60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும்: பாலபாரதி எம்எல்ஏ பேச்சு

 
          தமிழ்வழிப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு இடது சாரி அமைப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று பாலபாரதி எம்எல்ஏ பேசினார்.தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்புஇணைந்து நடத்திய மாநில கோரிக்கைமாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் சனிக்கிழமை மாலை நடந்தது.

          மாநாட்டிற்கு திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஆண்டனி டிவோட்டாதலைமை வகித்தார். திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ்பால்சாமி தொடக்க வுரையாற்றினார். மாநாட்டில் தமிழ் மொழியும் தமிழ் வழி கல்வியும் என்ற தலைப்பில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க சட்ட ஆலோசகர் சகாயராஜ், சட்டப்பிரிவு 14-ஏ உருவான வரலாறு என்ற தலைப்பில் தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப்பேரவை அருள்சாமுவேல், ஆசிரியர் போராட்ட வரலாறும் அவலநிலையும் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் பெஸ்கி, பள்ளிகளின் புள்ளிவிவரம் என்ற தலைப்பில் தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு கௌரவ தலைவர் பாண்டியன் ஆகியோர் பேசினர்.
 
             திருச்சி மண்டல தென்னிந்திய திருச்சபை ஆயர் பால்வசந்தகுமார், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி கழக மாநில செயலாளர் அருளப்பன், தமிழ்நாடு தமிழ்வழி பள்ளிகள் நிர்வாகிகள் கூட்டமைப்பு மாநில தலைவர் முஸ்தபாகமால், சேர்மத்தாய் வாசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையுரை ஆற்றினர். மாநாட்டில் லிங்கம் எம்.பி, பாலபாரதி எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
           பாலபாரதி எம்.எல்.ஏ பேசிய தாவது: தமிழ் வழிகல்வி, ஆரம்பப் பள்ளிக்கூடம் உள்பட நம்முடைய மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பள்ளி உருவாக்கவேண்டும் என்று சொன்னால் அது மாநில அரசின் விருப்பத்தில் செய்யமுடியாது. கல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை கட்டவிழ்த்து விட்டது மத்திய அரசுதான். விடுதலை போராட்டத்தின் கிறிஸ்தவ சமய அமைப்புகள்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சிறுபான்மையின ருக்கும் கல்வி கொடுத்தவை என்றுபெருமையோடு பார்க்க முடியும்.
 
           நாடுவிடுதலை பெற்றபின் கல்வியை சேவையாக செய்ய வந்த சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் அங்கீகாரத்தை அரசு வழங்கக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு கால கட்டத்தில் கல்வியின் கண்ணை திறந்துவிட்டவர்கள் சிறுபான்மை பள்ளிகள் என்பது வரலாற்றுஎதார்த்தம். ஏழை வீட்டுக்குழந்தைக ளுக்கு கல்வி கொடுக்கவேண்டும் என்று கல்வி சேவை செய்த நம்முடைய தமிழ்வழிக்கல்வி பள்ளிக்கூடங்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசால் ஆரம்பப் பள்ளி கல்விக்கு 10 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட நிதிகூட இப்போது ஒதுக்கப்படவில்லை.
 
              ஆனால் தமிழக அரசோ ஆரம்பக் கல்விக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுநல்ல விஷயம். இதோடுதான் தமிழ்வழி பள்ளி ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதை நினைத்துபார்க்கிறோம். 1998ல் போடப்பட்டிருக் கிற சட்டத்தில் 14ஏ என்ற பிரிவை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். அந்தபள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும். சரியான ஊதியம் என்ற கோரிக்கையை சட்டசபையில் நிச்சயமாக நாங்கள் வலியுறுத்துவோம். இது நம் வாழ்க்கைக்கான போராட்டம். நம் உரிமைக்கான போராட்டம்.
 
           உங்கள் கோரிக்கைகளுக்காக இடதுசாரி தோழர்கள் உங்களோடு உறுதியாக இருப்போம் என்றார்.மாநாட்டில் தமிழ்வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளி அனைத்து ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் உடனடியாக அரசு ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழகத்தில் அனைத்து தமிழ்வழி சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் முழுமையான ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதால் இத்தகைய பள்ளிகளில் ஆசிரியர்களை அரசு ஊதியத்தில் நியமனம் செய்ய ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து முழுமையான விதிவிலக்கு அளிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு தமிழ்வழிப்பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் செபாஸ்டின் வரவேற்றார். முடிவில் மாநில பெருளாளர் மரியசூசை நன்றி கூறினார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive