Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

We Need Centum Scored Answer Sheets...

100 சதவீதம் பெற்ற விடைத்தாள்களின் தொகுப்பு

அன்புள்ள ஆசிரியர்களே,

          நமது பாடசாலை வலைதளம் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு வினாத்தாள்களின் தொகுப்பை வழங்கி வருகிறது.

                   தற்போது 100 சதவீதம் பெறக் கூடிய மாணவர்களுக்கு உதவும் வகையில் விடைத்தாள்களின் தொகுப்பினை "Centum Scored Answer Sheets" சேகரித்து வெளியிட உள்ளோம். எனவே தங்கள் பிள்ளைகளுடையதோ அல்லது தங்கள் பள்ளி மாணவர்களுடையதோ விடைத்தாள்கள் 100 மதிப்பெண் பெற்று இருப்பின் பாடவாரியாக ஸ்கேன் செய்து நமது இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இயன்றால் ஸ்கேன் செய்தவற்றை PDF Format-ல் மாற்றி தொகுத்து அனுப்பலாம்.

நமது இமெயில் முகவரி - Padasalai.net@gmail.com

குறிப்பு -
  • பாடத்தில் உள்ள முழு பகுதிக்கும் ( Full Portion Test ) - 100 மதிப்பெண்ணில் நடந்த தேர்வாக இருக்க வேண்டும். காலாண்டு விடைத்தாள்கள், அலகுத் தேர்வு விடைத்தாள்களை அனுப்பக் கூடாது.
  • விடைத்தாளின் இறுதியில் மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி விவரம் மற்றும் பாட ஆசிரியர் பற்றிய விவரம் எழுதப்பட்டு பிறகு ஸ்கேன் செய்யவும்.
  • விடைத்தாள்கள் ஆங்கில வழி கல்வியிலோ அல்லது தமிழ்வழி கல்வியிலோ இருக்கலாம்.
  • பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை மட்டும் அனுப்பவும்.
                    அரசு பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ - மிக, மிக நன்றாக பயிலக்கூடிய மாணவர்களுக்கு உதவும் நோக்கில் மாதிரி விடைத்தாள் தொகுப்பினை உருவாக்கிட இருக்கும் நமது புதுமையான முயற்சிக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

         பாடசாலை வலைதளத்துடன் இணைந்து செயல்பட இருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றிகள் பல தெரிவித்துக்கொள்கிறோம்!.

நமது இமெயில் முகவரி - Padasalai.net@gmail.com




5 Comments:

  1. good job admin..............

    ReplyDelete
  2. I WANT MATHS CENTUM ANSWER SHEET SIR

    ReplyDelete
  3. Can any one publish English I and II Top scorer's Ans Script copy...

    ReplyDelete
  4. I want tamil centum answer sheets

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive