உள்ளது. இதனால், முன்கூட்டியே வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வுத் துறையின் கிடுக்கிப்பிடியால், சில தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரின் போட்டோவுடன் கூடிய, பார்கோடு எண் கொண்ட விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு

 
     பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை, கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை, இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர். இதன்மூலம், பிரதான எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே, குளறுபடி கணக்கை, தேர்வுத்துறை துவக்கி உள்ளது.

Flash News: TET - 2013 CV Announced for Relaxation Candidates

TET - 2013 CV Announced for Relaxation Candidates

          ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களுக்கு மார்ச் - 12 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் தாளைாத் தொடர்ந்து 2 ஆம் தாளுக்கும் நடைபெறும் (2 ஆம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டி.ஆர்.பி அறிவித்துள்ளது.)

ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொடுப்போம்

 
        அந்தச் சிறுவனுக்குப் பதினோரு வயது. முகத்தில் மீசை அரும்புவதன் அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான். நல்லவேளையாகக் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மனநல ஆலோசனைக்காக என் முன் அமர்ந்திருந்தான்.

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்

     அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  

* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

           தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு

Tet Cv March 12 for Paper 1

TET 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண் சலுகை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

. 2012 தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளோம்.

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு ‍-- தின மணி


         ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு டி.இ.டி., தேர்வு எழுதலாம்

          பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும், இலவச டி.இ.டி., தேர்வு பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டிருந்தது.  

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்


          "கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், வகுப்பு களை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில், திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான, நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.
 

செய்முறை தேர்வுக்கான அறிவுரைகள்

          இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2014 - செய்முறை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் அறிவுரைகள் www.tndge.in Website-ல் வழங்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் தங்களுக்கான User Id மற்றும் Password பயன்படுத்தி இவற்றை எடுத்துக்கொள்ள இயலும்.

2014ல் நடைபெற உள்ள பொது தேர்வுகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

 
          தமிழகத்தில் 2014ல் நடைபெற இருக்கும் அரசு பொது தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 
 

10ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் வருமா? முடிவுக்கான கோப்பு, முதல்வர் மேஜையில்

 
         பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், வழக்கமான பொது தேர்வு இருக்குமா அல்லது முப்பருவ கல்வி முறையின்படி, தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுமா என்பன குறித்து, கல்வித்துறையில், பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பான கோப்பு, முதல்வரின் அலுவலகத்தில், ஆறு மாதங்களாக, கிடப்பில் உள்ளதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

"லாங் லீவ்" ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி

 
         தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக வாரக் கணக்கில், "லாங் லீவ்" போடுவதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் சிக்கல்

 
        தமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வித்துறையில் நடைமுறை சிக்கல்

 
         கல்வித்துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக குறையும்" என தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிரமம் ஆங்கிலம் படும்பாடு: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தவிப்பு

 
         கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. இதனால், பிற பாட ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை கையாளும் அவலநிலையில் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு தங்க பேனா, தங்க செயின், பைக், வழங்கி பாராட்டு விழா

 
      ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

 
           மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.
 
          பிப்ரவரி 26ம் தேதிக்கு பின் நடக்கவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் 10% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பும் அன்றைய தினமே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஒய்வு வயதை 62ஆக உயர்த்தும் கோரிக்கையும் பரிசீலினையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கு முன்னரே மேற்காணும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடைபெறும் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதால் பல்வேறு அறிவிப்புகளுக்காக அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.   

தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும்: பாலபாரதி எம்எல்ஏ பேச்சு

 
          தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று பாலபாரதி எம்எல்ஏ பேசினார்.தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்புஇணைந்து நடத்திய மாநில கோரிக்கைமாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் சனிக்கிழமை மாலை நடந்தது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன

            முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் 2 மேல்முறையீட்டு வழக்குகளும் செவ்வாயன்று ( 25.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றன.
 

TRB 2012 தமிழ்வழி பொருளாதார பாடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

          கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல், பொருளாதார பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது. இதில் பொருளாதார பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி .திருத்தி அமைத்துள்ளது

We Need Centum Scored Answer Sheets...

100 சதவீதம் பெற்ற விடைத்தாள்களின் தொகுப்பு

அன்புள்ள ஆசிரியர்களே,

          நமது பாடசாலை வலைதளம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு வினாத்தாள்களின் தொகுப்பை வழங்கி வருகிறது.

                   தற்போது 100 சதவீதம் பெறக் கூடிய மாணவர்களுக்கு உதவும் வகையில் விடைத்தாள்களின் தொகுப்பினை "Centum Scored Answer Sheets" சேகரித்து வெளியிட உள்ளோம். எனவே தங்கள் பிள்ளைகளுடையதோ அல்லது தங்கள் பள்ளி மாணவர்களுடையதோ விடைத்தாள்கள் 100 மதிப்பெண் பெற்று இருப்பின் பாடவாரியாக ஸ்கேன் செய்து நமது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இயன்றால் ஸ்கேன் செய்தவற்றை PDF Format-ல் மாற்றி தொகுத்து அனுப்பலாம்.

நமது இமெயில் முகவரி - Padasalai.net@gmail.com

தமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை!

      தமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த எண்ணிக்கை 14,841 ஆக உயர்ந்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது

          ஆசிரியர் தகுதித் தேர்வு 2012:மதிப்பெண் சலுகைக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு -இன்று விசாரணைக்கு வருகின்றது 

கணிதப்பாடத்துக்கு 25 இண்டர்னல் மார்க் வழங்கிட கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

         தமிழ்நாடு கணித முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில்ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்- மயில்சாமி அண்ணாதுரை

  சுயசிந்தனையை வளர்ப்பதில் தாய்மொழி வழிக் கல்வி பெரும்பங்கு வகிப்பதாக  இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, பூத் சிலிப் மட்டுமே அனுமதி.


       நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல¢ ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
 

விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் முடியும்


        நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணியையும், விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், 66 மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன; கடந்தாண்டை விட, 36 மையங்கள் அதிகரித்து உள்ளன. திருத்தும் பணி துவங்கி, 10 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு

 
          முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் ஸ்ரீசாய்பிரியா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்

           கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்க வந்த அவர் தினமணி நிருபரிடம் கூறியது:
 

டெய்லர்களை அழைத்து விடைத்தாளை தைக்க வேண்டும் கல்வித்துறை புது உத்தரவு

           தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.   பிராக்டிக்கல் தேர்வு அனைத்து பள்ளிகளிலும் கடந்த வாரத்துடன் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: கார் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கு 'ரூட் ஆபீசர்' பதவி

 
          பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக, கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள், "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்பட உள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தேர்வு மையத்தில், புதிய பணியிடம் ஒன்றை, அரசு தேர்வு துறை தோற்றுவித்துள்ளது.
 

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

 
           நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது.
 

பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை

           பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை: ஆர்.நடராஜ்

 
              தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந் தர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில், ஓராசிரியர் பள்ளி திட்டத்தின் 7ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
 

பிளஸ் டூ தேர்வு: தேவையான தூக்கம்... நிறைய மதிப்பெண்கள்!

         பிளஸ் டூ தேர்வு ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. இரவு, பகலாகக் கண் விழித்து மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பார்கள். எப்படியாவது நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் படாத பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ""படித்தவை நன்கு மனதில் பதிய வேண்டுமானால், தேவையான அளவுக்கு நன்றாகத் தூங்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.

SG to BT Promotion

           பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது 

Panel as on 01.01.2013 

Tamil Panel as on 01.01.2013 - Click Here
English Panel as on 01.01.2013 - Click Here
Maths Panel as on 01.01.2013 - Click Here
Science Panel as on 01.01.2013 - Click Here
Social Science (History) Panel as on 01.01.2013 - Click Here
Social Science (Geography) Panel as on 01.01.2013 - Click Here
BT Promotion JD's Covering Letter - Click Here 

 

பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு

         பிப்.25 மற்றும் பிப்.26ல் நடைபெறும் போராட்டத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு - தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரத்யேக பேட்டி

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

           தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம்

 
          தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு  ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர மாவட்டங்களில் பணி கிடைத்ததால் பதவி உயர்வை வேண்டாம் என பலர் எழுதிக்கொடுத்து சென்றனர். 
 

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்

           பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

தமிழ்வழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க தடையாக இருக்கும் சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தல்

           தமிழ்வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கத் தடையாக இருக்கும் சட்டப்பிரிவு 14ஏ-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
 

5 Years TET Relaxation கொடுத்து சம்பளம் வழங்க வேண்டும் - கோரிக்கை

      தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் 1000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 5 Years TET Relaxation கொடுத்து சம்பளம் வழங்க வேண்டும் - கோரிக்கை


பதவி உயர்வு பாதிப்பு- பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு!

 
              திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்ட  பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக கூட்டம் வள்ளியூரில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

5% Relax for 2012 TET Candidates - Request

2012 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கும் 5 சதவீத சலுகை-சட்டமன்றத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி வலியுறுதல்.

NMMS உதவி தொகை பெறுவதற்காக, ஒரு லட்சத்து 49 ஆயிரம் பேர் தேசிய திறனாய்வு தேர்வு எழுதினார்கள்.


        உதவி தொகை பெற 8–ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 மத்திய அரசு வழங்குகிறது. இந்த உதவித்தொகை 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை கிடைக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது.

           ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் 1 முதல் 10– வது வகுப்பு வரை ஆசிரியர்களாக பணிபுரிவதற்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புதிய நிலை உள்ளது. 'பி.எட்.' படிப்பை முடித்த பார்வையற்ற மாணவ– மாணவியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது.

குறுமன்' ஜாதி அந்தஸ்து குறித்த அறிக்கை : ஆர்.டி.ஓ.,க்களுக்கு அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

     பழங்குடியின, "குறுமன்' பிரிவின், சிறப்பு தன்மைகள் அடங்கிய விவரங்களை, வருவாய்  கோட்ட அதிகாரிகளுக்கு (ஆர்.டி.ஓ.,) அனுப்புமாறு, பழங்குடியின நல இயக்குனருக்கு,  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

பிளஸ் 2 பொது தேர்வு:அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது

    பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கானஅனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப்பணியில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மார்ச், 3 முதல், 25 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர்,தேர்வை எழுத உள்ளனர். தேர்வுக்கு, இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. இதனால்,தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், முழுவீச்சில் செய்து முடித்துள்ளார்.

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

Employment News: Job Highlights( 22th – 28th February 2014)


1. State Bank of India, Mumbai Name of Post – Specialist Cadre OfficersNo. of Vacancies - 393, Last Date - 06.03.2014

2. GAIL India Limited Name of Post – Manager, Dy. Manger, Sr. OfficerNo. of Vacancies - 12, Last Date - 04.03.2014

மின்வாரிய தேர்வு முடிவுகள் வெளியிட தடை நீக்கம்உயர்நீதிமன்றம் உத்தரவு

 
          மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

SSLC NOMINAL ROLL MARCH 2014 - பட்டியல் வெளியீடு

          பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் 2014ல் எழுதவுள்ள மாணவர்களுக்கான தேர்வு எண் மற்றும் பெயர் (SSLC NOMINAL ROLL MARCH 2014) பட்டியல் வெளியீடு

பொதுத் தேர்வு "ஆய்வு அலுவலர்கள் கூட்டம்"

      நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2014, மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துவதற்கான முக்கிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் "ஆய்வு அலுவலர்கள் கூட்டம்" 25.02.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

முதல்வரின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம்

         அரசாணைக்கும், முதலமைச்சர் அறிவிப்புக்கும், முர ணாக ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பார்வையற்றவர்களுக்கு மட்டும் தனித்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து செய்துஅனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் நடத்த உத்தரவிடுமாறு, தமிழக முதல் வருக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மார்ச், 3ல் துவங்கும் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சு! : தேர்வுப்பணியில் 1 லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்

 
         பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், ஒன்பது நாள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப் பணியில், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மார்ச், 3 முதல், 25 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுத உள்ளனர்.
 

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே இடைநிற்றல் உதவித்தொகை?

 
         தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பிளஸ் 2 மாணவர்களுக்கு இடைநிற்றல் கல்வி உதவித் தொகை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஆன்-லைன்' குளறுபடியை தவிர்க்க, தேர்வுத்துறை அமைத்த சிறப்பு மையங்கள்

 
         தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், "பிரவுசிங்' மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க, முதல் முறையாக, தேர்வுத்துறை, 32 மாவட்டங்களிலும், சிறப்பு மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை, மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று உள்ளது. அதே நேரத்தில், "வருமானம் போய்விட்டதே' என, "பிரவுசிங்' மையங்கள் புலம்புகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive